திராவிட கூட்டத்தின் நரித்தந்திரம்
தமிழ்நாட்டில் தற்போது திராவிடத்தின் வழித்தோன்றல் நாங்கள் என்று திராவிடத்தின் பெருமையும் நாத்திகமும் பேசி வந்த திமுக தற்போது ஹிந்து வாக்கு வங்கியை குறிவைத்து ஆடிவரும் நரித்தந்திரம் பற்றி தற்போது பார்க்கப் போகிறோம்.
திமுக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து நாத்திகமும் ஹிந்து எதிர்ப்பும் தங்களது முக்கிய கொள்கையாகவும் சிறுபான்மையினருக்கு நாங்கள் காவலர்கள் என்ற பிம்பத்தையும் கட்டமைத்து வந்தனர்.
சமீப காலமாக இந்து மக்களிடம் இவர்களின் பித்தலாட்டம் எடுபடவில்லை. அது மட்டுமல்லாமல் பெருமளவில் ஹிந்து வாக்கு வங்கியும் உருவாகி வருகிறது.
இதனால் கலக்கமடைந்த திமுக தற்போது ஒரு புதிய நாடகத்தை தொடங்கியுள்ளது. திமுகவின் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி இருவரும் நாத்திகம் பேசிக்கொண்டு சிறுபான்மையினரின் கால்களை பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டுள்ளனர். ஆனால் ஸ்டாலின் மனைவியும் அவரது மருமகனும் ஹிந்து கோயில்களுக்கு செல்வதையும் அங்கு பூஜை, யாகங்கள் செய்வதையும் வேண்டுமென்றே ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்தியாக்கி நாங்களும் ஹிந்து பற்றாளர்கள் தான் என்பது போல காட்டிக் கொள்ள அவர்கள் செய்யும் நரி தந்திரம் இது.
உண்மையில் அவர்களுக்கு ஹிந்து மதத்தின் மீது பற்றோ அல்லது பக்தியோ துணியும் இல்லை என்பதே உண்மை. இது அவர்கள் ஹிந்து வாக்கு வங்கியை கவர்வதற்காக செய்யும் ஒரு வித நாடகமாகும். ஏனெனில் ஸ்டாலின் மனைவி துர்காவானாலும் சரி அல்லது சபரீசன் ஆனாலும் சரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோவில்களுக்குச் சென்றதாக ஏதாவது செய்தியோ அல்லது புகைப்படமோ வெளியாகி இருக்கிறதா என்று பார்த்தீர்களானால் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. தற்போது இதனை அவர்கள் செய்ய காரணம் ஹிந்து மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்ற சிந்தனையில் மட்டுமே என்பது தெளிவாகும். எந்த காலத்திலும் திமுக ஒரு ஹிந்து விரோத சக்தி என்பது அனைவருக்கும் தெரியும்.
திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே சிறுபான்மையினர்களில் ஒரு பிரிவான கிறிஸ்தவ பிரிவில் கன்னியாகுமரியில் உள்ள ஜார்ஜ் பொன்னையா என்ற ஒரு பாதிரியார் திமுகவின் வெற்றிக்கு காரணம் கிறிஸ்தவ வாக்குகள் தான் என்றும் நாங்கள் போட்ட பிச்சையில் தான் திமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்தது என்றும் தெளிவாகப் பேசினார். ஆனால் அவரது பேச்சுக்கு திமுக இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இதிலிருந்து அவர்கள் எப்போதும் சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பெறுவதற்காக அவர்கள் செருப்பால் அடித்தாலும் வாங்கிக் கொள்ளும் மனநிலையிலேயே இருப்பது போல் தெரிகிறது.
தற்போது திமுக ஹிந்து மக்களை மட்டும் அல்லாமல் சிறுபான்மை இன மக்களையும் வேடம் போட்டு ஏமாற்றி வருகிறது என்பதை உண்மை.
இஸ்லாமிய கிறிஸ்தவ மக்களுமே தற்போது வந்துள்ள ஸ்டாலின் தலைமையிலான அரசின் மீது அதிரப்பிலேயே உள்ளனர். மேலும் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை என்றும் தங்களை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர் என்பதையும் சிறுபான்மையின மக்கள் தற்போது உணர துவங்கியுள்ளனர்.
அது மட்டும் இல்லாமல் திமுகவில் சில குறிப்பிட்ட தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மட்டுமே குறுநில மன்னர்கள் போல் வாழ்ந்து வருகின்றனர் என்பதையும் சாமானிய மக்கள் தற்போது புரிய துவங்கியுள்ளனர்.
இதனால் வரும் காலங்களில் திமுகவின் சரிவும் அழிவும் நிச்சயம் என்று அரசியல் நோக்கர்களால் கணிக்கப்படுகிறது.
#Pothigaitimes #Political #News #Today #Tamil #Trending

Comments
Post a Comment