Posts

Showing posts with the label #நடிகர்

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

Image
    நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க மெகா ஹிட் வெற்றி படங்களில் ஒன்று படையப்பா.  தற்போது ரஜினி அவர்கள் தனது  பிறந்தநாள் அன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் படையப்பாவின் இரண்டாம் பாகம் தயாராக விவாதங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் அந்தப் படத்திற்கு நீலாம்பரி என்று பெயர் சூட்ட இருப்பதாகவும் இருப்பதாகவும் விரைவில் முறையான அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிவித்தார்.

திரை உலகம் கொண்டாட மறந்த நாயகன் மாதவன்

Image
  இந்திய திரை உலகில் மோதிரக் கையால் குட்டு வாங்கி பிரபல இயக்குனர் மணிரத்தினத்தின் அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் திரு மாதவன் அவர்கள்.  அதன் பின் அவர் மின்னலே ரன் போன்ற ரொமான்டிக் படங்களில் வெற்றிக்கொடி நாட்டில் வந்தார். இப்படி சாதாரண கமர்சியல் படங்களில் ஆரம்பித்த அவருடைய திரை பயணம் பின்னர் மெல்ல மாற ஆரம்பித்து இறுதிச்சுற்று, ராக்கெட்டரி மற்றும் துரந்தர் என இந்திய திரையரங்க மட்டுமல்லாமல் உலக திரைத்துறையை திரும்பிப் பார்க்கும் தரமான படங்கள் பக்கம் தன் கவனத்தை செலுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.   தற்போதைய படங்களை தேர்ந்தெடுக்க அவர் செலுத்தும் தனி கவனம் மற்றும் அவரது நடிப்பு போன்றவை அனைவராலும் போற்றப்பட்டு வருகிறது.  நமது தமிழ் சினிமா உலகில் பல குப்பை படங்களை கமர்சியல் படங்கள் என்ற பெயரில் கொடுத்த விஜய் போன்ற ஹீரோக்களை எல்லாம் கொண்டாடும் திரையுலகம் நல்ல தரமான உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட சிறந்த படங்களை உருவாக்கும் மாதவன் போன்றவர்களை கொண்டாடாமல் இருப்பது தமிழ் திரை உலகத்திற்கு தான் இழப்பை தவிர மாதவன் போன்றவர்களுக்கு அல்ல என்பதை உணர வேண்டும்...

அறிவு ஜீவி அடி முட்டாள் ஆன கதை

Image
  நமது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக பல ஆண்டுகள் திரையுலகல் மின்னி வந்த திரு கமலஹாசன் அவர்கள் சினிமாவில் நடிப்பு, டைரக்ஷன், தயாரிப்பு, பாடகர் என பன்முகத்திறமை கொண்ட ஒரு சிறந்த கலைஞனாக அனைவராலும் அறியப்பட்டவர். சினிமாவில் அவருக்குத் தெரியாத துறைகளை இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து துறைகளிலும் பல விஷயங்களை கற்றுத் தேர்ந்தவர். பல மொழிகளும் அறிந்தவர். தென்னிந்திய சினிமா முதல் பாலிவுட் வரை தன் வெற்றி கொடியை நாட்டியவர். சினிமாவில் அவர் ஒரு அறிவிஜீவி என்பதற்கு மாற்று கருத்து இல்லை.  அதனால் தானோ என்னவோ அரசியலிலும் நாம் அதே போன்று எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்று எண்ணி ஓவர் கான்ஃபிடன்ஸ் உடன் மக்கள் நீதி மையம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். தொடங்கிய புதிதில் வீராவேசமாக பல கருத்துக்களை தெரிவித்தார். குறிப்பாக அவரது தேர்தல் பிரச்சார விளம்பரத்திலேயே குடும்ப அரசியல், ஊழல், நிர்வாகத் திறமையின்மை போன்ற பல விஷயங்களுக்கு எதிராக கோபப்பட்டு தன் சின்னமான டார்ச் லைட்டை டிவியின் மேல் போட்டு உடைத்தார்.   ஆனால் அவரது அரசியல் எதிர்ப்புகள் எல்லாம் ஒரே தேர்தலில் காணாமல்...

கார் ரேஸ் போட்டியில் அஜித் குமாரின் கார் பழுதானது

Image
 மலேசியாவில் நடைபெற்று வரும் ALM serious கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றார். அப்பங்கயத்தின் பொழுது நடிகர் அஜித்குமாரின் கார் பழுதானதால் பாதியிலேயே போட்டியை விட்டு விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இது தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் இதுபோன்ற நிகழ்வுகள் மனதை தளர செய்வதாகவும் எனினும் தொடர்ந்து போட்டிகள் அது எதிர்நோக்கி உள்ளதாகவும் கருத்து தெரிவித்தார்.

திரையரங்குகளில் இன்றைய பரிதாப சூழ்நிலை

Image
 மக்களின் பொழுதுபோக்கு சாதனங்களின் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது சினிமா. குறிப்பாக தமிழகத்தில் மக்கள் சினிமா உடன் ஒன்றி போய் உள்ளதால் தான் தங்களை ஆட்சி செய்யும் பொறுப்பை கூட நடிகர்களுக்கு அளித்தார்கள்.  வரலாற்றுத் திரைப்படம், விடுதலை போராட்டங்களை மையமாகக் கொண்ட திரைப்படங்கள், நகைச்சுவை திரைப்படங்கள், திரில்லர் படங்கள், குடும்ப படங்கள் மற்றும் பக்தி படங்கள் என பலதரப்பட்ட சினிமாக்களை வெற்றிகரமாக திரையிட்ட தமிழ் திரை உலகம் தற்போது மோசமான நிலையில் தள்ளாடி வருகிறது.  இந்திய திரைத்துறையிலே தற்போது வருகின்ற படங்களில் பெரிதாக மக்களை கவரும் வகையில் இல்லை என்ற கருத்து நிலவுகிறது.  இதனால் திரையரங்குகளில் முன்பு போன்று குடும்பங்களாகவும் நண்பர்கள் சேர்ந்து பெரிய குழுக்களாக திரைப்படங்களை பார்ப்பது குறைந்துவிட்டது. தற்போது வரும் ரத்த வெள்ளத்தில் அடிக்கடி வெட்டு குத்து துப்பாக்கிச் சண்டையுடன் உள்ள படங்களை பார்த்து வருகின்றனர். இதனால் திரையரங்குகளில் கூட்டம் குறைவாக உள்ளது.  அது மட்டுமல்லாது திரையரங்குகளை நவீனப்படுத்துகிறோம் என்ற போர்வையில் பல அதிநவீன வசதிகளும் குளிர்சாதன வசதி ...

நடிகர் விஜயின் ஊமைக்குத்து அரசியல்

Image
  நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தற்போது அரசியலில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் நீட் விளக்கு, சிறப்பு வாக்காளர் திருத்தச் சட்டம் போன்றவற்றை வைத்து அரசியல் செய்து வந்தார்.  ஆனால் தமிழக அரசின் நிர்வாக திறமையின்மை, அந்நிய முதலீடு இருப்பதில் நடந்த குளறுபடிகள், தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் பாலியல் வன்கொடுமைகள், வேங்கை வெயில் பிரச்சனை, கனிம வள கொள்ளை போன்ற எந்த பிரச்சனையைப் பற்றி பேசாமல் திமுகவுக்கு முட்டுக்கொடுத்து அரசியல் செய்து வரும் நடிகர் விஜய் தற்போது சிறுபான்மை வாக்குகளை குறிவைத்து காய் நகர்த்தி வருவதால் தற்போது வெகுவாக பேசப்பட்டு வரும் திருப்பரங்குன்றம் பிரச்சினையும் தனது கருத்தை சொல்ல வக்கில்லாமல் திராணியில்லாமல் அமைதியாக பனையூரில் பதுங்கி இருப்பதாக தகவல் வந்துள்ளது.  இவரை களம் இறக்கீடு கிறிஸ்தவ மிஷனரி சிறுபான்மை மக்களும் பின்னாலிருந்து செயல்படுவதால் திருப்பரங்குன்றத்தில் நடந்த அநீதியை பற்றி பேசினால் இவரது அரசியல் முடிவு வந்துவிடும்  என்று அஞ்சி நடுங்கி பேசாமல் இருக்கிறார்.  மேலும் தற்போது சிறுபான்மை மக்களை பொருத்தவரை ஸ...

பாண்டிச்சேரியை குறி வைக்கிறாரா விஜய்

Image
தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி கிடைக்காத நிலையில் பாண்டிச்சேரியில் தனது பிரசாரத்தை பயன்படுத்தி நடிகர் திலகம் எம்ஜிஆர் போன்று அவர் பாணியில் முதலில் பாண்டிச்சேரியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நடிகர் விஜய் செயல்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.  நடிகர் விஜய் அவர்களோடு இருக்கும் திரு புஸ்ஸி ஆனந்த் அவர்கள் ஏற்கனவே பாண்டிச்சேரி எம்எல்ஏவாக இருந்தவர். பாண்டிச்சேரி அரசியல் குறித்து சில தகவல்களை அறிந்து வைத்திருப்பதோடு அங்குள்ள அரசியல் தலைவர்களின் வட்டாரத்தில் அவருக்கு பழக்கம் உள்ளது.  இதனால் அங்குள்ள அரசியல் சூழ்நிலைகளை பயன்படுத்தி அங்கு ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி வரும் சட்டமன்றத் தேர்தலில் பாண்டிச்சேரியில் ஆட்சியைப் பிடிப்பது தமிழக வெற்றிக் கழகத்தின் எண்ணமாக உள்ளது என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் சரியா?

Image
  தமிழகத்தில் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்பும் மனநிலையில் உள்ளனர் என்று பரவலான கருத்து நிலவி வரும் நிலையில் நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.  தமிழக வெற்றி கழகத்திற்கு மக்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பும் உள்ளது. கரூரில் நடைபெற்ற சம்பவத்திற்கு பின் அமைதி காத்து வந்த தமிழக வெற்றி கழகத்தினர் தற்போது லேசாக வெளிவந்து மீண்டும் தங்கள் அரசியலை தொடங்கியுள்ளனர்.   தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய தலைவர்கள் நடிகர் விஜய் புஸ்சி ஆனந்த் உட்பட பலரும் கரூர் சம்பவத்திற்கு பின் ஒளிந்து கொண்டனர். தற்போது அதன் தாக்கம் குறைந்து சகஜ நிலைக்கு திரும்பிய பின் தங்களின் அரசியலை தொடர ஆரம்பித்துள்ளனர்.  இந்நிலையில் அவர்கள் செய்யும் அரசியல் என்பது திமுகவின் காப்பியாகவே உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். திமுக தங்கள் அரசியலில் எப்படி முன்னெடுத்துச் செல்கிறதோ அதேபோன்று  தமிழக வெற்றி கழகத்தின் அரசியலும் செயல்படுகிறது.  குறிப்பாக மத்திய அரசை காரணம் இல்லாமல் எதிர்ப்பதிலும், நீட் தேர்வு விவகாரத்திலும், சிறப்பு வாக்க...

ஓடும் குதிரையில் பயணிக்கிறாரா ரஜினிகாந்த்?

Image
  தமிழ் சினிமா உலகின் முடி சூடா மன்னனாக விளங்கும் திரு ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே மிகப்பெரும் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களை அழைத்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது வழக்கமாகக் கொண்டுள்ளார்.  தற்போது கமலஹாசன் இயக்கத்தில் திரு ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் ஒரு படம் உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்தன. அதை திரு சுந்தர் சி அவர்கள் இயக்குவதாகவும் தகவல்கள் பரவியது. அந்தப் படத்தின் கதை பற்றிய விவாதங்களும் நடந்து வந்ததாக கூறப்பட்டது.  ஆனால் தற்போது திரு சுந்தர் சி அவர்கள் அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல்கள் வருகிறது.  கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினிகாந்த் அவர்கள் பெரும் வெற்றி படங்களை கொடுத்த இளம் தலைமுறை இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வந்தார். காரணம் அவர்கள் இளம் தலைமுறை என்ன ஓட்டங்களை சரியாக புரிந்து வைத்து அதற்கேற்றார் போல் படங்களை உருவாக்குவார்கள் என்ற எண்ணத்தில் அப்படி செயல்பட்டதாக கூறப்படுகிறது.  ஆனாலும் தற்போது வரை அவர் நடித்த படங்களில் சமீபத்திய படங்கள் பலவும் பெரிய வெற்றியை பெற முடியவில்லை. தற்போதைய இளம் தலைமுறை இயக்குனர்களை விட சிறந்த...

தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்காலம்

Image
  நடிகர் விஜய் அவர்கள் தனது அரசியல் ஆசையின் காரணமாக தமிழக வெற்றி கழகம் என்ற ஒரு புதிய கட்சியை தொடங்கினார். ஆரம்ப காலத்தில் அவருக்கு மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கையில் ஓரளவுக்கு ஆதரவும் இருந்தது.  இதனால் அவர் நடத்தும் கட்சிக் கூட்டங்கள் மாநாடுகள் போன்றவற்றுக்கு மக்கள் கூட்டம் திரளாக வரத் தொடங்கியது. இந்நிலையில் கரூரில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவத்திற்கு பின் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பலரும் ஓடி ஒளிந்து கொண்டனர். அதுமட்டுமல்லாமல் அக்கட்சியின் நிறுவனத் தலைவராக உள்ள நடிகர் விஜய் அவர்களும் தனது பனையூர் இல்லத்திலேயே இருந்தார். அவர்களுக்கு திடீரென்று ஒரு பிரச்சனை வரும்போது அதை எப்படி அரசியல் ரீதியாக கையாள வேண்டும். சிக்கலான சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற அனுபவமும் சிந்தனையும் இல்லை. மேலும் விஜய் அவர்கள் தனது வாழ்நாளில் பெரும் பகுதியை மற்றவர்களை சார்ந்து வாழ்ந்து வந்துள்ளார். ஆரம்ப காலத்தில் சினிமாவில் நடிக்கும் பொழுது தனது தந்தையின் நிழலிலேயே இருந்தார். அதன் பின்னர் பலரும் அவரைக் கைப்பாயாக உபயோகிக்க தொடங்கி விட்டனர். இது அவரால் உணரவும் முடியவில்லை. இ...

சமூக அக்கறை இல்லாதவரா? நடிகர் ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த்

Image
தமிழ் சினிமாவில் பலரும் கதாநாயகனாக நடித்து வந்தாலும் வெகு சிலரே மக்களின் அபிமான கதாநாயகர்களாக அறியப்படுகின்றனர்.  அவ்வாறு தமிழ் சினிமாவில் பெரிதாக ரசிகர் கூட்டத்தைக் கொண்ட பலர் இருந்தாலும் அவர்களில் முக்கியமானவராக கருதப்படுபவர் திரு ரஜினிகாந்த் அவர்கள்.  இவர் கடந்த பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருவதால் தலைமுறைகளை தாண்டி சூப்பர் ஸ்டாராக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். தமிழகத்தில் இவர் கூறிய கருத்துகளால் கடந்த காலங்களில் அரசியல் மாற்றமே உருவாகியுள்ளது. இவர் அரசியலில் வந்து குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று ஒரு தரப்பு மக்களால் நம்பப்பட்டது. அவர் மீது மக்களுக்கு அப்படி ஒரு அபிமானம் இருந்து வருகிறது.   ஆனால் அவர் தனக்கு அரசியல் சரிவராது என்பதும் அரசியலில் பல நேர்மை மற்ற வேலைகளும் குள்ளநரித்தனங்களும் செய்ய வேண்டியது இருக்கும் என்பதும் அதுமட்டுமல்லாது தன்னை கவிழ்க்க மிகப்பெரிய சாதிகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து பல அரசியல் கட்சிகள் மற்றும் முக்கிய புள்ளிகள் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்தார். அதில் பலரும் ரஜினி பயந்துவிட்டதாகவும் கோழை ...

விஜயின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

Image
 தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் தனது கட்சியின் பிரச்சார பயணத்தின் போது கரூரில் நடைபெற்ற துயரப் சம்பவத்திற்கு பின்னர் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் அமைதியாக இருக்கிறார். இந்நிலையில் கரூர் சம்பளத்திற்கு தார்மீக ரீதியில் விஜய் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஏனெனில் அவர் பிரச்சாரக் கூட்டத்திற்கு பல மணி நேரம் தாமதமாக வந்ததும் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யாததுமே இது போன்றதொரு பேரைச் சம்பவத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அது தவிர மற்ற பல காரணங்கள் இருந்தாலும் இது தமிழக வெற்றி கழகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி என்பதால் அவர்களுக்கே பொறுப்பு கூடுதல் என்பது அனைவரும் அறிந்தது. இந்த கரூர் சம்பவத்திற்கு பின் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பலரும் தலைமறைவாக உள்ளனர். அது மட்டுமல்லாது பலர் கட்சியை விட்டு வெளியேறி விட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இதன்பின் விஜயின் எதிர்காலம் என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது.  இனி விஜய் அவர்கள் அரசியலில் வேறு ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணியுடன் போட்டியிட்டால் மட்டுமே ஓரளவு வாக்குகளை பெற முடியும். எனவே அவர் ஏதாவது ஒரு அரசியல் கட்சியுடன் கூட்டணி வைக்க முடிவ...