தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர், ஆன்லைனில் போலியான டெலிகிராம் ஐடி மற்றும் போலியான வெப்சைட் ஆகியவற்றை உருவாக்கி காயின் பிட்டிங் டாஸ்க் ( Old Coin Purchase Task) செய்தால் லாபம் கிடைக்கும் என்று கூறி முதலீடு செய்ய வைத்து போலியாக வாலட்டில் பணம் வரவு வைக்கப்பட்டதாக ரூ.5,83,007 பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியது தொடர்பாக, தென்காசி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், எதிரிகள் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு G.S.மாதவன்T.P.S., அவர்களின் அறிவுறுத்தலின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜீலியஸ் சீசர் அவர்களின் தலைமையில், காவல் ஆய்வாளர் திருமதி.வசந்தி மற்றும் சைபர் குற்றப்பிரிவு காவலர்கள் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்று, மேற்படி குற்றங்களில் ஈடுபட்ட ஆறு எதிரிகள் கைது செய்து அவர்களிடமிருந்து 10 மொபைல் போன்கள், 33 சிம் கார்டுகள், 44 வங்கி கணக்கு விவரங்கள...