கலாச்சாரத்தை சீரழிக்கும் தொலைக்காட்சி

 


மக்களின் பொழுதுபோக்கு சாதனங்களில் முக்கியமான ஒன்றாக திகழ்வது தொலைக்காட்சி.

 தற்போது பல தொலைக்காட்சி தனியார் தொலைக்காட்சியில் நிறுவனங்கள் செயற்கைக்கோள் மூலமாக தங்கள் ஒளிபரப்பை செய்து வருகின்றன.

 அப்படி நடத்தப்படும் தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் டிஆர்பி ஒன்றையே குறிக்கோளாக வைத்து மக்களுக்கு இதுபோன்ற கருத்துக்


களை தெரிவிக்க வேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல் தங்கள் சுயநலத்திற்காக கேவலமான சில நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

 குறிப்பாக தற்போது பிரபலமாகி வரும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மிகவும் அருவருக்கத்தக்க வகையிலும் மக்களின் எண்ணங்களை வக்கிரமாக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

 தன் வீட்டில் இருந்து கொண்டு அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை ஜன்னல் வழியாக பார்ப்பது போன்ற கேவலமான நிகழ்ச்சி. இதையும் ஒரு கூட்டம் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் இவர்கள் தேர்ந்தெடுக்கும் ஆட்கள் வேண்டும் என்று கருத்து வேறுபாடுகள் வரும் வகையிலும் மோதல்கள் வரும் வகையிலும் தேர்ந்தெடுப்பதோடு மட்டுமல்லாமல் சில சமயங்களில் அதற்கு இவர்களே சாட்சி அமைப்புகளையும் ஏற்படுத்தித் தந்து நிகழ்ச்சிகளை நடத்துவதாக குற்றச்சாட்டுகளும் வந்துள்ளது.

 அடுத்ததாக தொடர் நாடகங்கள் என்ற பெயரில் பல குடும்பங்களைக் கெடுப்பது போன்ற குடும்ப கட்டமைப்புகளையும் உறவுமுறைகளையும் கெடுப்பது போன்றும் எல்லா தொடர் நாடகங்களிலும் உளவியல் ரீதியாக மக்களை பாதிக்கும் வகையில் காட்சியை அமைப்புகளை உருவாக்குகின்றனர். தற்போதுள்ள இயக்குனர்களும் கதாசிரியர்களும் இவ்வளவு கேவலமான கற்பனை வளத்தோடு இருப்பது வருந்தத்தக்கது. பழைய தொடர நாடகங்களில் திரு கே பாலச்சந்தர் அவர்களின் கையளவு மனசு, மர்மதேசம், ரமணி vs ரமணி போன்ற நல்ல தொடர் நாடகங்கள் மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்காகவும் நல்ல கதை அம்சம், திரில்லர், காமெடி என அனைத்து அம்சங்களையும் சிறப்பாக கையாண்டு இருக்கிறார்கள். அதுபோன்று தற்போது ஒரு தொடர் கூட feel good leval இல்லை.

 அடுத்ததாக ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் இந்த தொலைக்காட்சி நிலையங்கள் நடத்தும் நிகழ்ச்சி ஆனது கலாச்சார சீரழிவு உச்சமாக உள்ளது. வயதானவர்கள் வரை குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்க முடியாத அளவிற்கு அருவருக்கத்தக்க செயல்களிலும் வசனங்களிலும் மக்களை சிரிக்க வைக்கிறேன் என்று ஆபாச வார்த்தைகளால் நிகழ்ச்சியை நடத்துகின்றனர். அதுமட்டுமல்லாமல் செயற்கையாக இவர்கள் ஆகவே ஒரு ஆணையும் பெண்ணையும் பாடல்கள் மூலம் காதல் செய்வது போல இணைத்து பேசி தங்கள் டிஆர்பிக்காக பலரின் வாழ்க்கையும் வீணடித்து வருகின்றனர்.



 திரைப்படங்களுக்கு சென்சார் போர்டு உள்ளது போன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் இதுபோன்று மத்திய அரசு ஏதாவது ஒரு கட்டுப்பாடுகளை கொண்டு வந்து வழிமுறைப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?