"DHURANDAR", பாகிஸ்தான் கராச்சியின் இரண்டு ரவுடி கும்பல் ,. ISI இந்தியாவில் செய்ய நினைக்கும் அத்துனை நாசவேலைக்கும் இந்த கும்பலை எப்படி பயன்படுத்தியது , நமது spy கள் இவர்களுள் ஊடுருவி ஒவ்வொரு information யையும் நமது அரசாங்கத்துக்கு தெரிவித்தும் , தடுக்க முடியாமல் போன பல தாக்குதல்கள் .. இது தான் கதை ... இல்லை இது கதை இல்லை நடந்த ஒவ்வொன்றையும் பற்றிய action replay . முதல் காட்சியே கத்தார் விமானக் கடத்தல் . கடத்தல்காரர்களுடன் நேரடி பேச்சு வார்த்தையில் 'அஜித் தோவல்' . அஜித் தோவலாக மாதவன் . அப்படியே அச்சு அசலாக அஜித் தோவலே .. விமானத்தினுள் நுழையும் போதே தீவிரவாதிகள் ஒருவனைக் கொன்ற ரத்தக்கறை, paasanger களின் கிலி படர்ந்த முகம் . மூன்று தீவிரவாதிகளையும் ரொக்க பணத்தையும் அவர்களிடம் ஒப்படைக்க போகும் வலி என மாதவன் படம் முழுவதும் Rocks ... பாகிஸ்தானின் கராச்சி ... ரவுடியிஸத்தின் உச்சக்கட்ட காலகட்டம் . அந்த கேங்கில் போய் சேர்வதற்கு இந்திய ராணுவத்தை சேர்ந்த ரன்வீர் சிங் ஒரு பலூச்சாக தன்னை அடையாளப்படு...