தென்காசி கொட்டா குளத்தின் பரிதாப நிலை
தென்காசி மாவட்டம் சுமந்துபுரம் ஊராட்சி கொட்டாக்குளம் பஞ்சாயத்து உட்பட்ட கொட்டா குளம் நீர்நிலை தற்போது சுகாதார சீர்கேடுக்கு வழிவகுக்கும் வகையில் மிக மோசமாக உள்ளது.
குளக்கரை பகுதியில் குப்பை குளங்களும் மது பாட்டில்களும் கொட்டிக் கிடக்கின்றன. சில சமயங்களில் துர்நாற்றமும் வருகிறது. மேலும் குளத்தில் நீர்நிலை என் மீது பெருமளவில் அமளிச் செடிகள் சூழ்ந்துள்ளது. நீர்நிலை முழுவதுமே கழிவுநீர் போல் காட்சி அளிக்கிறது.
அது மட்டுமல்லாது குளக்கரை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகிறது. நீர்நிலை ஆக்கிரமிப்பு என்பது தென்காசி பகுதியில் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. இதே நிலை நீடித்தால் நமது பகுதியில் பெய்யும் பெருமழைகளில் சில ஆண்டுகளில் சென்னை போல் இங்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் வர வாய்ப்புள்ளது.
தற்போது நடு பல்க் சந்திப்பு பகுதியில் மழை நீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இதற்கு அங்குள்ள குளத்தின் கரை மேல் உள்ள ஆக்கிரமிப்புகளை காரணம்.
இனியும் தென்காசி மக்கள் விழித்துக் கொண்டு இந்த ஆக்கிரமிப்புகளை பற்றிய கேள்வி எழுப்பாமல் நீர்நிலை மாசு விடுவது பற்றி கவலைப்படாமல் இருந்தால் உங்கள் அடுத்த தலைமுறை இங்கு வாழ முடியாத நிலை ஏற்பட்டால் கூட ஆச்சரியம் இல்லை.




Comments
Post a Comment