தமிழகமெங்கும் சாலைகளின் அவலநிலை
தமிழகத்தில் தற்போது எல்லா இடங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மக்கள் தங்கள் அன்றாட வேலைகள் மற்றும் பள்ளி செல்லுதல் போன்ற பல காரணங்களுக்காக தினசரி வெளியே சென்று வரும் நிலையில் நமது தமிழ்நாட்டின் பெரும்பாலான சாலைகள் வயல்வெளிகளைப் போல் சேரும் சகதியும் ஆக மழை நீரோடு சேர்ந்து கழிவு நீரும் சாலைகளில் தேங்கியுள்ளது. இதில் பயணிப்பதால் பலருக்கும் பலவிதமான நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் சாலைகளில் உள்ள பள்ளமேடுகள் நீர் நிரம்பியுள்ளதால் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் பலரும் விபத்துக்குள்ளாகும் நிகழ்வுகளும் அன்றாடம் நடைபெற்று வருகிறது. திராவிட மாடல் ஆட்சி என்று பெருமை பேசும் இந்த ஆட்சியாளர்கள் கடந்த நான்கரை வருடங்களாக தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்கள் எதிலும் சாலைகளை சிறப்பாக சீரமைத்ததாக ஒரு தமிழக சாமான் என் கூட தெரிவிக்கவில்லை. சில சாலைகள் போடப்பட்டாலும் கூட அவை தரத்தில் மிக மோசமாகவும் ஒரு மலைக்கு கூட தாங்காத அளவிற்கு தகுதியற்றதாக உள்ளது. இதற்கு நாம் ஆட்சியாளர்களை குறை சொல்லி ஒன்றும் பிரயோஜனம் இல்லை. இலவசத்திற்காகவும் காசுக்...