உங்கள் பகுதியின் வேட்பாளர் எப்படி இருக்க வேண்டும்?
தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உங்கள் பகுதியில் நல்ல வேட்பாளரை எப்படி தேர்வு செய்யலாம் என்பது குறித்து சில கருத்துக்கள் கொடுத்துள்ளோம். இதை பயன்படுத்தி சிறந்த வேட்பாளரை தேர்வு செய்து வாக்களித்து வெற்றி பெற வைத்து உங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க வழி செய்யுங்கள்.
முதலில் உங்கள் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை தயார் செய்து கொள்ளுங்கள். அதில் ஏற்கனவே பலமுறை போட்டியிட்ட வேட்பாளர்களின் விவரங்களை வைத்து ஆர் போட்டியிட்ட ஒவ்வொரு முறையும் என்னென்ன வாக்குறுதிகள் எல்லாம் அளித்துள்ளார். அதில் எத்தனை சதவீதத்தை நிறைவேற்றி உள்ளார். அவர் சார்ந்த அரசியல் கட்சி என்னென்ன வாக்குறுதிகளை அளித்தது அதில் எவற்றையெல்லாம் நிறைவேற்றி உள்ளது என்பது குறித்து ஒரு பட்டியல் தயார் செய்யுங்கள். இதை வைத்து அவர்கள் எத்தனை சதவீதம் நம்பகத்திற்குரியவர்கள் என்பதை முடிவு செய்யுங்கள்.
உங்கள் பகுதியில் அரசியல் கட்சிகளையும் தாண்டி உங்கள் தனிப்பட்ட அரசியல் சார்பையும் விட்டு தனிப்பட்ட முறையில் எந்த வேட்பாளர் சிறந்தவர் என்பதை கண்டறிய உங்கள் பகுதியில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் மக்களோட மக்களாக அவர் எத்தனை நிகழ்ச்சிகளில் கலந்துள்ளார். பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக எத்தனை முறை போராடி உள்ளார். சமூக சேவைகளில் ஏதேனும் ஈடுபட்டுள்ளாரா? பதவியில் இருந்திருந்தால் மக்கள் பிரச்சனைகளை தெரிவிக்கும் பொழுது அல்லது மனு கொடுக்கும் பொழுது அவர்களை எப்படி பழகுகிறார் கனிவுடன் மக்கள் பிரச்சனைகளை அணுகுகிறாரா? அல்லது எரிச்சலுடனும் கோபத்துடனும் மக்களை சந்திக்கிறாரா?
உங்கள் பகுதியில் அந்த வேட்பாளருக்கு ஏற்கனவே வெற்றி பெற்ற முறையிலோ அல்லது முந்தைய காலங்களில் பதவியில் இருந்த அரசியல்வாதியின் வாரிசு என்ற முறையிலோ பிரபலமானவராக இருந்தால் அவருக்கு இருக்கும் தனித் தகுதிகள் என்ன என்பதை மட்டுமே பார்த்து வாக்களிக்க வேண்டுமே தவிர பிரபல அரசியல் தலைவர்களின் வாரிசு என்பதற்காகவோ, ஏற்கனவே பலமுறை வெற்றி பெற்றவர் என்ற காரணத்திற்காகவோ நீங்கள் வாக்களித்தால் உங்கள் தொகுதி பிரச்சனைகள் அனைத்தும் தீர்ப்பதற்கான சாத்திய கூறுகள் மிகக் குறைவானதாகவே இருக்கும்.
எல்லா அரசியல் இயக்கங்களிலும் தனிப்பட்ட முறையில் சிலர் நல்லவர்களாகவும் மக்களுக்கு சேவை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் உள்ளனர். அவர்களை நீங்கள் எந்த கட்சியில் இருந்தாலும் கட்சி பாகுபாடு அரசியல் பாகுபாடு இன்றி இனமொழி பேதம் இன்றி சாதிய மத பாகுபாடுகளை கலைந்து ஒருமித்த முறையில் தேர்ந்தெடுத்தால் உங்கள் தொகுதி சிறந்த தொகுதியாக மாற வாய்ப்பு உள்ளது.
எடுத்துக்காட்டாக திமுகவில் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பாஜகவில் எம் ஆர் காந்தி மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் அரசியலில் அனுபவம் பல வருடங்கள் உள்ள அரசியல்வாதிகளில் ஓரளவுக்கு மக்கள் மத்தியில் நேர்மையும் சிறந்த நிர்வாகத் திறனும் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்பது பலராலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அடிப்படைகளை வைத்து நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்தால் மக்கள் மகிழ்ச்சியாக வாழ தேவையான அடிப்படை வசதிகளும் கட்டமைப்புகளும் செல்வா சிறந்த நிர்வாகமும் கிடைக்கும்.
அதை விட்டு நமது வாக்குகளை பணத்திற்காக விலை பேசினால் பின்னாளில் வாக்குக்காக நான் வாங்கிய பணத்தை விட பல மடங்கு செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். கவனத்துடன் இருந்து நல்லாட்சியை பெறுங்கள்.
.png)
Comments
Post a Comment