விபத்துகள் அதிகரிக்க காரணம் என்ன? விபத்துக்கு யார் பொறுப்பு?

 

 
தமிழ்நாட்டில் தற்போது தனியார் பேருந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது வாடிக்கையாக உள்ளது. தொலைதூரம் செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆரம்பித்து நகருக்குள் ஓடும் உள்ளூர் பேருந்து வரை பெரும்பாலான தனியார் பேருந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாக செய்திகள் வருகின்றன.

 இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது அதிவேகம் மற்றும் சாலை விதிகளை ஒழுங்காக கடைபிடிப்பதில்லை என்பதுதான். இது போன்ற விபத்துக்கள் நடக்க முக்கிய காரணமாக இருப்பவர்கள் யார் யார்?



 முதல் பொறுப்பு தனியார் பேருந்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் தான்.
 பெரும் பொருட்செலவில் ஆம்னி பேருந்துகள் உள்ளிட்ட பல பேருந்துகளையும் முதலீடு செய்து தொழில் நடத்தும் இவர்கள் அதனை ஓட்ட வரும் ஓட்டுநர்கள் தகுதியானவர்களா அவர்களுக்கு எத்தனை ஆண்டுகள் அனுபவம் உள்ளது. இதுவரை அவர்கள் ஓட்டியதில் எத்தனை விபத்துக்கள் நடந்துள்ளன. அவருடைய தனிமனித ஒழுக்கம் எப்படி உள்ளது என்பது போன்ற பல விஷயங்களை போதுமான அளவிற்கு கருத்தில் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இதற்கு உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படும் காரணமானது சில சமயங்களில் குறிப்பாக பண்டிகை காலம் போன்ற நேரங்களில் போதுமான ஓட்டுநர்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
 அடுத்ததாக அரசு அதிகாரிகள் விபத்திற்கு முக்கிய பொறுப்பாக கருதப்படுபவர்கள். காரணம் தனியார் பேருந்துகளின் தாறுமாறான வேகத்தையும் விதி மீறல்களையும் கண்டு கொள்வதில்லை. பல தனியார் வாகனங்கள் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றுக் கொண்டு அதிகபட்ச வேகத்தில் சாலை விதிகளை மீறி பயணிப்பது விபத்திற்கு ஒரு முக்கிய காரணம்.


 அடுத்து ஒரு முக்கிய காரணமாக கூறப்படுவது ஓட்டுநர்கள்.
 தனியார் பேருந்து ஓட்டுநர்கள் தங்களுக்கு பின்னால் மற்றும் முன்னாள் உள்ள பேருந்துகளை விட அதிக பயணிகளின் ஏற்றிக்கொண்டு சென்றால் மட்டுமே அவர்களுக்கான படித்தொகை அதிகம் கிடைக்கும் என்பதால் பயணிகளின் உயிர் பாதுகாப்பு பற்றியும் தங்கள் பாதுகாப்பு பற்றியும் கருத்தில் கொள்ளாமல் வேகத்தின் மூலம் பயணிகளை கவரும் நோக்கோடு செயல்படுகிறார்கள்.


 மற்றுமொரு முக்கிய காரணமாக கூறப்படுவது பொதுமக்கள். இவர்களில் இரண்டு வகையானவர்கள் உள்ளனர். ஒன்று வேகமாக செல்லும் பேருந்து என்பதால் தனியார் பேருந்துகளுக்காக காத்திருந்து பயணிக்கும் பயணிகள். இவர்களை திருப்திப்படுத்தும் நோக்கோடு ஓட்டுநர்கள் அதிக வேதத்தில் ஓட்டுகின்றனர். அடுத்தது சாலைகளில் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போர் மற்றும் கால்நடைகள் வளர்ப்போர் விதிகளை மீறியும் சாலையில் பேருந்துகளுக்கு இடையூறு செய்யும் விதத்திலும் செயல்படுகின்றனர். இதனால் ஓட்டுனர்களின் மன அழுத்தம் மேலும் அதிகரிக்கிறது.
 மிக முக்கியமாக கருதப்படும் காரணங்கள் ஒன்று நமது சாலைகள். பெரும்பாலான ஆட்சியாளர்கள் மக்கள் பணத்தை ஊழலில் ஊழல் செய்து சுருட்டவே நினைக்கிறார்களே தவிர மக்களுக்கு சரியான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நினைப்பதில்லை. இதனால் சாலைகள் கொண்டும் குழியுமாக பல இடங்களில் பயணிப்பதற்கு ஏதுவாக இல்லை. அதுமட்டுமல்ல அது தற்போது உள்ள வாகனங்களின் எண்ணிக்கை ஏற்ப சாலைகள் போதுமான அளவிற்கு விசாலமானதாகவும் அகலமானதாகவும் இல்லை. இவற்றை சரி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
 மேற்கூறிய அனைவரும் தங்கள் இன்னுயிரையும் மற்றவர்கள் உயிரையும் காக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் பாதுகாப்பு உணர்வோடும் வாகனங்களை இயற்றினால் மட்டுமே விபத்துக்கள் குறையும்.

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?