Posts

Showing posts with the label #உலகம்

இந்தியா 315 ரன் வித்தியாசத்தில் வெற்றி

Image
  19 வயதுக்கு உட்பட்டோர் விளையாடும் under 19 ஆசிய கிரிக்கெட் போட்டியில் மலேசியா அணியை எதிர்த்து விளையாடிய இந்திய அணி 315 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  பொதிகை டைம்ஸ் செய்தியாளர் சிவா என்ற கருப்புசாமி 

கார் ரேஸ் போட்டியில் அஜித் குமாரின் கார் பழுதானது

Image
 மலேசியாவில் நடைபெற்று வரும் ALM serious கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றார். அப்பங்கயத்தின் பொழுது நடிகர் அஜித்குமாரின் கார் பழுதானதால் பாதியிலேயே போட்டியை விட்டு விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இது தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் இதுபோன்ற நிகழ்வுகள் மனதை தளர செய்வதாகவும் எனினும் தொடர்ந்து போட்டிகள் அது எதிர்நோக்கி உள்ளதாகவும் கருத்து தெரிவித்தார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமாவை ஊடகங்கள் தங்கள் விளம்பரத்துக்கு பயன்படுத்துகிறதா?

Image
 இந்திய பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.  இப் போட்டியில்  337 என்ற பெரிய இலக்கை எதிர்நோக்கி விளையாடிய இந்திய அணி ஆரம்பத்தில் சிறிது தடுமாறினாலும் பின்பு ஜெமிமா மற்றும் இந்தியனின் கேப்டன் ஹர்மன் பிரீத்  கவுர் இருவரின் சிறப்பான ஆட்டம் காரணமாக வெற்றிக்கு அடித்தளம் இட்டனர்.  மேலும் ரிச்சா, ஸ்ரீமித்தி மந்தனா, தீப்தி ஷர்மா போன்றோரின் ஆட்டமும் குறிப்பிடத்தக்கது. இவர்களின் ஆட்டத்தின் காரணமாகவே இந்திய அணியின் ரன் ரேட் உயர்ந்தது.   இந்தப் போட்டியை பொருத்தவரை ஜெமிமா மிகச்சிறப்பாக ஆடினார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவருடைய பங்களிப்பு இந்த வெற்றிக்கு மிக முக்கியமானது என்பதை மறுப்பதற்கு இல்லை.  ஆனால் நேற்று முதல் எல்லா சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஜெமிமா மட்டுமே இந்த வெற்றிக்கு காரணம் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு யூடியூப் அவர்களும் சமூக வலைத்தள வாசிகளும் தங்கள் பார்வையாளர்களின் எண்ணிக்கை உயர்த்த பயன்படுத்திக் கொள்கிறார்களோ என...

அமேசான் நிறுவனத்தில் டெலிவரி பாய் வேலைக்கு ஆபத்தா?

Image
  உலகெங்கும் மக்கள் தற்போது பெரும்பாலான பொருட்களை வீட்டில் உட்கார்ந்து கொண்டே ஆன்லைன் மூலம் வாங்குவது விரும்புகின்றனர்.  இது போன்ற ஆன்லைன் விற்பனைத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது அமேசான். உலகம் முழுவதிலும் அமேசான் நிறுவனம் ஆன்லைன் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. தற்போது ஆர்டர் செய்யும் பொருட்களை அந்தந்த பகுதிகளில் டெலிவரி அமேசான் நிறுவனம் டெலிவரி பார்ட்னர்களாக பலரையும் வேலைக்கான அமர்த்தி உள்ளது. இதனால் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.  ஆனால் தற்போது அமேசான் நிறுவனம் தனது டெலிவரி வேலைகளை செய்ய செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பத்துடன் கூடிய மென்பொருட்களின் மூலம் ட்ரோன்கள் வழியாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய ஏற்பாடு செய்து வருகிறது.  இதன் மூலம் நிறுவனத்திற்கு டெலிவரி பார்ட்னர்களுக்கு கொடுக்கப்படும் கமிஷன் தொகைகள் மிச்சம் ஆவதோடு டெலிவரி பார்ட்னர்கள் வழியாக வரும் பல பிரச்சனைகளும் தவிர்க்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் பொருட்களை வழங்க முடியும் என்று நிறுவனம் கருதுகிறது.  இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு பரிபோகக் கூடிய ...

இந்தியர்களுக்கு அனுதாபங்கள்( சகிப்புத்தன்மை) இல்லை இளைஞர் வீடியோ வைரல்.

Image
 தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு இளைஞர் வெளியிட்டுள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது.  அதில் அவர் இந்தியர்களுக்கு மற்றவர்கள் மீது அனுதாபம் இல்லை பெரும்பாலும் இந்தியர்கள் அனைவரும் சுயநலம் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்று அவர் வெளியிட்ட வீடியோவை பார்க்கும்பொழுது அவர் சொல்வது எந்த அளவு உண்மை என்பது மக்களுக்குப் புரியவரும். அடுத்த தலைமுறை சிறப்பாக வாழ நாம் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.   எங்கள் பொதிகை டைம்ஸ் நியூஸ் டிஜிட்டல் இதழை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் மேலான கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பெட்டியில் தெரிவிக்கவும். .

திமுக அரசில் ஏன் இவ்வளவு குளறுபடிகள்?

Image
 நம் தமிழ்நாடு சுதந்திரம் வாங்கியதும் விடுதலை பல நல்ல தலைவர்களால் ஆட்சி செய்யப்பட்டு பொருளாதாரத்திலும் கல்வி அறிவிலும் சிறந்து விளங்கும் மாநிலமாக உள்ளது.  குறிப்பாக காமராஜர் காலத்தில் நீர் மேலாண்மை செய்ய பல தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. பிள்ளைகள் கல்வி கற்க மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதுமட்டுமல்லாது பல புதிய பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டது. கல்லூரிகள் திறக்கப்பட்டது. படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற அரசின் சலுகையுடன்  பல தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டது.   அதன் பின்பு வந்த பல ஆட்சியாளர்களும் தமிழகத்தை தொடர்ந்து வளர்ந்து வரும் மாநிலமாகவே சிறந்த நிர்வாகத்தை செய்து கொண்டிருந்தனர்.  ஆனால் தற்போது சில நாட்களாக திமுக தலைமையின் கீழ் நடைபெற்று வரும் பல நிர்வாக குறைபாடுகள் நடைபெற்று வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.  முதலாவதாக திமுக எதிர்க்கட்சியாக செயல்பட்ட போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையில் அவர்கள் மக்களை தூண்டிவிட்டு கையாண்ட விதத்தால் அந்த நிறுவனம் மூடப்பட்டதோடு அங்கு பல அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்றன. ஆனால் தற்பொழுது அப்பகு...

நாம் தமிழர் கட்சியில் நடப்பது என்ன?

Image
 தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே தமிழ் தேசியம், சுயசார்பு பொருளாதாரம் போன்றவற்றில் உறுதியாக நின்று போராடி வரும் அமைப்புகளில் நாம் தமிழர் கட்சி முக்கியமான ஒன்றாகும்.  இதில் சீமான் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து முன்னின்று நடத்தி வருகிறார். நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை ஏராளமான இளைஞர்கள் தன்னார்வத்துடன் களப்பணி  செய்து வருகின்றனர்.  இக்கட்சியின் மூலம் ஏராளமான புதிய இளைஞர்கள் அரசியல் தலைவராக உருவெடுத்து உள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது.  நாம் தமிழர் கட்சியில் இருந்து களப்பணியாற்றி இரண்டாம் கட்ட தலைவர்களாக முன்னேறிய ராஜீவ் காந்தி கல்யாண சுந்தரம் காளியம்மாள் போன்ற பலரும் தமிழக மக்கள் பலராலும் அறியப்படுபவர்கள்.  ஆனால் தற்போது அவர்கள் அனைவரும் இக்கட்சியை விட்டு வெளியேறி வெவ்வேறு புதிய கட்சிகளின் இணைந்துள்ளனர் சிலர் இணைய தயாராக உள்ளனர். நாம் தமிழர் கட்சி நன்றாக வளர்ந்து வரும் நிலையிலும் இது போன்ற இரண்டாம் கட்ட தலைவர்களும் பலராலும் அறியப்பட்ட நிலையில் வளர்ந்து வரும் நிலையிலும் ஏன் இவர்கள் அக்கட்சியினை விட்டு வெளியேறினார்கள் என்பது அனைவரும் கேள்வியாக உள்...

சிங்கப்பூரின் லீ க்வான் யூ போன்று இந்தியாவிற்கு மோடியா?

Image
 சிங்கப்பூரில் மலேசியா தனி நாடாக அறிவிக்கும் போது அந்த நாட்டில் வறுமையை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஒரு சிறிய நகரத்து அளவே உள்ள சிங்கப்பூர் வறுமையில் இருந்து மீண்டு இன்று உலக நாடுகள் அண்ணாந்து பார்க்கும் வளர்ந்துள்ளது.  இப்படி அந்த நாடு மிகப்பெரும் வளர்ச்சி அடைவதற்கு முக்கிய காரணமாக இருந்த அரசியல் தலைவர் லீ க்வான் யூ ஆவார்.  சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த போது அந்நாட்டின் பிரதமராக இருந்த லீ க்வான் யூ அந்நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஒரே எண்ணத்தில் வேலை செய்தார். நாட்டில் ஊழல்கள் இல்லாமல் அறவே ஒழித்தார்.  எந்த ஒரு வளமும் இல்லாத சிங்கப்பூர் நாட்டில் தொழில்துறை வளர்ச்சிக்காக அந்நிய நாட்டு முதலீடுகளை ஈர்த்தார்.  சிங்கப்பூர் நாடு 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரின் தலைமையில் கீழ் சிறப்பாக முன்னேறியது. அவருடைய சிந்தனை செயல் அனைத்தும் நாட்டை முன்னேற்றுவதை பற்றிய இருந்தது.  இதனால் அவர் எதிர்த்து செயல்பட்டு வந்த அனைத்துக் கட்சிகளும் ஒன்றரை சதவீதத்திற்கும் கீழான மக்கள் ஆதரவையே பெற முடிந்தது.  இந்தியாவில் தற்போது நரேந்திர மோடி அவர்களும் இது போன்...

அழிவு பாதையில் இருந்து மீண்டு எழுமா தமிழ் சினிமா?

Image
 மக்களின் பொழுது வாக்கு சாதனங்களின் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது சினிமா.  தமிழ் சினிமா என்பது பல வருட பாரம்பரியம் கொண்டதாக இருந்து வருகிறது. தியாகராஜ பாகவதர் தொடங்கி எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் என பலரும் மிகப்பெரிய நட்சத்திரங்களாக உலா வர தமிழ் சினிமா காரணமாக இருந்துள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த காலங்களில் பக்தி படங்கள் குடும்ப படங்கள் பொழுதுபோக்கு படங்கள் காமெடி படங்கள் சென்டிமென்ட் படங்கள் ஆக்ஷன் படங்கள் என்ன பல வகைப்பட்ட திரைப்படங்கள் வந்துள்ளன.   ஆனால் சமீப காலங்களில் தமிழ் சினிமாவில் கற்பனை வறட்சி என்பது தலை விரித்து ஆடுகிறது. சமீப காலங்களில் வந்துள்ள இயக்குனர்கள் அனைவரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தங்கள் திறமைகளை நம்புவதை விட தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் பிரம்மாண்டங்களை காண்பித்து வெற்றி பெற விரும்புகின்றனர். கதையோட்டத்தை பற்றியும் நல்ல திரைக்கதை பற்றியும் சரியான போதிய புரிதல் இல்லாதவர்களாக இருக்கின்றனர். குழந்தைகள் வீட்டில் பப்ஜி கேம் விளையாடுவது போன்று திரைப்படங்களை உருவாக்க விரும்புகின்றனர்.  ...

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

Image
 தமிழகத்தில் பங்கு சந்தை முதலீட்டில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் தெரிந்த ஒரு முக்கிய நபர் என்றால் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்கள் தான்.  இவர் யூடியூப் வலைத்தளங்களில் மணி பேச்சு என்ற  பங்குச்சந்தை சம்பந்தமான வலையொலி மூலம் தனது கருத்துக்களை மக்களுக்கு தெரிவித்து வருகிறார்.  இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் பலரும் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் பங்குச்சந்ததி மூவி எத்தனை சம்பந்தமான தகவல்களை மக்களுக்கு தெரிவிப்பதோடு முதலீடு சம்பந்தப்பட்ட அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்.   இவர் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்று கூறப்படுகறது. இதனால் பங்குச்சந்தையோடு சேர்த்து தனது அரசியல் கருத்துக்களையும் இதில் புகுத்தி வருவார்.  இதனால் தற்போது மக்களிடையே திருப்தி ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இவர் பரிந்துரை செய்த பல பங்குகள் மிகுந்த வீழ்ச்சி அடைந்துள்ளதாலும் அதைப்பற்றி அவர் எந்த கருத்துக்களும் தெரிவிக்காமல் அவருக்கு சாதகமாக எந்த பங்குகள் செயல்பட்டு இருக்கிறதோ அதை பற்றி மட்டுமே பேசி வருகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தற்போது தங்கம் உச்சத்தில...

தமிழகத்தில் தனித்தன்மையை இழக்கிறதா? பாஜக

Image
 தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் அரசியல் நிகழ்வுகளை வேகமாக நகர்த்தி வருகின்றன.  இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூரில் தமிழக வெற்றி கழகம் நடத்திய கூட்டத்தில் நடைபெற்ற தெரியாத சம்பவத்தை அடுத்து அனைத்து அரசியல் கட்சிகளிலும் அரசியலும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.  தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் கரூர் சம்பவத்தை வைத்து எப்படி எல்லாம் அரசியல் செய்ய வேண்டும் என்று கட்டம் கட்டி வருகின்றனர்.  இதில் தமிழக பாஜக விஜய்க்கு ஆதரவாக களமாடி வருகிறது. இச்சம்பவத்திற்கு பொறுப்பாக வேண்டியவர்களில் விஜய்யும் ஒரு முக்கிய பொறுப்பாளியாவார். அரசு எந்த அளவுக்கு இந்த சம்பவத்திற்கு பொறுப்போ அதே அளவிற்கு விஜய்க்கும் பொறுப்புண்டு என்பது மக்களின் கருத்தாக உள்ளது.  ஆனால் பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை எப்படியாவது விஜயை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அவருக்கு ஆதரவாக செயல்பட்டு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் சாமானிய மக்களுக்கும் சில பாஜக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கு...

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்

Image
 தமிழகத்தில் அதிக அளவில் பத்திரிகைகளும் டிஜிட்டல் ஊடகங்களும் செயல் பட்டு வருகின்றன. அவற்றில் தினசரி செய்திகள் மக்களுக்கு தெரிவிக்கப்படுகின்றன.  கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக பத்திரிகை ஊடகங்களில் வரும் செய்திகளை பார்த்தாலே நமக்கு நன்றாக தெரியும். செய்தி ஊடகங்கள் எப்படி செயல்படுகிறது என்பது.  பொதுவாகவே எல்லா தருணங்களிலுமே பத்திரிகைகள் மற்றும் டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் சில அரசியல் கட்சிகளுக்கு சார்பாகவும் மற்றவற்றுக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிடும். ஏனெனில் இங்குள்ள பல பத்திரிகைகள் அரசியல் கட்சிகளாலும் அல்லது அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களாலும் நடத்தப்படுகிறது.  இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கரூர் சம்பவம் குறித்து திரு நக்கீரன் கோபால் அவர்கள் ஒரு காணொளி வெளியிட்டு இருந்தார். அதைப் பார்த்த பின் மக்களும் உளவுத்துறை நண்பர்களும் தெரிவித்த கருத்துக்கள் என்னவென்றால் இவரைப் போன்ற ஒரு மட்டமான ஒரு தலைப்பச்சமான பத்திரிக்கையாளரை அரசியல் சொம்பு தூக்கி பார்த்ததில்லை. டிஜிட்டல் ஊடகத்துறையில் எப்படி செந்தில்வேல் மற்றும் குணசேகரன் போன்றவர்கள் அதுபோன்று அச்சு ஊடகத்துறையில் திரு...

கைப்பிடி இல்லாத கத்தி போன்று ஆபத்தானதா? (AI) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.

Image
 உலகில் அனைத்து பகுதிகளிலும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பம் எதுவென்றால் அது என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக எப்படி கம்ப்யூட்டர் மற்றும் IT என அழைக்கப்படும் தொழில்நுட்பத்துறை உலகை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததோ அதுபோல வருகின்ற சில ஆண்டுகளை AI தொழில்நுட்பம் என்பது தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். AI தொழில்நுட்பத்தின் மூலம் எல்லா வேலைகளும் எளிதாக செய்ய முடியும் என்பதும் சில வேலைகளை தானே எளிதாக செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றதாகவும் இந்த தொழில்நுட்பம் இருக்கும் என்பது பலன் கருத்தாக உள்ளது. இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன என்பதை இதில் அறியலாம். AI தொழில்நுட்பத்தின் மூலம் பல நிறுவனங்களுக்கு வேலைகளை எளிதாகவும் குறைந்த கால அளவிலும் குறைந்த செலவிலும் முடிக்க முடியும். இதனால் பல பெரிய நிறுவனங்கள் மற்றும் சிறிய நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் உள்ள சிறு குறு தொழில்கள் முன்னேற்றமடைய வாய்ப்புள்ளது. தொடர்ச்சியாக ஒரே மாதிரி செய்யக்கூடிய ...

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் கண் துடைப்பா?

Image
 நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் கண் துடைப்பா? தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நமது முதலமைச்சர் ஸ்டாலின் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.  இத்திட்டத்தின் படி ஒவ்வொரு பகுதியிலும் அரசு மருத்துவர்கள் கொண்டு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் பொதுமக்கள் பெருந்தலாக கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டனர்.  அப்படி மக்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட போது அவர்களுக்கு ரத்த பரிசோதனை ஸ்கேன் சோதனை போன்ற பல மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதற்கான பதிவுகள் செய்யும்பொழுது பயனாளிகளின் ஆதார் அட்டை மற்றும் தொலைபேசி எண்கள் பதிவு செய்யப்பட்டன. நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று பல நாட்கள் கடந்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பயனாளிகளின் பரிசோதனை விவரங்கள் (Result) தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரேக்கள் பரிசோதனைகள் ஸ்கேன் ரிப்போர்ட்டுகள் எதுவும் வராத பட்சத்தில் அவை கண்துடைப்பாக இருக்குமோ என்று ம...

ஸ்டாலின் சொல்வது உண்மை தான். தமிழ்நாடு அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.

Image
  ஸ்டாலின் சொல்வது உண்மை தான். தமிழ்நாடு அவுட் ஆப் கண்ட்ரோல் தான். சமீபத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு எப்போதுமே அவுட் ஆப் கண்ட்ரோல் தான் என்று தெரிவித்திருக்கிறார். நாம் தமிழ்நாடு அவுட் ஆப் கண்ட்ரோல் தான். தமிழக அரசு கடன் வாங்குவதில் அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.  இந்தியாவில் பல மாநிலங்களை விட தமிழக மலர்ந்த மாநிலமாக இருந்தாலும் நிர்வாக திறனற்ற தன்மையால் தமிழ்நாடு தற்போது கடன் வாங்குவதில் முதலிடம் வகிக்கிறது. மற்ற தமிழக அரசுகளை பார்க்கும் பொழுது ஸ்டாலின் அரசு அவுட் ஆப் கண்ட்ரோலாக கடன் வாங்குவது நன்றாக தெரிய வருகிறது. தமிழக அரசு தொழில் வளர்ச்சியும் அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.  ஸ்டாலின் தலைமை நான் ஆட்சியில் தமிழக அரசு ஸ்டெர்லைட் போன்ற நன்றாக இயங்கிக் கொண்டிருந்த ஆலைகளை பலத்தை தங்கள் செயல்வதற்காக மூடிவிட்டு தற்போது புதிய முதலீடுகளுக்காகபல நாடுகளுக்கு வேற எந்த முதலமைச்சரும் செல்லாத அளவிற்கு சென்று முதலீடு பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  திமுக அரசு கொடுத்த வாக்கு உறுதிகளை காப்பாற்றுவதிலும் அவுட் ஆப் கண்ட்ரோல் தான். திமுக அரசு கடந்த 2021 ஆம் ஆ...

நக்சல் பாதையில் செல்கிறாரா? ஆதவ் அர்ஜுனா

Image
  நக்சல் பாதையில் செல்கிறாரா? ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் தமிழகத்தில் கரூரில் நடந்த தமிழக வெற்றிக்கழக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது அனைவரும் அறிந்ததே.  இந்நிலையில் அதுபற்ற விசாரணை நடந்து வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் மேலாண்மை பிரிவின் செயலாளர்  திரு ஆதவ் அர்ஜுனா அவர்கள் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டு பின்னர் அதை நீக்கி இருக்கிறார். அப்பதிவில் அவர் நேபாளத்தை போன்று பங்களாதேஷ் மற்றும் இலங்கை நாடுகளைப் போன்று கிளர்ச்சியில் ஈடுபட ஜென்சி தலைமுறை தூண்டிவிடும் வகையில் கருத்துக்களை தெரிவித்து இருந்தார். பின்னர் யாருடைய அறிவுறுத்தலின் பேரிலோ அதனை நீக்கி இருக்கிறார். ஆனாலும் சமூக வலை தலைவாசிகள் அனைவரும் இதைப் பற்றி பேசி அந்த கருத்து பதிவிட்ட ஆக அர்ஜுனாவின் பக்கத்தை ஆதாரமாக காட்டி விவாதித்து வருகின்றனர். ஆதார் அர்ஜுனாவின் இந்த செயல் தேசத்துக்கு எதிரானதாகவும் நக்சல் பின் தொடர்வதாகவும் உள்ளது. இது தேசத்துக்கு எதிரான செயலாகவும் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களை தவறாக வழி நடத்தும் முறையாகவும் அனைவராலும் பார்க்கப்படுகிறது. இது போன்ற பதிவிட்டு ஆதார் அர்ஜுனா அவர்களை ம...

அரசியல் அனாதைகளாக தெரியும் தமிழர்கள்.

Image
 அரசியல் அனாதைகளாக தெரியும் தமிழர்கள்.  தற்போது தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் அரசியல் பிரச்சாரக் கூட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கரூரில் நடத்திய பிரச்சார கூட்டத்தில் 41 உயிர்பலி நடந்துள்ளது.  இதற்கு தமிழக மக்கள் முக்கிய காரணம்.  இன்றைய அரசியல்  சூழ்நிலையில் தமிழக மக்களுக்கு பல அரசியல் தலைவர்கள் மீதும் நம்பிக்கை இல்லை. அவர்கள் எதிர்பார்த்தது போல் ஆட்சிகளும் அமையவில்லை. எனவே மக்களின் எதிர்பார்ப்பு ஏதாவது ஒரு தலைவன் வந்து நம்மை காப்பாற்றி தமிழகத்திற்கு நல்லாட்சி கொடுக்க மாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். அதனால் புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் தலைவர்கள் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் சினிமா துறையில் பிரபலமாக இருந்து தற்போது அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் அவர்களுக்கு எதிர்பார்ப்பு கூடுதலாக உள்ளது என்பதை உண்மை.  ஆனால் நம் மக்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். நம் அரசியல் சிந்தனையும் புரிதலும் இன்னும் பல மடங்கு மேம்பட வேண்டி உள்...

கரூர் சம்பவம் யார் யார் காரணம்?

Image
 கரூர் சம்பவம் யார் யார் காரணம்?  நடிகர் விஜய் அவர்கள் தனது அரசியல் ஆசையின் காரணமாக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை உருவாக்கி தற்போது தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கரூரில் அவரது பிரச்சார கூட்டத்தில் 41 உயிர்கள் பலியாகி உள்ளது. இதற்கு யார் யார் காரணம் அவர்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம்.  முதல் தவறு யார் மீது? கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மீது முதல் தவறு என்பது எனது கருத்து.  காரணம் விஜய் வருவதற்கு பல மணி நேரத்திற்கு முன்பாகவே அங்கு போய் பலரும் காத்திருந்துள்ளனர். அதிலும் அவரது ரசிகர்களும் தொண்டர்களும் சிறிது கூட பொறுப்பற்றவர்களாகவும் சிந்திக்கும் திறன் அற்றவர்களாகவும் அதுமட்டுமல்லாமல்மற்றவர்கள் சொல்லும் நல்ல அறிவுரைகளை கேட்கும் மனநிலையிலும் இல்லை. அவர்கள் விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து செல்வதும் போக்குவரத்துக்கு இடையூறு செய்வதும் மற்றும் பிரச்சாரம் நடக்கும் இடங்களில் மின்கம்பங்களில் ஏறுவதும் மரங்களில் ஏறுவதும் அங்கிருக்கும் கடைகள் மற்றும் வீடுகளின் மீது ஏறி தொங்குவதும் ப...

தொழில்நுட்ப வளர்ச்சியால் பறிபோகும் வேலை வாய்ப்புகள். தீர்வு என்ன?

Image
 தொழில்நுட்ப வளர்ச்சியால் பறிபோகும் வேலை வாய்ப்புகள். தீர்வு என்ன?  இன்றைய கால சூழ்நிலையில் எல்லாத் துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் வளர்ச்சி அடைந்து வருகின்றன.  அந்த வகையில் தற்போது கணினி தொழில்நுட்பத்தில் ஏ ஐ (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்) தொழில்நுட்பம் ஒரு புதிய தொழில் புரட்சி ஏற்படுத்தி உள்ளது. இதனால் கணினி துறையில் பல வேலைகள் நுட்பத்தின் மூலம் எளிதாக செய்ய முடிகிறது. பல வேலை ஆட்கள் மூலம் பல மணி நேரம் செய்ய வேண்டிய வேலைகளை இந்த ஏஐ தொழில்நுட்பம் எளிதாக செய்து விடுகிறது.  இதுபோல் மற்ற துறைகளிலும் பல தொழில்நுட்ப வளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. எடுத்துக்காட்டாக தானியங்கி மோட்டார் வாகனங்கள் டிரைவர்(ஓட்டுநர்) இல்லாமலே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கட்டுமான துறைகளிலும் பூச்சு வேலை, டைல்ஸ் பதிக்கும் வேலை மற்றும் பொருட்களை ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு எடுத்துச் செல்லும் வேலை போன்ற பல வேலைகளுக்கு புதிதாக பல மிஷின்கள் வந்துவிட்டன.  இதனால் கணினி துறையில் வேலை பார்க்கும் பலருக்கும் வேலை இழக்கும் வாய்ப்ப...

அரசையும் மக்களையும் ஏமாற்றும் வியாபாரிகள்

Image
 அரசையும் மக்களையும் ஏமாற்றும் வியாபாரிகள்  தற்போது தொழில் நுட்ப புரட்சி காரணமாக நமது இந்தியாவில் டிஜிட்டல் எக்கனாமி வழியாக பணப்பரிவினைகள் நடைபெற நமது மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக யுபிஐ மூலமாக பண பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகிறது.  இதனால் பணம் கையில் வைத்துக் கொண்டு செல்ல வேண்டிய சூழல் இல்லை. திருட்டு பயமும் இல்லை. சில்லறை தொல்லைகள் இல்லை. எங்கிருந்தும் யாருக்கும் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் எளிதாக பொருட்களை வாங்கிக் கொண்டு அனுப்ப வசதியாக உள்ளது.  இதனால் அனைத்து தரப்பினருக்கும் வசதியாக உள்ளது. இதன்மூலம் நடைபெறும் அனைத்து பரிவர்த்தனைகளும் வாங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதால் எல்லா வரவு செலவுகளும் வருமான வரித்துறை கண்காணிக்க ஏதுவாக உள்ளது.  தற்போது சரியாக வியாபார கணக்கு வழக்குகளை சமர்ப்பித்து வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாத வியாபாரிகளுக்கு வருமானவரித்துறை மூலமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல வியாபாரிகள் தங்கள் கணக்கு வழக்குகளில் உள்ள குளறுபடிகள் வெளியில் வந்துவிடும் என்பதால் தற்போது யுபிஐ வழியாக நடைபெறும் பண பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொ...