Posts

Showing posts with the label #தமிழ்நாடு

ஆனந்த் ஸ்ரீனிவாசனின் இரட்டை நிலைப்பாடு

Image
  தமிழகத்தில் பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தை தொடர்பான தகவல்களை பார்ப்பவர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்கள்.  அவர் தனது வளையளிப்பக்கங்களிலும், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தனது கருத்துக்களை தெரிவிப்பார்.  திரு ஆனந்த் சீனிவாசன் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கிய அபிமானி என்பதால் தனது கருத்துக்களில் எப்போதும் ஒரு சார்பு நிலைப்பாடோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆளும் பாஜக அரசு மற்றும் சில குறிப்பிட்ட நிறுவனங்களின் ப்ரமோட்டோர்களையும் தாக்கிப் பேசும் ஒரு சார்பு நிலைப்பாடு கொண்டவர்.  இவர் தற்போது டாடா நிறுவனத்தில் வெடித்துள்ள பிரச்சனையைப் பற்றி பேசும் பொழுது டாட்டா நிறுவனத்தின் இறுதி முடிவுகளை எடுக்கக்கூடிய  தகுதியும் அதிகாரமும் டாட்டா நிறுவனத்தின் நோயல்  டாட்டா அவர்களுக்கு தான் உண்டு என்று கூறியிருந்தார். அது முற்றிலும் சரியானது தான். அதேபோல் எடுத்துக்காட்டு அவர் கூறும் பொழுது போர்டு நிறுவனத்தை மேற்கோள் காட்டி ஒரு கருத்தை கூறியிருந்தார். அதுவும் சரியானது தான்.  ஆனால் அதே சமயம் ரிலையன்ஸ் நிறுவனத்திலையோ அல்லது அதானி நிறுவனத்திலையோ ...

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

Image
 #இலஞ்சிபேரூராட்சி  #தென்காசிமாவட்டம்  தென்காசி மாவட்டத்தில் உள்ள இலஞ்சி பேரூராட்சி நிர்வாகத்தினர் கவனத்திற்கு   இலஞ்சியில் உள்ள இலஞ்சி பேரூராட்சிதுணைத் தலைவர் அலுவலகத்துக்கு எதிரிலேயே தினமும் சில விஷமிகள் குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகின்றனர். இது ஒரு பள்ளி வளாகமாக இருப்பதாலும் பல குழந்தைகள் அந்த வழியாக பள்ளிக்கு சென்று வருவதால் குழந்தைகளுக்கு பல நோய்த்தொற்றுகள் உருவாக வாய்ப்பு உள்ளது. மேலும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் இதுபோன்ற குப்பைகளை கொட்டி இருப்பதை இளஞ்சி பேரூராட்சி நிர்வாகம் தடுத்து இதுபோன்ற நிகழ்வுகள் இனி ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இலஞ்சி துப்புரவு பணியாளர்கள் துணைத் தலைவர் அலுவலகத்திற்கு முன்பு மட்டும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து உள்ளனர். எனினும் எதிரே உள்ள சுகாதார சீர்கேடு பற்றி சிறிதும் கவலை இல்லாமல் அப்படியே விட்டுச் சென்றுள்ளனர்.  அதற்கு ஆதாரமான புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

ஆம்னி பேருந்தில் நகை திருட்டு. குற்றவாளி கைது

Image
 தூத்துக்குடி மாவட்டம்கயத்தாறு அருகே உணவகத்தில் நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தில் நகை திருட்டு  -மத்தியபிரதேசத்தில் முக்கிய குற்றவாளி கைது; 40. 08 பவுன் நகை மீட்பு* திருநெல்வேலி மாவட்டம்  பாளையங்கோட்டை பிலிப் காலனியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் சகாயராஜ். இவரது மனைவி ஜூலியட் லதா ஜெயகுமார் (59). தனியார் கல்லூரி உதவி பேராசிரியை. இவரும் அவரது கணவர் ஜஸ்டின் சகாயராஜ் இருவரும் கடந்த மாதம் 27ஆம் தேதி இரவு திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பேருந்தில் சென்றனர். பேருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறையடுத்த கரிசல்குளம் விளக்கில் சாலையோர உணவகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது பேருந்தில் ஜூலியட் லதா ஜெயக்குமார் சுமார் 40.08 பவுன் தங்க நகை உடன் வைத்து விட்டு சென்ற பையை காணாமல் போயிருந்தது.இதுகுறித்து கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பயணிகளிடம் விசாரித்தனர். மேலும் வழக்குப்பதிந்து உணவகத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் பதிவாகி இருந்த செல்போன் அழைப்புகள் விபரங்களையும்  ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து தூத்துக்குடி...

திருச்சியில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Image
 திருச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் அருகில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களது 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்று27/08/2026 வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

திராவிடம் 2.0 ஆக மாறுகிறதா? தவெக

Image
  தமிழகத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றி கழகம் கூட்டணியோடு ஆட்சி அமைத்தது.  இந்த நிலையில் அதிமுக திமுக போன்ற திராவிட கட்சிகளில் இருந்து பல முக்கிய தலைவர்களும் நிர்வாகிகளும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைய தயாராக இருப்பதாக செய்திகள் வருவதோடு பலரும் ஏற்கனவே திராவிட சித்தாந்தத்தில் இருந்து விலகி தவெகவில்  இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.   மக்கள் புதிய ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து பெரும் நம்பிக்கையுடன் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்துள்ள நிலையில் ஏற்கனவே 50 ஆண்டுகாலம் மாறி மாறி ஆட்சியில் இருந்த திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகளில் இருந்து பல தலைவர்களும் தேவைக்காக இணைந்து வருவது மக்களிடம் அதற்கு ஏற்படுத்தி உள்ளது.  மேலும் தமிழக அரசியலில் வாடிக்கையாக நடப்பது என்னவென்றால் திராவிட கட்சிகளில் உள்ள சில புல்லுருவிகள் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என்றால் எந்த கட்சிக்கு வேண்டும் எனும் தாவி தங்கள் இருப்பை நிலை நிறுத்திக் கொள்வதோடு அக்கச்சியின் முக்கிய ப...

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

Image
  *20 ஆண்டுகளாக போலி பெயரில் பாஸ்போர்ட் பயன்படுத்தி சவூதியில் வேலை: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைது* திருநெல்வேலி மாவட்டம், உவரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பதாக போலி முகவரி மற்றும் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி, கடந்த 20 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்த நபர், சொந்த ஊருக்குத் திரும்பியபோது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உவரி காவல் நிலையத்தில் பாஸ்போர்ட் சரிபார்ப்பு பணிகளை மேற்கொண்டு வரும் பெண் முதல் நிலை காவலர் செல்வகனி, வெளிநாட்டில் இருந்து புதுப்பிப்புக்காக வந்திருந்த ஒரு பாஸ்போர்ட் விண்ணப்பத்தை ஆய்வு செய்தபோது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. சவூதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்டிருந்த அந்தப் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில், திருநெல்வேலி மாவட்டம் உவரி, பரதர் உவரி வடக்குத் தெருவைச் சேர்ந்த 'ஜார்ஜ், தந்தை பெயர் போரஸ்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, கடந்த ஜூலை 2-ஆம் தேதி அந்த முகவரியில் காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அந்த முகவரியில் ஜார்ஜ் என்ற பெயருடைய நபர் உண்மையா...

திண்டுக்கல் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற மர்ம நபர் நபர் கைது

Image
 #_திண்டுக்கல்லில் மெடிக்கல் கடையில் வைத்து போதை மருந்து,  போதை ஊசி, போதை மாத்திரைகள் விற்பனை செய்த வாலிபர் கைது - 15,000 போதை மருந்துகள், போதை மாத்திரைகள் பறிமுதல்* திண்டுக்கல் நகர் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து நகர் DSP.கார்த்திக் தலைமையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர்கள் சூரியகலா, பிரபாகரன் மற்றும் காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது கிழக்கு ரத வீதியில் சிட்டி மெடிக்கல் என்ற மருந்து கடையில் சட்டவிரோதமாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து அதிக போதை தரக்கூடிய போதை மாத்திரைகள், போதை ஊசிகள், போதை மருந்துகள் ஆகியவற்றை விற்பனை செய்த திண்டுக்கல், நத்தர்ஷா தெரு பகுதியை சேர்ந்த ஆரிப்அகமது(32) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 15,000 போதை ஊசிகள், போதை மருந்துகள், போதை மாத்திரைகள் பறிமுதல் செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

Image
  நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தல் 2026 இல் திமுக தனது ஆட்சியை தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியிடம்  இழந்து விட்டது.  அது மட்டுமல்லாமல் திமுக தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியிலேயே தோல்வியை தழுவினார். மேலும் பல முக்கிய அமைச்சர்களும் தோல்வியை தழுவினர்.  இது போன்ற ஒரு பெரிய பின்னடைவுக்கு காரணம்  1 திமுக தனது ஆட்சிக்காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு பொற்கால ஆட்சியை கொடுத்தது போல மாய உலகத்தில் இருந்தது. 2 தனது ஆட்சியைப் பற்றிய விமர்சனங்கள் அல்லது எதிர் கருத்துக்கள் யார் கூறினாலும் கூறினாலும் அல்லது சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வந்தாலும் அவர்கள் மீது வழக்கு தொடுத்தல் அவர்களுக்கு இடையூறு செய்தல் போன்ற வேலைகளிலேயே ஈடுபட்டு வந்தது. மாறாக அவர்கள் கூறும் குறைகளை சரி செய்யும் முயற்சியில் ஈடுபடவே இல்லை. 3 மேலும் திமுகவில் உள்ள அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் வரை வாக்களித்த மக்களை துளியும் மதிக்காமல் மரியாதைக்குரியுடனும் ஏளனத்துடனும் ஒரு மன்னர் மனநிலையிலேயே அணுகி வந்தனர். 4 த...

இன்றைய11/05/2026 செய்தி துணுக்குகள்

Image
 

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

Image
  நடந்து முடிந்த 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பலரும் எதிர்பார்க்காத ஆச்சரியமான முடிவுகளை மக்கள் கொடுத்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் போது முன்னாள் அரசு கொடுத்த உதவித்தொகை இலவசங்கள் போன்ற எதையும் எதிர்பார்க்கவில்லை என்பதையும், மேலும் வாக்குக்கு பணம் பெற்றுக் கொண்டு பலரும் மாற்றி வாக்களித்துள்ளதையும் உறுதிப்படுத்துகிறது.  இதன் மூலம் அரசியல்வாதிகள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இனி வரும் காலங்களில் நீங்கள் வாக்குச் செலுத்த பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி விடலாம் என்பதை நினைத்துப் பார்க்க முடியாது என்பதை தெரிவித்துள்ளனர்.  அது மட்டுமல்லாமல் ஆட்சி முடியும் தருவாயில் நீங்கள் மக்களை ஏமாற்ற கொடுக்கும் சிறப்பு உதவித்தொகைகள், விழாக்கால தொகுப்புகள், மற்றும் உதவித்தொகைகள் போன்ற எதுவும் வாக்குகளைப் பெற்றுத் தராது என்பதை நிரூபித்துள்ளனர்.  அதற்கு பதிலாக ஐந்தாண்டுகளும் சிறப்பான சட்டம் ஒழுங்குடன், தரமான உட்கட்டமைப்பு, ஊழலற்ற ஆட்சி, சிறந்த மருத்துவ வசதி, சிறந்த பொதுப் போக்குவரத்து, சிறப்பான தரமான கல்வி முறை இதுபோன்ற வசதிகளை செய்து கொடுத்தால...

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

Image
  இனி எங்கும் இப்படிதான்  ரொம்ப குஷ்டம் 😀😀 ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில் இருந்து **இன்னோவா (Innova)** காரில் ஊர்வலமாகப் புறப்பட்ட 12 விஜய் ரசிகர்கள், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர்.  நீதிமன்றம்** மற்றும் **மாவட்ட ஆட்சியர் அலுவலகம்** போன்ற முக்கிய அரசு அலுவலகங்கள் முன்பாகக் கத்திக் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.  * அனுமதியின்றி ஊர்வலம் சென்றது மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தது போன்ற காரணங்களால் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ரகளையில் ஈடுபட்ட 12 பேரையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர். தற்போது அவர்கள் **கேணிக்கரை காவல் நிலையத்தில்** வைக்கப்பட்டு, விசாரணை  வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட வாய்ப்புள்ளது. > **குறிப்பு:** பொது இடங்களில் இது போன்ற செயல்பாடுகள் சட்டப்படி குற்றமாகும். குறிப்பாக நீதிமன்றம் மற்றும் கலெக்டர் அலுவலகம் போன்ற 'அமைதி மண்டலங்களில்' (Silence Zones) ரகளை செய்வது கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு வழ...

அதிமுக திமுக கூட்டணி பற்றி ஆலோசனை. உதயநிதி காரணமா?

Image
  தற்போது நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தல் 2026ல் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனதால் அரசியல் சூழ்நிலையில் பெரும் குழப்பங்கள் நிலவி வருகிறது.  தமிழக வெற்றி கழகம் 107 இடங்களில் இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் அவர்களிடம் இல்லாத காரணத்தினால் அவர்களால் அரசு அமைக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. மேலும் அவர்களிடம் கூட்டணி சேரவும் அனைத்து கட்சிகளும் தயக்கம் காட்டி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டுமே அவர்களுக்கு ஆதரவளித்துள்ளது.  இந்த நிலையில் வெட்டிக் கழகத்தின் தலைவர் திரு விஜய் அவர்கள் ஆட்சி அமைத்தால் அது திமுகவில் வளர்ந்து வரும் உதயநிதிக்கு பின்னாலில் பெரும் சவாலாக அமையும். விஜய் தனது கட்சியையும், அரசியல் இருப்பையும் பலப்படுத்திக் கொண்டால் உதயநிதிக்கு பின்னடைவாக அமையும் என்பதால் திமுக ஒரு புதிய ராஜதந்திரத்தை கையாள முடிவு செய்துள்ளது.  விஜய் ஆட்சி அமைக்க விடாமல் தடுத்து அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த அதிமுக ஆட்சியை அமைத்து விட்டால் விஜயின் வளர்ச்சியை தடுத்து விடலாம் என்று கணக்குப் போட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.  இதன் மூல...

புதிய தமிழக அரசு சந்திக்கப் போகும் சவால்கள்

Image
  தற்போது 2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வந்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கும் சூழ்நிலையில் உள்ளது.  இந்த நிலையில் புதிய தமிழக அரசு அமைந்த உடன் அந்த அரசு சந்திக்கப் போகும் சவால்கள் என்ன? என்பது பற்றி பார்ப்போம். 1 தமிழக அரசு தற்போது 10 லட்சம் கோடி வரை கடன் சுமையில் சிக்கித் தவித்து வருவது முதல் பிரச்சனையாக இருக்கும். 2 தற்போதைய புதிய அரசு அமைக்கவிருக்கும் தமிழக வெற்றி கழகம் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையான நிதி ஆதாரம் என்பது அரசிடம் தற்போது இல்லாததால் பல வகையில் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதற்கும். 3 தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்தில் மூலம் மது விற்பனை நடைபெறுவதில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகமாக விற்பதாக தற்போது முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் திரு விஜய் அவர்களே கூறியுள்ள நிலையில் அதனை சரி செய்வதும் சவாலானதாக இருக்கும். 4 தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் போதை பழக்கங்களையும் அதனால் ஏற்படும் வன்முறைகள் பாலியல் குற்றங்கள் போன்றவற்றை தடுப்பதும் மிகுந்த சவாலானதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. 5 இது எல்லாம் விட முக்கியமானது தமிழக வெற்றி கழகத்தின் தொண...

தமிழக வெற்றிக்கழக வெற்றியாளர்கள் கவனத்திற்கு

Image
  தமிழக வெற்றிக்கழக வெற்றியாளர்கள் கவனத்திற்கு  தமிழ்நாட்டில் நடந்து முடிந்துள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் மக்களின் ஏகோபித்த வரவேற்பு பெற்று வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  தற்போது தமிழகத்தில் நிகழ்ந்துள்ள அரசியல் மாற்றம் என்பது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்பதில் சந்தேகம் இல்லை. இந்தத் தேர்தலின் மூலம் பொதுமக்கள் அனைவரும் உணர்த்துவது என்னவென்றால் ஊழல் இல்லாத, போதை பொருட்கள் நடமாட்டம் இல்லாத, சிறப்பான சட்டம் ஒழுங்குடன் கூடிய ஒரு நல்ல ஆட்சியை எதிர்பார்த்தே மக்கள் மாற்றத்தை விரும்பி திராவிட சித்தாந்தம் கொண்ட இரு பெரும் அரசியல் இயக்கங்கள் மீது இல்லாத ஒரு நம்பிக்கையை தமிழக வெற்றி கழகத்தின் மீது வைத்து தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.  மேலும் இலவசங்கள், வாக்கு செலுத்த பணம் போன்ற பல மக்களை வாக்களிக்க தூண்டும் தூண்டில்களில் எதுவும் சிக்காமல் நல்லாட்சி ஒன்றே நமக்குத் தேவை என்பதை உணர்ந்து பெருவாரியான மக்கள் வாக்களித்துள்ளனர் என்பது இந்த தேர்தலில்  தெள்ளத் தெளிவாக தெரியவந்துள்ளது. ...

ஓட்டு போட வந்தவர் மாயம்

Image
  தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சுபலட்சுமி கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் கடந்த 22ம் தேதி ஓட்டுப்போடுவதற்காக சொந்த ஊரான கண்டமனூருக்கு வந்தார. அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் எங்கு போனார் என்றே தெரியவில்லை.. தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே நடந்த இந்தச் சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. மாயமான இளம்பெண் சுபலட்சுமி சடலமாக மீட்கப்பட்ட செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் பணியாற்றி வந்த சுபலட்சுமி, தேர்தல் வாக்களிப்பதற்காக ஊருக்கு வந்த நிலையில், ஏப்ரல் 22-ம் தேதி வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தேடுதல் வேட்டையின் முடிவில், கண்டமனூர் அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதியில் சுபலட்சுமி சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கருதி, போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதம் ந...

கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதல் - ஒரு குழந்தை உள்பட 20 பேர் காயம்

Image
  *கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதல் - ஒரு குழந்தை உள்பட 20 பேர் காயம்*  கோவையில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆம்னி பேருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மூப்பன்பட்டி விலக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது  சாலையில் நின்று கொண்டிருந்த  சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆம்னி பெயரின் முகப்பு பகுதி முழுவதுமாக சிதைந்து சேதமடைந்தது. இதில் ஆம்னி டிரைவர் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சரவணன், எட்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.  காயமடைந்த ஆம்னி பேருந்து டிரைவர் பேருந்து முன் பகுதியில் சிக்கி வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று  சிக்கி தவித்த டிரைவரை மீட்டனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு ...

தென்காசியில் காணாமல் போன நிட்சேப நதி

Image
  தென்காசியில் காந்தியின் அஸ்தியை கரைத்த நிட்சேப நதி காணாமல் போன அவலம்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு- சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகும் நிட்சேப நதி தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 11/2 லட்சத்திற்கும் மேலான விவசாய விளைநிலங்கள் செழிக்க உதவியது. கரிவலம் வந்தநல்லூர் வழியாக வைப்பாறை அடைந்து கடலில் கலக்கும் இந்நதி கங்கை நதியினைப் போல புனித நதியாக கருதப்படுகிறது. இதனால் மகாத்மா காந்தியின் அஸ்தியை 7 இடங்களில் கரைக்கப்பட்ட நிலையில் நிட்சேப நதியிலும் கரைக்கப்பட்டது. இந்நதியில் காந்தியின் அஸ்தி 12.2.1948ல் கரைக்கப்பட்டது. இதற்கான நினைவு கல்வெட்டு வினோபாஜி அவர்களால் 4.4.1957 ல் இங்கு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழக-கேரள எல்லையில் உள்ள செண்பகவல்லி அணைக்கட்டு கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக உடைந்தது. காமராஜர் ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட அணை சீர்செய்யப்பட்ட நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக மீண்டும் பாதிக்கப்பட்டது. இதன் பின் இதுவரையில் சீரமைப்பு பணிகள்...

வால்பாறை கொண்டை ஊசி வளைவில் விபத்து

Image
 இது அனைவருக்குமான பதிவு... 📢 வால்பாறை செல்லும் சாலையில் உள்ள 13-வது கொண்டை ஊசி வளைவு மிகவும் குறுகலான வளைவுகளில் ஒன்று. 🛣️ இந்த பாதையை நன்கு அறிந்தவர்களே மேலிருந்து கீழே வரும்போது மிகக் கவனமாகத்தான் திரும்புவார்கள். ஆனால், புதியவர்கள் பலர் இந்த வளைவின் ஆபத்தை உணராமல் அலட்சியமாக, அதிவேகமாகத் திருப்புவதை நாங்கள் பலமுறை பார்த்திருக்கிறோம். 🏔️⚠️ இந்த வளைவு திரும்பும் இடத்தில் தடுப்புச் சுவரைத் தாண்டி தவறி விழுந்தால், இடையில் உள்ள 12 மற்றும் 10 ஆகிய வளைவுகளைத் தவிர்த்து, நேரடியாக 9-வது வளைவில்தான் போய் விழ நேரிடும். 📉 களப்பணியின் போது நாங்கள் 13-வது வளைவிலிருந்து நேரடியாக 9-வது வளைவு வரை சென்று அந்த ஆபத்தான சரிவை நேரில் பார்த்திருக்கிறோம். 14-வது வளைவிலிருந்து 13-வது வளைவு வரையிலான சாலை சற்று நேராக இருப்பதால், வாகன ஓட்டிகள் பலரும் அதிவேகமாக வருகிறார்கள். திடீரென வளைவு வரும்போது பிரேக் பிடித்து வேகத்தைக் குறைத்தால் மட்டுமே வண்டியைத் திருப்ப முடியும். அந்தத் தருணத்தில் பிரேக் சரியாகச் செயல்படவில்லை எனில், வாகனம் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாவது உறுதி. 🚗💥 தற்போது நடந்த விபத...

விதிமீறல் அலட்சியத்தால் நடந்த விபத்து

Image
  நள்ளிரவில் டீ குடிக்கச் சென்றபோது நேர்ந்த கோரம்:  ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் துடிதுடித்து பலி! **விருதுநகர்:** "டீ குடித்துவிட்டு இதோ வந்துவிடுகிறோம்" என  சென்ற மாணவர்கள், சடலமாகத் திரும்பிய சம்பவம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ### நண்பர்களுடன் நள்ளிரவு பயணம்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பேர்நாயக்கன்பட்டி மேலத் தெருவைச் சேர்ந்த கோகுல் (17), அதே பகுதியைச் சேர்ந்த பிரசன்னா (17) மற்றும் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வந்த யுவராஜ் (17) ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் மூவரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தனர். சமீபத்தில் தான் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்து தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்த நிலையில், விடுமுறையை நண்பர்களுடன் கழித்து வந்துள்ளனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் சுமார் 12 மணி அளவில், நண்பர்கள் மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் டீ குடிப்பதற்காக சாத்தூர் - கோவில்பட்டி நெடுஞ்சாலையில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். ### விபத்து நேர்ந்த...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Image
  எங்கள் பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் வாசகர்கள் நேயர்கள் விளம்பரதாரர்கள் மற்றும் எங்கள் செய்தியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.  இந்த தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் இனிய புத்தாண்டாக அமையும் வாழ்க்கையில் மென்மேலும் பல வெற்றிகளை பற்றி அனைவரும் மனமகிழ்ச்சியோடு ஆரோக்கியத்தோடு சந்தோஷத்தோடு இனிய வாழ்வு அமைந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.