Posts

Showing posts with the label #அரசியல்

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

Image
  நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தல் 2026 இல் திமுக தனது ஆட்சியை தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியிடம்  இழந்து விட்டது.  அது மட்டுமல்லாமல் திமுக தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியிலேயே தோல்வியை தழுவினார். மேலும் பல முக்கிய அமைச்சர்களும் தோல்வியை தழுவினர்.  இது போன்ற ஒரு பெரிய பின்னடைவுக்கு காரணம்  1 திமுக தனது ஆட்சிக்காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு பொற்கால ஆட்சியை கொடுத்தது போல மாய உலகத்தில் இருந்தது. 2 தனது ஆட்சியைப் பற்றிய விமர்சனங்கள் அல்லது எதிர் கருத்துக்கள் யார் கூறினாலும் கூறினாலும் அல்லது சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வந்தாலும் அவர்கள் மீது வழக்கு தொடுத்தல் அவர்களுக்கு இடையூறு செய்தல் போன்ற வேலைகளிலேயே ஈடுபட்டு வந்தது. மாறாக அவர்கள் கூறும் குறைகளை சரி செய்யும் முயற்சியில் ஈடுபடவே இல்லை. 3 மேலும் திமுகவில் உள்ள அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் வரை வாக்களித்த மக்களை துளியும் மதிக்காமல் மரியாதைக்குரியுடனும் ஏளனத்துடனும் ஒரு மன்னர் மனநிலையிலேயே அணுகி வந்தனர். 4 த...

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

Image
  நடந்து முடிந்த 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பலரும் எதிர்பார்க்காத ஆச்சரியமான முடிவுகளை மக்கள் கொடுத்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் போது முன்னாள் அரசு கொடுத்த உதவித்தொகை இலவசங்கள் போன்ற எதையும் எதிர்பார்க்கவில்லை என்பதையும், மேலும் வாக்குக்கு பணம் பெற்றுக் கொண்டு பலரும் மாற்றி வாக்களித்துள்ளதையும் உறுதிப்படுத்துகிறது.  இதன் மூலம் அரசியல்வாதிகள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இனி வரும் காலங்களில் நீங்கள் வாக்குச் செலுத்த பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி விடலாம் என்பதை நினைத்துப் பார்க்க முடியாது என்பதை தெரிவித்துள்ளனர்.  அது மட்டுமல்லாமல் ஆட்சி முடியும் தருவாயில் நீங்கள் மக்களை ஏமாற்ற கொடுக்கும் சிறப்பு உதவித்தொகைகள், விழாக்கால தொகுப்புகள், மற்றும் உதவித்தொகைகள் போன்ற எதுவும் வாக்குகளைப் பெற்றுத் தராது என்பதை நிரூபித்துள்ளனர்.  அதற்கு பதிலாக ஐந்தாண்டுகளும் சிறப்பான சட்டம் ஒழுங்குடன், தரமான உட்கட்டமைப்பு, ஊழலற்ற ஆட்சி, சிறந்த மருத்துவ வசதி, சிறந்த பொதுப் போக்குவரத்து, சிறப்பான தரமான கல்வி முறை இதுபோன்ற வசதிகளை செய்து கொடுத்தால...

புதிய தமிழக அரசு சந்திக்கப் போகும் சவால்கள்

Image
  தற்போது 2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வந்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கும் சூழ்நிலையில் உள்ளது.  இந்த நிலையில் புதிய தமிழக அரசு அமைந்த உடன் அந்த அரசு சந்திக்கப் போகும் சவால்கள் என்ன? என்பது பற்றி பார்ப்போம். 1 தமிழக அரசு தற்போது 10 லட்சம் கோடி வரை கடன் சுமையில் சிக்கித் தவித்து வருவது முதல் பிரச்சனையாக இருக்கும். 2 தற்போதைய புதிய அரசு அமைக்கவிருக்கும் தமிழக வெற்றி கழகம் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையான நிதி ஆதாரம் என்பது அரசிடம் தற்போது இல்லாததால் பல வகையில் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதற்கும். 3 தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்தில் மூலம் மது விற்பனை நடைபெறுவதில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகமாக விற்பதாக தற்போது முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் திரு விஜய் அவர்களே கூறியுள்ள நிலையில் அதனை சரி செய்வதும் சவாலானதாக இருக்கும். 4 தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் போதை பழக்கங்களையும் அதனால் ஏற்படும் வன்முறைகள் பாலியல் குற்றங்கள் போன்றவற்றை தடுப்பதும் மிகுந்த சவாலானதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. 5 இது எல்லாம் விட முக்கியமானது தமிழக வெற்றி கழகத்தின் தொண...

மேற்கு வங்கத்தில் கலவரம். மூன்று பேர் பலி

Image
  பாம்பிற்கு பால் ஊற்றி வளர்த்துக் கொண்டிருக்கிறார் மம்தாபானர்ஜி, பற்றி எரிகிறது முர்ஷிதாபாத், மேற்கு வங்கத்தில் 30% இஸ்லாமியர்கள் இருக்கும்போதே இந்த நிலைமை என்றால் அவர்கள் 50% மாக உயர்ந்தால் மம்தாபானர்ஜி யே ஆட்சியில் இருக்க முடியாது மேற்கு வங்கத்தில் எந்த ஹிந்துவும் முதல்வராக முடியாது, இதுவே உண்மை. அங்கு 500 பேர் வீடுகளை இழந்துள்ளனர், அவர்கள் உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது, சொந்த ஊரிலேயே அந்த மக்கள் அகதிகளாக்கப் பட்டுள்ளனர் தொடர்ந்து 3 முறை முதல்வர் ஆகியிருக்கிறார் மம்தாபானர்ஜி என்றால் அவர் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் என்று அர்த்தம் இல்லை, இந்த 30% இஸ்லாமியர்கள் ஓட்டு மொத்தமாக மம்தாபானர்ஜிக்கு வாக்கு அளிக்கிறார்கள், அதுவே காரணம், அவர்களுக்கு எவ்வளவு மோசமான ஆட்சி நடத்தினாலும் பரவாயிலை ஆனால் அங்கு இருக்கும் இஸ்லாமியர்களை அரசு ஆதரிக்க வேண்டும, அவர்கள் செய்யும் தேச விரோத செயல்களுக்கு தடையாக இருக்க கூடாது, அவர்கள் எந்த வித கலவரமோ அராஜகமோ செய்தாலும் கண்டுகொள்ள கூடாது, இத்தனைக்கும் மேற்கு வங்கத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள் பாதிக்கு மேல் பங்களாதேஷை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்க...

ஆலங்குளம் சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு

Image
  நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் பாரத் கல்விக் குழுமத்துடனும் நங்கூரம் மாத இதழ்டனும் இணைந்து நடத்திய சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு முடிவுகள் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை அதிகபட்ச கிராமங்களும் விவசாய தொழில்களும் நிறைந்த மாவட்டமாக உள்ளது. இத்தொகுதியை பொருத்தவரை பி எச் மனோஜ் பாண்டியன் அவர்கள் அதிமுகவிலிருந்து திமுகவிற்கு கட்சித் தாவியது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் திமுக கட்சியிலும் உட்கட்சி பூசல்களுக்கு வழி வகுத்துள்ளது. நீங்க திமுகவில் ஏற்கனவே பூங்கோதை ஆலடி அருணா போன்ற பிரபல வேட்பாளர்கள் உள்ள நிலையில் திரு பி எச் பாண்டியனின் திமுக வருகை என்பது அவர்களுக்கு போட்டியாக உருவாகும் என்பதில் உட்க்கட்சியின் மேலே பூசல்களை அதிகரித்துள்ளது. இதனால் திமுகவில் இந்த முறை யார் போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக உட்க கட்சியினரை செயல்படக்கூடிய சூழ்நிலை உள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் திமுகவின் மீது உள்ள அதிருப்தி மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு கனிம வள கடத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் திமுக தொகுதியில் பின்னடைவை சந்திக்கிறத...

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி கருத்துக்கணிப்பு

Image
  நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் பாரத் கல்விக் குழுமத்துடனும் நங்கூரம் மாத இதழ்டனும் இணைந்து நடத்திய சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு முடிவுகள்  சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திரு ராஜா அவர்களுக்கு உட்க் கட்சிக்குள்ளேயே கோஷ்டி பூசல்கள் உள்ளது. ஆனாலும் சங்கரன்கோவில் பொறுத்தவரை திமுக வலுவான நிலையில் உள்ளது. ஆனாலும் இந்த சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை இரு கட்சிகளிலும் நிற்கும் வேட்பாளர்களின் பலமே முக்கியமானது. அது மட்டுமல்லாது கடைசி நேர தேர்தல் யுக்திகளும் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்ற நிலையில் உள்ளது.  இத்தொகுதியைப் பொறுத்தவரை யார் வெற்றி பெற்றாலும் பெரிய அளவில் வாக்கு வித்தியாசம் இல்லாமல் இழுபறி நிலையில் இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.  தற்போதைய சூழ்நிலையில் இத்தொகுதியில் திமுக வலுவான நிலையில் உள்ளதாகவே தெரிகிறது.

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி கருத்துக்கணிப்பு

Image
  நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் பாரத் கல்விக் குழுமத்துடனும் நங்கூரம் மாத இதழ்டனும் இணைந்து நடத்திய சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு முடிவுகள்  கடையநல்லூர் தொகுதியை பொருத்தவரை தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திரு கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பாவிற்கு நல்ல  பெயர் உள்ளது. இவர் தொகுதி மக்கள் அனைவரையும் அரவணைத்து செல்லும் விதமாக செயல்படுவதாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இல்லாமல் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் இவரால் சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்றாலும் மக்கள் அரசியல் காரணங்களால் அவரால் அதை நிறைவேற்ற முடியவில்லை என்பதை புரிந்து கொண்டுள்ளனர். மேலும் கனிம வளம் கொள்ளைக்கு எதிராக இவர் குரல் கொடுத்ததும் போராடியதும் மக்கள் ஆதரவு இவர் பக்கம் வந்துள்ளது.  கடையநல்லூர் தொகுதி இஸ்லாமிய பெரும்பான்மையாக வாழும் பகுதியாக இருந்தாலும் திமுக இஸ்லாமியர்களுக்கு ஆன அரசியல் சக்தி என்று பிரச்சாரங்கள் வைக்கப்பட்டாலும் இந்த தொகுதியை பொருத்தவரை திரு கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பாவிற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக...

தென்காசி சட்டமன்றத் தொகுதி கருத்துக்கணிப்பு முடிவுகள்

Image
         நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் பாரத் கல்விக் குழுமத்துடனும் நங்கூரம் மாத இதழ்டனும் இணைந்து நடத்திய சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு முடிவுகள்      பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் சார்பாக நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தல் 2026 தென்காசி மாவட்டத்திற்கான கருத்துக்கணிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவுகளில் முதல் தொகுதியாக தென்காசி தொகுதி முடிவு வெளியிடப்படுகிறது. தென்காசி பகுதியில் பொறுத்த வரை தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு பழனி நாடார் அவர்களுக்கு மக்கள் மத்தியில் சிறிய அளவில் அதிருப்திகள் உள்ளது தெரிய வருகிறது. சில இடங்களில் அவரிடமே நேரடியாக எதிர்ப்புகளை தெரிவித்த காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. தென்காசி பெரும்பாலும் அதிமுக திமுக கட்சிகள் இருவராலும் பலமுறை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியாகவே இருந்துள்ளது.  தற்போது இந்த தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவிற்கு அல்லது வேறு ஏதேனும் கூட்டணி கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்படலாம் என்று பரவலாக கருத்த...

எப்படி இருக்கும் தமிழகத்தின் எதிர்காலம்?

Image
 இன்று மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருவது தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 5000 மொத்தமாக பயனாளர்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டது பற்றி அனைவரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.  இது தமிழக சட்டசபை தேர்தல் 2026 கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்பது அனைவருக்கும் தெரியும்.  இப்போது தேர்தல் அறிக்கைகளில் இரண்டு திராவிட கட்சிகளுமே பாரபட்சம் இல்லாமல் மகளிர் உரிமைத் தொகையை 2000 ஆக உயர்த்தி கொடுப்போம் என்று வாக்குறுதிகள் கொடுத்துள்ளனர்.  இது போன்று மக்களுக்கு எந்தவித உழைப்பும் இல்லாமல் அவர்களை சோம்பேறி ஆக்கும் பொருட்டு அளிக்கப்படும் எல்லா நலத்திட்டங்களுமே வரும் காலங்களில் தமிழகத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என்பது மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் வேலை வாய்ப்புகளும் புதிய தொழில்களோ தமிழகத்தில் உருவாவதற்கு வாய்ப்புகளை குறைக்கும் என்பது உண்மை.  இப்போதே கிராமப்புறங்களில் உள்ள மக்கள் நியாய விலை கடைகளில் கிடைக்கும் இலவச அரிசியையும் மகளிர் உரிமைத்தொகை பணத்தையும் வைத்துக்கொண்டு வீட்டில் உள்ள பெண்கள் சிலர் வீட்டிலிருந்தபடியே தையல் தொழிலும் அல்லது பீடி...

உங்கள் கருத்து என்ன? பதிவிடுங்கள்

Image
 அன்பார்ந்த பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.  தற்போது நமது பொதிகை டைம் டிஜிட்டல் இதழ் சார்பாக தென்காசியின் புகழ்பெற்ற பாரத் கல்வி குழுமத்துடன் இணைந்து 2026 சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு தென்காசி மாவட்டத்திற்காக நடத்தப்பட்டு வருகிறது.  இதில் தென்காசி கடையநல்லூர் வாசுதேவநல்லூர் சங்கரன்கோவில் ஆலங்குளம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வருகிறது.  மேலே உள்ள தொகுதிகளில் வாக்களிக்க உள்ள வாசகர்கள் அனைவரும் இத்துடன் இணைக்கப்பட்ட தேர்தல் கருத்துக்கணிப்பு கேள்விகளைப் படித்து அதற்கான பதில்களை எங்கள் டிஜிட்டல் இதழில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு பக்கத்தில் 12 கேள்விகளுக்கான பதில்களை மட்டும் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  நீங்கள் அளிக்கும் இந்த கருத்துக் கணிப்பு பங்களிப்பின் இறுதி முடிவு வரும் பிப்ரவரி 20ஆம் தேதி 2026 அன்று நமது பொதிகை டைம் டிஜிட்டல் இதழில் வெளியிடப்படும்.  வாசகர்கள் அனைவரும் தவறாது தங்கள் கருத்துக்களை பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தென்காசி மாவட்ட சட்டமன்றத் தேர்தல் 2026 மெகா கருத்துக்கணிப்பு

Image
தென்காசியின் புகழ்பெற்ற பாரத் கல்விக் குழும நிறுவனங்களுடன் இணைந்து பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் மற்றும் நங்கூரம் மாத இதழ் இணைந்து நடத்தும் தென்காசி மாவட்ட 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மெகா கருத்துக்கணிப்பு நடைபெற்று வருகிறது.  இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தென்காசியின் ஐந்து சட்டமன்ற தொகுதி வாரியாக முடிவுகள் வெளியிடப்படும். தென்காசி, கடையநல்லூர், ஆலங்குளம், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய ஐந்து தொகுதிகளின் கலா நிறுவனம் பற்றி அறிய எங்கள் பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழை பின் தொடருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திமுக வாக்கு வங்கி சரிவு காரணம் என்ன?

Image
  தற்போது 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுகவுக்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள் எதிர்வினைகள் என பல இடங்களிலும் பிரச்சனைகள் நடந்து வருகின்றன.  மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என  அனைத்து தரப்பினரும் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் பரவலாக வரும் கருத்துக்கள் அனைத்தும் திமுகவுக்கு வாக்கு வங்கி பெரிய அளவில் சரிந்து வருவதாக தகவல்கள் வருகின்றன.  எதற்கும் முக்கிய காரணமாக கூறப்படுபவை  1 திமுக கொடுத்த நவீன எதிர்பார்ப்பு கொண்ட தேர்தல் அறிக்கை மற்றும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள். இவை மக்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 2 திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது நடந்த போராட்டங்களை தூண்டி விடுவதும் அவற்றிற்கு மறைமுகமாக நிதி உதவி செய்தது மக்களிடம் தேவை இல்லாத பயத்தையும் பீதியையும் உருவாக்கி அரசியல் செய்ததை இப்போது எதிர்க்கட்சிகள் அவர்களுக்கு செய்கின்றனர். 3 பொதுவாக திமுகவில் உள்ள பலரும் மேல்மட்ட தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டன் வரை நாகரீகம் அற்ற முறையிலும் அராஜகமாகவும் பேசி மக...

கனவு கலைந்தது. கருத்து தெரிந்தது.

Image
  யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்காததால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டுக்கு வந்த ஜனாதிபதியின் பிரதிநிதி அதிரடியாக சில முடிவுகள் எடுத்தார். அதில் ஒன்று, அரசு பெயரில் இருக்கும் மொத்த கடனையும் கணக்கிட்டு, அதை பொதுமக்கள் எல்லோருக்கும் சமமாகப் பிரித்தார். ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை வந்தது. அதை அரசுக்கு மக்கள்தான் கட்டவேண்டும் என்றதும் எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். "உங்களை ஆண்ட முந்தைய ஆட்சியாளர்கள், உங்களுக்கு கொடுத்த இலவசங்களாலும் மானியங்களாலும், பணம், பிரியாணி மற்றும் சரக்கு போன்ற செலவுகளால்தான் இந்த கடன் வந்தது. இலவசங்களையும் பணத்தையும் பிரியாணியையும் கை நீட்டி வாங்கி விட்டு அவர்களுக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தது உங்கள் தவறு, நீங்கள் செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும். அதனால் உங்களால் வாங்கப்பட்ட கடனை நீங்கள்தான் அடைக்க வேண்டும். மீறினால், உங்கள் கடன் தொகைக்கு ஏற்ப, உங்கள் வீட்டில் உள்ள பொருட்களோ உங்கள் சொத்துக்களோ ஜப்தி செய்யப்படும்" என்றார். மக்களும் வேறு வழியின்றி கட்டத் தொடங்கினர். கட்ட மறுத்தவர்களின் சொத்துக்கள் ஜப்த...

முரட்டு முட்டு கருணாஸ்

Image
     சமீபத்தில் நடிகர் கருணாஸ் அவர்கள் நடிகர் விஜய் 200 கோடி ரூபாய் வருமானத்தை விட்டு விட்டு அரசியலுக்கு வருவது சேவை செய்ய அல்ல இரண்டு லட்சம் கோடி சம்பாதிக்கலாம் என்று எண்ணத்தோடு வருகிறார் என்று கருத்து தெரிவித்திருந்தார்.  திரு கருணாநிதி அவர்களும் தற்போது அரசியல்வாதியாகவும் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அதன்படி பார்த்தால் அவர் கூறுவது எல்லா அரசியல்வாதிகளும் ஊழல் செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே அரசியலுக்கு வருகிறார்கள் என்பதை ஒப்புக் கொள்வது போல இருக்கிறது. திரு கருணாஸ் அவர்களும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறாரா? என்பதை செய்தியாளர்கள் அவரிடம் கேட்க வேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக உள்ளது.        தன் சுயநலத்திற்காக எதையும் செய்யக்கூடிய திரு கருணாஸ் அவர்கள் இப்படி பேசுவதில் வியப்பொன்றுமில்லை என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.   நடிகர் விஜய் பொருத்தவரை அவருக்கு அரசியல் அனுபவம் அரசியல் பற்றிய போதுமான தெளிவும் இல்லாமல் தனக்கு இருக்கும் சினிமா புகழ் பயன்படுத்தி எப்படியாவது முதலமைச்சராகி விட வேண்டும் என்ற...

திமுகவின் பெயர் அரசியல் எடுபடுமா?

Image
  தமிழகத்தில் தற்போது மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி அதைப் பெயர் மாற்றியது சம்பந்தமாக திமுக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.  திமுக செய்யும் இந்த பெயர் அரசியலில் அவர்களே சிக்கப் போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. காரணம் தமிழகத்தில் பல விடுதலைப் போராட்ட வீரர்கள் முக்கிய அரசியல் தலைவர்கள் இருந்தும் இவர்கள் வைக்கும் அனைத்து திட்டத்திற்கும் பெயர் முதலமைச்சர் ஸ்டாலின் பெயராகவே உள்ளது. மேலும் பல அரசு பேருந்து நிலையங்களுக்கும் கட்டிடங்களுக்கும் பாலங்களுக்கும் கருணாநிதி பெயர் அல்லது தெலுங்கர்களின் பெயர்களையே வைத்துள்ளனர். இவர்கள் இதுவரை ஏதாவது ஒரு திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயரை வைத்துள்ளனர் என்ற கேள்வி எழுகிறது.   பாராளுமன்றத்தில் திருச்சி சிவா எம் பி அவர்கள் தென்னிந்திய குறிப்பாக தமிழ் சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றி வடமாநிலங்களில் உள்ளவர்களுக்கும் மத்திய அரசுக்கும் தெரியவில்லை என்றும் உரிய அங்கீகாரம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.  ஆனால் இங்கு தமிழ்நாட்டில் ஒரு திட்டத்திற்கு கூட ஒரு இடத்திற்கு கூட ...