பாண்டிச்சேரியை குறி வைக்கிறாரா விஜய்
தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி கிடைக்காத நிலையில் பாண்டிச்சேரியில் தனது பிரசாரத்தை பயன்படுத்தி நடிகர் திலகம் எம்ஜிஆர் போன்று அவர் பாணியில் முதலில் பாண்டிச்சேரியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நடிகர் விஜய் செயல்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
நடிகர் விஜய் அவர்களோடு இருக்கும் திரு புஸ்ஸி ஆனந்த் அவர்கள் ஏற்கனவே பாண்டிச்சேரி எம்எல்ஏவாக இருந்தவர். பாண்டிச்சேரி அரசியல் குறித்து சில தகவல்களை அறிந்து வைத்திருப்பதோடு அங்குள்ள அரசியல் தலைவர்களின் வட்டாரத்தில் அவருக்கு பழக்கம் உள்ளது.
இதனால் அங்குள்ள அரசியல் சூழ்நிலைகளை பயன்படுத்தி அங்கு ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி வரும் சட்டமன்றத் தேர்தலில் பாண்டிச்சேரியில் ஆட்சியைப் பிடிப்பது தமிழக வெற்றிக் கழகத்தின் எண்ணமாக உள்ளது என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Comments
Post a Comment