சிறுபான்மை வாக்கு வங்கி படுத்தும்பாடு
நமது இந்திய திருநாடு மதசார்பற்ற நாடு என்று அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா முழுவதிலும் அரசியல் கட்சிகள் மட்டும் மதசார்பற்று இயங்குவதில்லை. அதேபோல் சில மதங்கள் சார்ந்தவர்களும் அந்த மத அமைப்புகளும் அரசியல் நிலைப்பாட்டை கொண்டுள்ளன. அந்த குறிப்பிட்ட மதங்களைப் பொறுத்தவரை ஒரு தனி மனிதன் தான் விருப்பப்பட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்க அனுமதிப்பதில்லை. மாறாக அவர்களின் மதக் கூட்டமைப்பு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறதோ அவர்களுக்கு வாக்கைச் செலுத்துகின்றனர். இதனால் தேர்தல் நேரங்களில் அரசியல் கா நேரங்களில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு அவர்களை திருப்திப்படுத்தும் பணியில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் கேட்கும் வாக்குறுதிகளை செய்து தருவதாக உறுதி அளிப்பதோடு ஆட்சிக்கு வந்த பின்னும் அவர்களுக்கு வாலாட்டும் நாய்கள் போல சில அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. சிறுபான்மையினரின் வாக்குகளை பெற வேண்டும் என்றால் அவர்கள் எதிர்பார்க்கிறார்களோ இல்லையோ மற்ற மதங்களை குறை சொல்லி அவர்களை விரோத மனப்பான்மையோடு அணுகினால் மட்டுமே சிறுபான...