Posts

Showing posts with the label #நாம்தமிழர்கட்சி

நம்பிக்கை துரோகியான நாம் தமிழர்

Image
  தமிழ்நாட்டில் அரசியல் முக்கிய கட்சிகளில் ஒன்று நாம் தமிழர் கட்சி. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் தமிழ் மற்றும் தமிழ் தேசியம் பற்றி எப்போதும் பேசக் கூடியவர். அப்படி அவர் தமிழ் பற்றி பேசும்போது தமிழ் கடவுள் ஆன முருகனை முப்பாட்டன் முருகன் என்று அழைப்பார்.  எப்போதும் முருகனைப் பற்றி பேசக்கூடிய திரு சீமான் அவர்கள் தமிழ் கடவுள் முருகன் திருத்தலமான திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வின் போது நடந்த பிரச்சனையைப் பற்றி வாயே திறக்காமல் அமைதி காத்துள்ளார்.  தமிழ்நாட்டில் பிஜேபி தவிர சிறுபான்மை வாக்குகளுக்காக அனைத்து கட்சிகளும் சிறுபான்மை வாக்குகளுக்காக தங்கள் சுய கௌரவத்தையும் தன்மானத்தையும் கூட அடக்க வைக்க தயங்க மாட்டார்கள் என்பதற்கு திரு சீமான் போன்றவர்களை சாட்சி. மற்ற விஷயங்களுக்கெல்லாம் முந்திக்கொண்டு கருத்து சொல்லும் திரு சீமான் அவர்கள் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றும் விழாவின் பிரச்சனையில் ஓடி ஒளிந்து கொண்டு வாயில் வாழைப்பழத்தை வைத்திருக்கிறாரா என்பது தெரியவில்லை. மொத்தத்தில் இந்து மக்களுக்கு நம்பிக்கை துரோகியாக மாறிவிட்டது நாம் தமிழர் கட்சி....

தமிழக வாக்காளர்களின் கனிவான கவனத்திற்கு

Image
  தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழக வாக்காளர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் திறமையான நேர்மையான சிறந்த வேட்பாளரை தேர்வு செய்ய என்ன செய்ய கீழே உள்ள கேள்விகளை அவர்களிடம் கேட்டு அதற்கு அவர்கள் அளிக்கும் பதில்கள் உங்களுக்கு திருப்தி அளிப்பதாக இருந்தால் நீங்கள் அவர்களுக்கு வாக்களிக்கலாம். அப்படி நீங்கள் இதை பின்பற்றும் பட்சத்தில் உங்கள் தொகுதி வளர்ச்சி அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பானதாக இருக்க வாய்ப்புகள் உண்டு.  முதலில் தற்போது வெற்றி பெற்று பதவியில் உள்ள  வேட்பாளர் தங்களிடம் கலந்து தேர்தலின் போது பிரச்சாரத்திற்கு வரும்போது என்னென்ன வசதிகள் செய்து கொடுப்பேன் என்றும் அடிப்படை வசதிகளில் எதை செய்வேன் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார் என்பதை பழைய தேர்தல் அறிக்கையை எடுத்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் வெற்றி பெற்ற  வேட்பாளர் சார்ந்துள்ள கட்சி வெற்றி பெற்ற கட்சியா? அவ்வாறு அவர் வெற்றி பெற்ற கட்சியிலோ அல்லது கூட்டணியோ இருந்திருந்தால் அந்தக் கூட்டணி கொடுத்துள்ள வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டனரா? என்று முதலில் பார...

தமிழகத்தில் இன்றைய இளைய தலைமுறை அரசியல் தலைவர்களில் யார் தகுதியானவர்?

Image
 தமிழக அரசியல் களம் தற்போது இளைஞர்களை சுற்றி நடந்து வருகிறது.  தமிழகத்திலும் முதல் முறை வாக்களிக்கும் இளைய தலைமுறை வாக்காளர்கள் அதிகம் உள்ள நிலையில் அவர்களின் மனம் கவர்ந்த தலைவர் யார் என்ற கோணத்தில் நாம் இளைஞர்களுடன் கலந்தாலோசித்த பொழுது அவர்களின் எதிர்பார்ப்பு இளம் தலைவர்கள் பற்றி தான் இருந்தது.  ஒருவர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் ஆகவும் அடுத்தவர் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் திரு அண்ணாமலை அவர்களாகவும் திமுகவின் இளம் தலைமுறை தலைவராக இளைஞர்களின் தேர்வாக உள்ளது.  இன்றைய தமிழக அரசியல் முழுவதும் இவர்கள் மூவரை சுற்றிய நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.  நாம் பொதிகை டைம்ஸ் இதழ் நிருபர்கள் இளைஞர்களுடன் கலந்து ஆலோசித்த பொழுது அவர்கள் கூறிய சில கருத்துக்கள் அடிப்படையில் யாருக்கு எப்படி வாய்ப்புகள் உள்ளது என்பதை பற்றி விவரத்தை பார்க்கலாம்.  நடிகர் விஜய் அவர்களைப் பொறுத்தவரை தமிழக வெற்றி கழகம் அரசியல் கட்சியின் மூலம் தமிழக முழுவதும் பல லட்சக்கணக்கான இளைஞர்களை தன்வசம் வைத்துள்ளார். ஆனால் அவரது தமிழக வெற்றி கழகத்தில் ஒரு சரியான கட்டமைப்போ, திட்...

நாம் தமிழர் கட்சியில் நடப்பது என்ன?

Image
 தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே தமிழ் தேசியம், சுயசார்பு பொருளாதாரம் போன்றவற்றில் உறுதியாக நின்று போராடி வரும் அமைப்புகளில் நாம் தமிழர் கட்சி முக்கியமான ஒன்றாகும்.  இதில் சீமான் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து முன்னின்று நடத்தி வருகிறார். நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை ஏராளமான இளைஞர்கள் தன்னார்வத்துடன் களப்பணி  செய்து வருகின்றனர்.  இக்கட்சியின் மூலம் ஏராளமான புதிய இளைஞர்கள் அரசியல் தலைவராக உருவெடுத்து உள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது.  நாம் தமிழர் கட்சியில் இருந்து களப்பணியாற்றி இரண்டாம் கட்ட தலைவர்களாக முன்னேறிய ராஜீவ் காந்தி கல்யாண சுந்தரம் காளியம்மாள் போன்ற பலரும் தமிழக மக்கள் பலராலும் அறியப்படுபவர்கள்.  ஆனால் தற்போது அவர்கள் அனைவரும் இக்கட்சியை விட்டு வெளியேறி வெவ்வேறு புதிய கட்சிகளின் இணைந்துள்ளனர் சிலர் இணைய தயாராக உள்ளனர். நாம் தமிழர் கட்சி நன்றாக வளர்ந்து வரும் நிலையிலும் இது போன்ற இரண்டாம் கட்ட தலைவர்களும் பலராலும் அறியப்பட்ட நிலையில் வளர்ந்து வரும் நிலையிலும் ஏன் இவர்கள் அக்கட்சியினை விட்டு வெளியேறினார்கள் என்பது அனைவரும் கேள்வியாக உள்...