Posts

Showing posts with the label #entertainment

துரந்தர் - திரை விமர்சனம்

Image
"DHURANDAR", பாகிஸ்தான் கராச்சியின் இரண்டு ரவுடி கும்பல் ,.  ISI  இந்தியாவில் செய்ய நினைக்கும் அத்துனை நாசவேலைக்கும் இந்த கும்பலை எப்படி பயன்படுத்தியது , நமது spy கள் இவர்களுள்    ஊடுருவி  ஒவ்வொரு information யையும் நமது அரசாங்கத்துக்கு தெரிவித்தும் , தடுக்க முடியாமல் போன பல தாக்குதல்கள் .. இது தான் கதை ...  இல்லை இது கதை  இல்லை நடந்த ஒவ்வொன்றையும் பற்றிய action replay  . முதல் காட்சியே கத்தார் விமானக் கடத்தல் . கடத்தல்காரர்களுடன்  நேரடி பேச்சு வார்த்தையில் 'அஜித் தோவல்' . அஜித் தோவலாக  மாதவன் . அப்படியே அச்சு அசலாக அஜித் தோவலே .. விமானத்தினுள் நுழையும் போதே தீவிரவாதிகள் ஒருவனைக் கொன்ற ரத்தக்கறை, paasanger களின் கிலி படர்ந்த முகம் .  மூன்று தீவிரவாதிகளையும் ரொக்க  பணத்தையும் அவர்களிடம் ஒப்படைக்க போகும் வலி என மாதவன் படம் முழுவதும் Rocks ...  பாகிஸ்தானின் கராச்சி ... ரவுடியிஸத்தின்   உச்சக்கட்ட காலகட்டம் . அந்த கேங்கில்  போய் சேர்வதற்கு இந்திய ராணுவத்தை சேர்ந்த ரன்வீர் சிங் ஒரு பலூச்சாக தன்னை அடையாளப்படு...

மதவெறி உணர்வுடன் அலெக்சாண்டர் பாபு

Image
  மேடை நிகழ்ச்சிகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஒற்றை மனிதனாக ஒரு இசை கச்சேரி நடத்தி மக்களைக் கவர்ந்த வரும் முக்கியமான நபர் அலெக்சாண்டர் பாபு. இவரை அலெக்ஸ் என்று அன்புடன் அழைக்கின்றனர்.  இவர் தனது மேடை நிகழ்ச்சிகளிலும் சரி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சரி பெரும்பாலான நேரங்களில் தமிழ் பக்தி பாடல்களை பாடியவர்களையும் இசையமைத்தவர்களையும் மற்றும் இந்து தெய்வங்களையும் நக்கல் நையாண்டியாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.  அடிப்படையில் கிறிஸ்தவரான இவர் இதுவரை மேடைகளில் ஒரு நாள் கூட கிறிஸ்தவ தெய்வங்களையோ அல்லது கிறிஸ்தவ பாடல்களையோ பாடி அவர் நையாண்டி செய்வதில்லை. அதேபோல் இஸ்லாமிய பாடல்களையும் ஒரு நாளும் அவர் தொட்டதில்லை. ஏனெனில் அவற்றைத் தொட்டால் பிரச்சனை வரும் என்பது அவருக்கே நன்கு தெரியும்.  நமது இந்து மக்கள் ஏமாளியாக இருக்கும் வரை இவரைப் போன்றவர்கள் நாம் கொடுக்கும் நிகழ்ச்சிக்கான டிக்கெட் பணத்தை பெற்றுக்கொண்டு கொச்சைப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டுதான் இருப்பார்கள். இவரைப் போன்றவர்களை இந்து மக்கள் அனைவரும் புறக்கணித்தால் மட்டுமே இவர்கள் திருந்தவும் தங்கள...

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் எழுச்சி

Image
  இந்தியாவில் எப்போதுமே விளையாட்டுக்களில் கிரிக்கெட்டுக்கு என்று தனி இடம் ஒன்று உண்டு.  இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலும் ஆண்கள் கிரிக்கெட்டை மட்டுமே விரும்பி பார்த்து வந்தனர். பெண்கள் கிரிக்கெட் அணியை பற்றி பெரிதாக யாருக்கும் தெரியாது. அந்தப் பெண்கள் கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களை பற்றி ஒருவருக்கும் தெரியாது.  ஆனால் தற்போது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு நிகராக பெண்கள் அணியிலும் சில வீரர்கள் பேசப்பட்டு வருகின்றனர். ரசிகர்களிடையே பெண்கள் கிரிக்கெட் பற்றியும் ஒரு பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.  தற்போது நமது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி மிகவும் வலுவானதாகவும் திறமை வாய்ந்ததாகவும் உள்ளது.  இந்த ஆண்டு உலக சாம்பியன்ளாக வந்துள்ள பெண்கள் கிரிக்கெட் அணிக்கு பொதிகை டைம்ஸ் சார்பாக வாழ்த்துக்கள்.  நமது இந்திய ரசிகர்கள் எப்படி கிரிக்கெட்டை பெரிதாக ரசித்து வீரர்களை உற்சாகப்படுத்துகிறார்களோ அதே போன்று ஆக்கி ஃபுட்பால் கபடி பேஸ்கட் பால் போன்ற அனைத்து விளையாட்டுகளையும் ஊக்கப்படுத்தினால் இந்திய அனைத்து விளையாட...

உதயநிதிக்கு ஆப்பு அடிப்பது திமுகவினரே தானா?

Image
 தமிழ்நாட்டில் பாரம்பரியமிக்க கட்சிகளில் ஒன்று திமுக ஆகும். திராவிட சிந்தாந்தத்தை முன்வைத்து அண்ணா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும்.  அண்ணாவின் மறைவிற்கு பின் அவருடன் பல மூத்த தலைவர்கள் கட்சி ஆரம்பிக்க உதவியவர்கள் என அனைவரையும் பின்னுக்கு தள்ளி திரு கருணாநிதி அவர்கள் இந்தக் கட்சியை கைப்பற்றினார். அன்று முதல் இன்று வரை அவரது குடும்பமே திமுக கட்சி என்று ஆகிவிட்டது.  தற்போது திமுகவின் உதயநிதியை முன்னிறுத்தி கட்சியில் பல பணிகள் நடந்து வருகின்றன. அவர் துணை முதலமைச்சர் ஆக இருப்பதோடு மட்டுமல்லாமல் விரைவில் முதலமைச்சராகவும் வாய்ப்பு வரப்போகிறது  என்கிற செய்திகளும் வந்து கொண்டுள்ளன.  இந்நிலையில் திமுகவில் இருக்கும் சில மூத்த சீனியர் தலைவர்களுக்கும் அக்கட்சியில் இருக்கும் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஒரு பகுதியினர் இந்த வாரிசு அரசியலில் சில வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டு அதற்கு உடன் உள்ளனர் என்பது அக்கட்சி நிர்வாகிகளின் கருத்துக்கள் மூலமாக தெரிய வந்தது.  இதனால் திமுகவில் உதயநிதியின் செயல்பாடுகள் பற்றி பின் தொடர்ந்து அவர் செய்யும்...

கலாச்சாரத்தை சீரழிக்கும் தொலைக்காட்சி

Image
  மக்களின் பொழுதுபோக்கு சாதனங்களில் முக்கியமான ஒன்றாக திகழ்வது தொலைக்காட்சி.  தற்போது பல தொலைக்காட்சி தனியார் தொலைக்காட்சியில் நிறுவனங்கள் செயற்கைக்கோள் மூலமாக தங்கள் ஒளிபரப்பை செய்து வருகின்றன.  அப்படி நடத்தப்படும் தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் டிஆர்பி ஒன்றையே குறிக்கோளாக வைத்து மக்களுக்கு இதுபோன்ற கருத்துக் களை தெரிவிக்க வேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல் தங்கள் சுயநலத்திற்காக கேவலமான சில நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.  குறிப்பாக தற்போது பிரபலமாகி வரும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மிகவும் அருவருக்கத்தக்க வகையிலும் மக்களின் எண்ணங்களை வக்கிரமாக்கும் வகையிலும் அமைந்துள்ளது.  தன் வீட்டில் இருந்து கொண்டு அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை ஜன்னல் வழியாக பார்ப்பது போன்ற கேவலமான நிகழ்ச்சி. இதையும் ஒரு கூட்டம் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் இவர்கள் தேர்ந்தெடுக்கும் ஆட்கள் வேண்டும் என்று கருத்து வேறுபாடுகள் வரும் வகையிலும் மோதல்கள் வரும் வகையிலும் தேர்ந்தெடுப்பதோடு மட்டுமல்லாமல் சில சமயங்களில் அதற்கு இவர்களே சாட்சி அமைப்புகளையும் ஏற்படுத்தித் த...

பூமர் அங்கிள்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

Image
  தற்போதுள்ள இளைய தலைமுறை தங்களுக்கு முந்தைய தலைமுறைகள் ஏதாவது அவர்களுக்கு அறிவுரை சொன்னால் அவர்களை பூமர் அங்கிள் என்று அழைக்கின்றனர்.  இவ்வாறு இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லும் பூமர் அங்கிள்களின்  உலகம் எப்படி இருக்கும்?  சென்ற தலைமுறை பூ மரங்கள் பெரும்பாலும் தங்கள் இள வயது பருவத்தில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்திருப்பார்கள். இதனால் அவர்களுக்கு சிறுவயது பருவத்திலும் சரி அவர்கள் வாலிப வயதானத்திலும் சரி அவர்கள் ஆசைப்பட்ட பல பொருட்கள் அவர்களுக்கு கிடைத்திருக்க வாய்ப்புகள் இல்லை. அதுமட்டுமல்லாமல் அன்றைய தலைமுறை பெரியவர்கள் இவர்களுக்கு குடும்பத்தின் நிலைமை மற்றும் பொருளாதார நிலமை ஆகியவற்றை எடுத்துச் சொல்லி உணர்த்தி பொறுப்புடன் வளர்த்தனர்.  இதனால் அவர்கள் வளர்ந்து பொருளாதார ரீதியாகவும் ஒரு நல்ல நிலையை அடைந்த பின்பும் அவர்களுக்கு சிறுவயதில் அவர்கள் பட்ட  கஷ்டங்களும் தாங்கள் கடந்து வந்த பாதைகளையும் மனதில் கொண்டு அதிகம் செலவு செய்யாதவர்களாகவும் குடும்பத்தில் உள்ள அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும் ...

ஓணம் பண்டிகைக்கு எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

Image
 வரும் செப்டம்பர் எட்டாம் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி தமிழகத்தில் சென்னை, கோவை, கன்னியாகுமரி, திருப்பூர், நீலகிரி ஐந்து மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு விடுத்துள்ள புதிய செய்தி குறிப்பு ஈரோடு, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஓணம் பண்டிகைக்காக செப்டம்பர் எட்டாம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Pothigaitimes #Onam #Tamilnadu