பள்ளிப்பட்டு பேரூராட்சியை சேர்ந்த இருவர் கோர மரணம்



 *பள்ளிப்பட்டு பேரூராட்சியை சேர்ந்த இருவர் கோர மரணம்*


*ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஸ்ரீசைலம் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து ஏற்பட்டது*


*நால்வர் பயணம் செய்த சொகுசு கார் மீது ஐதராபாத்தில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி பயணம் செய்த வால்வோ சொகுசு‌பஸ் அதிவேகத்தில் வந்து மோதியதால்  கார் நொருங்கி அதிகாலை பயங்கர விபத்து ஏற்பட்டது*



*தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்டம் , திருத்தணி தொகுதியில் உள்ள பள்ளிப்பட்டு‌ பேரூராட்சியை சேர்ந்த நான்கு பேர் ஒரு காரில் பயணம் செய்தனர்*



*வரதராகவனின்  மனைவி(48)  மேனகாவின் தந்தை வழி நிலம் விற்பனை தொடர்பாக கடப்பா நோக்கி பயணம் சென்ற போது  ஏற்பட்ட கோர விபத்தில் மேனகா என்ற திருமணமான பெண்ணும் அவரது தம்பி சாய்(32)  மற்றும் அவர்களின் குடும்ப நண்பர் பவன்குமார்(26) மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலம்(54)  என 4-பேரும் விபத்தில் சிக்கினார்கள்*


*இந்த விபத்தில் மேனகா மற்றும் பவன் குமார் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்*


*மேனகாவின் தம்பி சாய் மற்றும் வழக்கறிஞர் வேங்கடாசலம் படுகாயங்களுடன் கடப்பா மாவட்ட‌ அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ( ICU) சேர்க்கப்பட்டனர்*


*பள்ளிப்பட்டு பேரூராட்சியை சேர்ந்தவர்களின் இந்த கோர மரணம் பொதுமக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது*

Comments

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

தென்காசி ஜவுளி துறையில் புரட்சி ராஜலட்சுமி ஃபேஷன்ஃபேஷன்

திரை உலகம் கொண்டாட மறந்த நாயகன் மாதவன்

ஓட்டு போட வந்தவர் மாயம்