Posts

Showing posts with the label #திராவிடமாடல்

திமுகவின் பெயர் அரசியல் எடுபடுமா?

Image
  தமிழகத்தில் தற்போது மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி அதைப் பெயர் மாற்றியது சம்பந்தமாக திமுக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.  திமுக செய்யும் இந்த பெயர் அரசியலில் அவர்களே சிக்கப் போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. காரணம் தமிழகத்தில் பல விடுதலைப் போராட்ட வீரர்கள் முக்கிய அரசியல் தலைவர்கள் இருந்தும் இவர்கள் வைக்கும் அனைத்து திட்டத்திற்கும் பெயர் முதலமைச்சர் ஸ்டாலின் பெயராகவே உள்ளது. மேலும் பல அரசு பேருந்து நிலையங்களுக்கும் கட்டிடங்களுக்கும் பாலங்களுக்கும் கருணாநிதி பெயர் அல்லது தெலுங்கர்களின் பெயர்களையே வைத்துள்ளனர். இவர்கள் இதுவரை ஏதாவது ஒரு திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயரை வைத்துள்ளனர் என்ற கேள்வி எழுகிறது.   பாராளுமன்றத்தில் திருச்சி சிவா எம் பி அவர்கள் தென்னிந்திய குறிப்பாக தமிழ் சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றி வடமாநிலங்களில் உள்ளவர்களுக்கும் மத்திய அரசுக்கும் தெரியவில்லை என்றும் உரிய அங்கீகாரம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.  ஆனால் இங்கு தமிழ்நாட்டில் ஒரு திட்டத்திற்கு கூட ஒரு இடத்திற்கு கூட ...

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?

Image
  தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு  முன்று ஆண்டுகள் ஆகிறது  நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தும் சரியான தகவல்கள் வரவில்லை   மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.   பல்வேறு அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது தற்போது வரை எந்த எந்த அலுவலகம் எங்க இருக்கிறது சில பேர்க்கு தெரியவில்லை  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறந்தால் தான்  மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.        இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்கபடுமா?  அல்லது 2026 ஆண்டு துவக்கத்தில் திறக்கபடுமா அல்லது தேர்தல் வருவதுக்கு முன்பு திறக்கபடுமா?       தென்காசி மாவட்ட மக்களின் சார்பில் கேட்டு கொள்கிறோம்.      தமிழ்ப் புலிகள் கட்சி  தென்காசி மாவட்டம்  தமிழ் குமரன்.

இந்தியாவில் இளைஞர்கள் சீரழிந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம்

Image
 நமது இந்திய நாட்டில் நியூ ஆப்ஸ் டைம்ஸ்  பத்திரிகை எடுத்த ஆய்வில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இளைஞர்கள் சீரழிந்த மாநிலத்தில் நமது தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.  இந்தியாவின் நியூ ஹேர் டைம்ஸ் பத்திரிகை எடுத்த ஆய்வில் மது, போதைப் பொருள் பழக்கம், பொறுப்பற்ற நடைமுறைகள், சட்ட விதிமுறை மீறல்களில் முதலிடம், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் ரவுடிசம் இவற்றின் அடிப்படையில் இந்தியாவிலேயே தமிழக இளைஞர்கள் தான் அதிகம் சீரழிந்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.  இந்தப் பெருமை அனைத்தும் நமது திராவிட மாடல் அரசையும், காவல்துறையின் அமைச்சராக இருக்கும் முதலமைச்சரையும் சாரும்.  இனியும் தமிழகம் விழித்துக் கொள்ளவில்லை என்றால் தமிழக இளைஞர்களின் வாழ்க்கை சின்னாபின்னமாவது உறுதி.

அறிவு ஜீவி அடி முட்டாள் ஆன கதை

Image
  நமது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக பல ஆண்டுகள் திரையுலகல் மின்னி வந்த திரு கமலஹாசன் அவர்கள் சினிமாவில் நடிப்பு, டைரக்ஷன், தயாரிப்பு, பாடகர் என பன்முகத்திறமை கொண்ட ஒரு சிறந்த கலைஞனாக அனைவராலும் அறியப்பட்டவர். சினிமாவில் அவருக்குத் தெரியாத துறைகளை இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து துறைகளிலும் பல விஷயங்களை கற்றுத் தேர்ந்தவர். பல மொழிகளும் அறிந்தவர். தென்னிந்திய சினிமா முதல் பாலிவுட் வரை தன் வெற்றி கொடியை நாட்டியவர். சினிமாவில் அவர் ஒரு அறிவிஜீவி என்பதற்கு மாற்று கருத்து இல்லை.  அதனால் தானோ என்னவோ அரசியலிலும் நாம் அதே போன்று எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்று எண்ணி ஓவர் கான்ஃபிடன்ஸ் உடன் மக்கள் நீதி மையம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். தொடங்கிய புதிதில் வீராவேசமாக பல கருத்துக்களை தெரிவித்தார். குறிப்பாக அவரது தேர்தல் பிரச்சார விளம்பரத்திலேயே குடும்ப அரசியல், ஊழல், நிர்வாகத் திறமையின்மை போன்ற பல விஷயங்களுக்கு எதிராக கோபப்பட்டு தன் சின்னமான டார்ச் லைட்டை டிவியின் மேல் போட்டு உடைத்தார்.   ஆனால் அவரது அரசியல் எதிர்ப்புகள் எல்லாம் ஒரே தேர்தலில் காணாமல்...

ஊழலில் பட்டம் பெற்றுள்ளது தமிழ்நாடு. மார்க்கண்டேய கட்ஜூ கருத்து

Image
  இந்தியாவிலேயே மிகவும் ஊழல் நிறைந்த குடும்பத்தால் தமிழ்நாடு ஆளப்படுகிறது.முன்னாள் நீதிபதி கருத்து.  முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "இந்தியாவில் ஊழல் அதிகமாக உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.ஊழல் இல்லாமல் எதுவும் நகராத மாநிலம் என்ற பெருமையைப் பெறலாம், இந்தியாவிலேயே மிகவும் ஊழல் நிறைந்த குடும்பத்தால் தமிழ்நாடு ஆளப்படுகிறது. முன்னாள் பிரதமர் நேரு, முதலமைச்சர் காமராஜரின் கீழ் இருந்த தமிழ்நாட்டை இந்தியாவின் சிறந்த நிர்வாக மாநிலம் என்று வர்ணித்த காலத்திலிருந்து இது வெகு தொலைவில் உள்ளது.  தமிழ்நாட்டில் ஆளும் நவ-பாசிச திமுக ஆட்சி, அதன் ஊழல் மற்றும் பிற தவறான செயல்கள் குறித்த எந்தவொரு எதிர்ப்பையும் அல்லது விமர்சனத்தையும் பொறுத்துக்கொள்ள விரும்பாதது போல் தெரிகிறது, எந்தவொரு எதிர்ப்புகளையும் அடக்குவதற்காக, மாநிலத்தில் ஒரு பயங்கர ஆட்சியைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.  இதன் விளைவாக, பயங்கரமான விளைவுகளை எதிர்கொள்ள அஞ்சி, எந்த ஊடகவியலாளரும் அதற்கு எதிராகப் பேசத் துணிவதில்லை. சவுக்கு சங்கர் தமிழ்நாட்டில் பிரபலமான, துணிச்சலான மற்றும் நேர்மையான யூட...

youtuber சவுக்கு சங்கர் கைது

Image
சவுக்கு சங்கர் தனது youtube காணொளிகளில் தொடர்ந்து திமுகவை தாக்கி பேசி வருவதை தொடர்ந்து அவர் மீது பல வழக்குகளை திமுக அரசு தொடர்ந்து பதிவு செய்து வருகிறது.  அந்த வகையில் தற்போது மேலும் புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்து அவர் ஜாமீனில் வெளியே வர முடியாத வண்ணம் நீதிமன்றங்கள் விடுமுறை தினமான சனிக்கிழமை இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.  இது ஊடகத்தின் மீதான ஆளும் கட்சியின் அடக்குமுறை என்று ஊடகத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

திராவிட மாடல் vs தேசிய மாடல்

Image
 நமது தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் திமுக தலைமையிலான அரசு தங்களை திராவிடம் மாடல் அரசு என சொல்லிக் கொள்கிறது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தேசிய மாடல் என அழைக்கப்படுகிறது.  இந்த இரு அரசுகளும் தங்கள் ஆட்சி காலத்தில் செய்த நன்மைகள் திட்டங்கள் பற்றி பார்ப்போம்.  திராவிட மாடல்   ஆட்சிக்கு வந்தவுடன் முதல் அறிவிப்பாக மகளிர்க்கு இலவச பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டது. இதில் மகளிர் இலவசமாக பயணம் செய்ய வசதியாக இருந்தாலும் போக்குவரத்து துறை கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதால் தேவையான அளவிற்கு பேருந்துகளை இயக்க முடிவதில்லை என்ற பிரச்சனையும் வரும் பேருந்துகள் சரியான நிறுத்தங்களில் நிறுத்துவதில்லை என்ற பிரச்சனையும் பேருந்துகளில் தரம் மிகக் குறைவாக உள்ளதாகவும் பயணிகள் பயணம் செய்யவே பயப்படும் நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் என்ற திட்டம் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் பல மாதங்கள் கடந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் அதை வைத்து அரசியல் அழுத்தம் கொடுத்ததால் அனைவருக்கும் ஆயிரம் உதவித்தொகை என்பது மாறி தகுதி உள்ளவ...

மத வழிபாடு பற்றி அரசியல் அமைப்பு என்ன சொல்கிறது?

Image
 நமது இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டம் இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்று குறிப்பிடுகிறது. இங்கே ஒருவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் அவர் விருப்பப்படி அவரது மத வழிபாட்டு முறைகளை பின்பற்ற உரிமை உள்ளது.  ஆனால் நமது தமிழ்நாட்டில் இந்து மதத்தை தவிர மற்ற எல்லா மதங்களுக்கும் அந்த உரிமை உள்ளது. ஆனால் இந்து மதத்தை நமது தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கையில் வைத்துக்கொண்டு குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போன்று வைத்திருக்கிறது.  இந்திய அரசு சட்டப்படி இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்ள அதிகாரம் கோயில் சொத்துக்களை நிர்வகித்து அதன் வரவு செலவு கணக்குகளை சரி பார்த்து கோயிலுக்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுப்பது மட்டுமே ஆகும். மற்றபடி நமது இந்து சமயத்தின் ஆகம விதிகள், வழிபாட்டு சட்டதிட்டங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளில் தலையிட உரிமை இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனால் தற்போது இந்து சமய அறநிலைத்துறை என்பது முழு வீச்சில் இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நமது இந்து கோவில்களின் நிதி வருவாய் எடுத்து அரசு பல்வேறு ...

அரசு பேருந்துகள் அடிக்கடி விபத்தில் சிக்குவது ஏன்?

Image
  சமீப காலமாக தமிழ்நாட்டில் பேருந்து விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அரசு பேருந்துகள் பல இடங்களில் சிறு மற்றும் பெரு விபத்துக்கு உள்ளாகி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் அரசு பேருந்துகள் பழுதாகி சாலைகளின் நடுவே நிற்பது தொடர்கதை ஆகி வருகிறது.  இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுவது  அரசு பேருந்துகளின் தரம்   கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்குவதால் போக்குவரத்து நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதனால் பேருந்துகளை சரியாக பராமரிக்கவும் உதிரி பாகங்கள் வாங்கவும் நிதி இல்லாமல் தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் தவித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் பேருந்துகளை சரி செய்ய போக்குவரத்து கழகங்களின் பணிமனையில் போதிய மெக்கானிக்கல் மற்றும் உதவியாளர்கள் இல்லை என்ற கருத்தும் நிலவுகிறது. பல இடங்களில் காலாவதியான பேருந்துகளும் ஓட்டை உடைசல் பேருந்துகளையுமே இயக்கச் சொல்லி போக்குவரத்து கழக நிர்வாகங்கள் ஓட்டுநர்களை கட்டாயப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. இதுபோன்ற தரம் இல்லாத பேருந்துகளை இயக்குவதால் தான் விபத்துக்க...

திராவிட மாடல் கட்டிடக்கலையின் தரம்

Image
 தியாகராஜா நகர் பாலம் - பாளையங்கோட்டை !!! கண் முன்னே கரையும் வரிப்பணம்? - ஒரு சமூகப் பார்வை! 🚧💔 ​கடந்த மார்ச் 2024-ல் தான் இந்த பாலம் திறக்கப்பட்டது. ஆனால், இன்று பார்த்தால் சுமார் 5 முதல் 6 இடங்களில் சாலை சிதிலமடைந்து, ஜல்லிகள் பெயர்ந்து போயுள்ளன. இரண்டு ஆண்டுகள் கூட முழுமையாக ஆகவில்லை, அதற்குள் இப்படியொரு நிலைமை! ​ஏற்கனவே வெள்ளத்தில் சேதமடைந்த ஏரல் மற்றும் முக்காணி பாலங்களின் கதியை நினைவூட்டுவது போல இதுவும் உள்ளது. நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்கள் கட்டிய ஸ்ரீவைகுண்டம் பாலம், எத்தனையோ வெள்ளங்களையும் கால மாற்றங்களையும் தாண்டி இன்றும் கம்பீரமாக, தரமாக நிற்கிறது. ​ஆனால், நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்த இக்கால கட்டத்தில், மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் பாலங்கள் ஏன் இப்படி தரமற்றுப் போகின்றன? தரமான கட்டுமானம் என்பது ஆடம்பரம் அல்ல, அது மக்களின் அடிப்படை உரிமை மற்றும் பாதுகாப்பு சார்ந்த விஷயம். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனிப்பார்களா? ​✍️ சா.சசிகுமார் ​📸 Photo by Sasikumar Samikan  ​#SocialAwareness #BridgeSafety #Infrastructure #Tirunelveli #TamilNadu #PublicSafety #Ro...

சென்னை வெள்ளத்தில் தத்தளிக்க காரணம்

Image
  கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை ஒவ்வொரு மழையின் போதும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு தத்தளிப்பது வாடிக்கையாகிவிட்டது. இதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால் சென்னையின் மக்கள் தொகை நெருக்கம், விதி மீறிய கட்டிடங்கள், நீர் நிலைகள்  ஆக்கிரமிப்பு, நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் அவற்றை பராமரிப்பதில் குறைபாடு போன்ற பல காரணங்கள் உண்டு.  இது கடந்த 25, 30 ஆண்டுகளுக்கும் மேலாகவே சீர்கேடுகள் ஆரம்பித்து தற்போது புரையோடி விட்டன.  சென்னை மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆட்சியில் நல்லது நடக்கும் அந்த ஆட்சியில் நல்லது நடக்கும் என்று நம்பி மாறி மாறி வாக்களித்து ஏமாந்து கொண்டு உள்ளனர்.  தற்போது நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகள் ஏன் பயனளிக்கவில்லை என்று ஆராய்ந்து பார்த்ததில் நமது அரசியல் அரசு ஊழியர்களாக பணியாற்றும் பலரும் ஊழல் மற்றும் லஞ்சம், சிபாரிசு போன்றவற்றை பயன்படுத்தி வேலையை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இவர்களில் பலர் தகுதியற்றவர்களாகவும் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் அவர்கள் அரசு பணி ஆணையை பெறும் பொழுது நாம் எப்படி ஊழல் செய்து சம்பாதிக்கலாம், வேலை செய்யாமல் எப்படி பொழுதை போ...

சொந்தக்காசில் சூனியம் வைத்த உதயநிதி

Image
  திமுக அறிஞர் அண்ணா ஆரம்பித்த கட்சி என்றாலும் அக்கட்சி தற்போது கருணாநிதி குடும்பம் மொத்தம் தான் ஆண்டு அனுபவித்து வருகிறது.  அந்த வகையில் தற்போது கருணாநிதி தொலைந்து ஸ்டாலின் ஸ்டாலினை தொடர்ந்து உதயநிதி தலைமை பதவிக்கு வர தயாராகிக் கொண்டிருக்கிறார்.  அதற்கு முன்னோட்டமாக வாழும் சட்டமன்றத் தேர்தலில் அவரை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யும் வகையில் ஒரு புதிய பாடலை தயார் செய்து திமுக வெளியிட்டுள்ளது.  அது தற்போது எதிர்மறை பாதிப்பை அதிகமாக திமுகவிற்கு வழங்கி வருகிறது. அந்தப் பாடலை வைத்து தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் ரசிகர்கள், அதிமுக தொண்டர்கள், பாஜக தொண்டர்கள் மற்றும் திமுக எதிர்ப்பாளர்கள் அனைவரும் உதயநிதியையும் அந்தப் பாடலையும் வைத்து சிறப்பான முறையில் ட்ரோல்  செய்து வருகிறார்கள். இது திமுகவுக்கு பலத்த பின்னாடைவாகவே பார்க்கப்படுகிறது.  தமிழக வெற்றி கழக விஜய் மற்றும் பாஜக அண்ணாமலை போன்ற இளம் தலைவர்களுக்கு எதிராக உதயநிதியை பெரிய தலைவராக ஒரு பிம்பத்தை உருவாக்க நினைத்து தனது சொந்த காசி சூனியம் வைத்தது போல் கொஞ்சநஞ்சம் திமுகவினரிடம் இருந்த தலைவர் இமேஜையும் டோட்டல் ட...

தமிழகமெங்கும் சாலைகளின் அவலநிலை

Image
  தமிழகத்தில் தற்போது எல்லா இடங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மக்கள் தங்கள் அன்றாட வேலைகள் மற்றும் பள்ளி செல்லுதல் போன்ற பல காரணங்களுக்காக தினசரி வெளியே சென்று வரும் நிலையில் நமது தமிழ்நாட்டின் பெரும்பாலான சாலைகள் வயல்வெளிகளைப் போல் சேரும் சகதியும் ஆக மழை நீரோடு சேர்ந்து கழிவு நீரும்  சாலைகளில் தேங்கியுள்ளது.  இதில் பயணிப்பதால் பலருக்கும் பலவிதமான நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் சாலைகளில் உள்ள பள்ளமேடுகள் நீர் நிரம்பியுள்ளதால் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் பலரும் விபத்துக்குள்ளாகும் நிகழ்வுகளும் அன்றாடம் நடைபெற்று வருகிறது.  திராவிட மாடல் ஆட்சி என்று பெருமை பேசும் இந்த ஆட்சியாளர்கள் கடந்த நான்கரை வருடங்களாக தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்கள் எதிலும் சாலைகளை சிறப்பாக சீரமைத்ததாக ஒரு தமிழக சாமான் என் கூட தெரிவிக்கவில்லை. சில சாலைகள் போடப்பட்டாலும் கூட அவை தரத்தில் மிக மோசமாகவும் ஒரு மலைக்கு கூட தாங்காத அளவிற்கு தகுதியற்றதாக உள்ளது.  இதற்கு நாம் ஆட்சியாளர்களை குறை சொல்லி ஒன்றும் பிரயோஜனம் இல்லை. இலவசத்திற்காகவும் காசுக்...

தென்காசி கொட்டா குளத்தின் பரிதாப நிலை

Image
 தென்காசி மாவட்டம் சுமந்துபுரம் ஊராட்சி கொட்டாக்குளம் பஞ்சாயத்து உட்பட்ட கொட்டா குளம் நீர்நிலை தற்போது சுகாதார சீர்கேடுக்கு வழிவகுக்கும் வகையில் மிக மோசமாக உள்ளது.  குளக்கரை பகுதியில் குப்பை குளங்களும் மது பாட்டில்களும் கொட்டிக் கிடக்கின்றன. சில சமயங்களில் துர்நாற்றமும் வருகிறது. மேலும் குளத்தில் நீர்நிலை என் மீது பெருமளவில் அமளிச் செடிகள் சூழ்ந்துள்ளது. நீர்நிலை முழுவதுமே கழிவுநீர் போல் காட்சி அளிக்கிறது.   அது மட்டுமல்லாது குளக்கரை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகிறது. நீர்நிலை ஆக்கிரமிப்பு என்பது தென்காசி பகுதியில் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. இதே நிலை நீடித்தால் நமது பகுதியில் பெய்யும் பெருமழைகளில் சில ஆண்டுகளில் சென்னை போல் இங்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் வர வாய்ப்புள்ளது.  தற்போது நடு பல்க் சந்திப்பு பகுதியில் மழை நீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இதற்கு அங்குள்ள குளத்தின் கரை மேல் உள்ள ஆக்கிரமிப்புகளை காரணம்.   இனியும் தென்காசி மக்கள் விழித்துக் கொண்டு இந்த ஆக்கிரமிப்புகளை பற்றிய கேள்வி எழுப்பாமல் நீர்...