திராவிட மாடல் கட்டிடக்கலையின் தரம்



 தியாகராஜா நகர் பாலம் - பாளையங்கோட்டை !!!


கண் முன்னே கரையும் வரிப்பணம்? - ஒரு சமூகப் பார்வை! 🚧💔



​கடந்த மார்ச் 2024-ல் தான் இந்த பாலம் திறக்கப்பட்டது. ஆனால், இன்று பார்த்தால் சுமார் 5 முதல் 6 இடங்களில் சாலை சிதிலமடைந்து, ஜல்லிகள் பெயர்ந்து போயுள்ளன. இரண்டு ஆண்டுகள் கூட முழுமையாக ஆகவில்லை, அதற்குள் இப்படியொரு நிலைமை!

​ஏற்கனவே வெள்ளத்தில் சேதமடைந்த ஏரல் மற்றும் முக்காணி பாலங்களின் கதியை நினைவூட்டுவது போல இதுவும் உள்ளது. நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்கள் கட்டிய ஸ்ரீவைகுண்டம் பாலம், எத்தனையோ வெள்ளங்களையும் கால மாற்றங்களையும் தாண்டி இன்றும் கம்பீரமாக, தரமாக நிற்கிறது.



​ஆனால், நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்த இக்கால கட்டத்தில், மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் பாலங்கள் ஏன் இப்படி தரமற்றுப் போகின்றன? தரமான கட்டுமானம் என்பது ஆடம்பரம் அல்ல, அது மக்களின் அடிப்படை உரிமை மற்றும் பாதுகாப்பு சார்ந்த விஷயம். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனிப்பார்களா?




​✍️ சா.சசிகுமார்


​📸 Photo by Sasikumar Samikan 


​#SocialAwareness #BridgeSafety #Infrastructure #Tirunelveli #TamilNadu #PublicSafety #RoadSafety #CivilEngineering #Srivaikuntam #Eral #Mukkani #ConstructionQuality #SocialIssue #VoiceForChange #TaxpayersMoney #Development #RealityCheck #BrokenRoads #Nellai #Thoothukudi #India #Photography #StreetPhotography #DocumentaryPhotography #Truth #Awareness #Report #GovtAttention #SafeRoads #TamilNaduDiaries

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?