திராவிட மாடல் vs தேசிய மாடல்
நமது தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் திமுக தலைமையிலான அரசு தங்களை திராவிடம் மாடல் அரசு என சொல்லிக் கொள்கிறது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தேசிய மாடல் என அழைக்கப்படுகிறது. இந்த இரு அரசுகளும் தங்கள் ஆட்சி காலத்தில் செய்த நன்மைகள் திட்டங்கள் பற்றி பார்ப்போம். திராவிட மாடல் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் அறிவிப்பாக மகளிர்க்கு இலவச பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டது. இதில் மகளிர் இலவசமாக பயணம் செய்ய வசதியாக இருந்தாலும் போக்குவரத்து துறை கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதால் தேவையான அளவிற்கு பேருந்துகளை இயக்க முடிவதில்லை என்ற பிரச்சனையும் வரும் பேருந்துகள் சரியான நிறுத்தங்களில் நிறுத்துவதில்லை என்ற பிரச்சனையும் பேருந்துகளில் தரம் மிகக் குறைவாக உள்ளதாகவும் பயணிகள் பயணம் செய்யவே பயப்படும் நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் என்ற திட்டம் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் பல மாதங்கள் கடந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் அதை வைத்து அரசியல் அழுத்தம் கொடுத்ததால் அனைவருக்கும் ஆயிரம் உதவித்தொகை என்பது மாறி தகுதி உள்ளவ...