அண்ணாமலையை வீழ்த்த ரகசிய திட்டமா?

 தமிழகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் முக்கிய செய்தி பிஜேபி மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் நற்பெயரை கெடுப்பதற்கும் அவருடைய அரசியல் செயல்பாடுகளை தடுப்பதற்கும் மிகப்பெரிய சதி நடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

பொதுவாகவே திமுக போன்ற திராவிட கட்சிகளின் எதிரிகளை அழிக்க அவர்கள் எடுக்கும் முக்கிய ஆயுதம் தனிமனித தாக்குதல் மற்றும் அவர்களின் நற்பெயர் களங்கம் ஏற்படுத்துதல் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை தனி நபர் மீது தொடுத்து அதனை மக்களிடம் உண்மை போல் நம்ப வைத்து அவர்களின் அரசியல் ஆளுமையை சிதைக்க முயற்சி செய்வார்கள். அதில் பலமுறை அவர்கள் வெற்றியும் கண்டுள்ளனர்.

குறிப்பாக நீதி கட்சியும் திராவிட கூட்டங்களும் காமராஜர் கக்கன் ராஜாஜி போன்ற பெரிய தலைவர்களின் தொடங்கி தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வரை அவர்கள் கையாண்டபாணி மக்களுக்கு நன்கு தெரியும்.

தற்போது திரு அண்ணாமலை அவர்களின் தனி மனித ஒழுக்கத்தை கேள்விக்குள் ஆக்கும் விதமாக அவர்களின் பிஜேபி கட்சிக்குள்ளே சில ஸ்லீப்பர் செல்களை உருவாக்கி அவர்களின் மூலம் திரு அண்ணாமலை அவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைக்க சதி நடப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

திராவிட கட்சிகளால் திரு அண்ணாமலை அவர்களின் அரசியல் வியூகங்களை எதிர்கொள்ள முடியாமல் தட்டு தடுமாறி கொண்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் எப்படியாவது அண்ணாமலை அவர்களை அரசியலில் இருந்து ஓரம் கட்ட அவர்களின் பழைய பாணியை கையில் எடுத்துள்ளனர்.

சில காலங்களாகவே திரு அண்ணாமலை அவர்கள் தமிழக மக்களிடம் நம்பிக்கை கூறிய அரசியல் தலைவராக அறியப்பட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இதனால் அவரை வீழ்த்திவிட்டால் மட்டுமே அவர்களது வாரிசு அரசியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று திமுக போன்ற கட்சிகள் நம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஷயத்தில் தமிழக மக்களும் திரு அண்ணாமலை அவர்கள் விழிப்புடன் இருந்து அவர்களது சதியை முறியடித்து மீண்டு வர வேண்டும்.



#Pothigaitimes #Tamilnadu #Today #Trending #Bjp #Political #Annamalai 

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?