தேசிய கூட்டணி தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் இணைந்தால் பலன் கிடைக்குமா?
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தற்போது தமிழகம் இருக்கும் போது மொத்த அரசியல் கட்சிகளின் கவனமும் தமிழக வெற்றி கழகம் என்ன செய்யப் போகிறது என்று காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக பாஜக போன்ற கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு விஜய் ஆதரித்து எப்படியாவது அவரை நமது கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறது.
இது எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெரும் என்று பார்த்தால் விஜய் எப்போதும் பாஜகவுக்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்து வந்ததால் இந்தக் கூட்டணி மீது மக்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கும் என்பதை பற்றி ஒரு கேள்வி எழுகிறது.
அதுமட்டுமல்லாமல் தமிழக வெற்றிக் கழகத்தின் மீது தற்போது ஒரு பெரிய அதிருப்தி நிலவுகிறது. கரூர் சம்பவத்தை முன்வைத்து அரசியலில் அவரை ஓரங்கட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தில் சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிரான பரப்புரைகள் முறுக்கி விடப்பட்டுள்ளன. இது போன்ற செயல்களில் ஈடுபடுவது யார் என்பது மக்களுக்கே நன்றாக தெரியும்.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இணைந்தாலும் எந்தளவுக்கு தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்கு சதவீதம் உள்ளது என்பதும் அவருடைய கட்சி கட்டமைப்பில் இருந்த பல நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியே சென்று விட்டதாலும் தமிழக வெற்றி கழகத்தால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த அளவுக்கு வாக்குகளை பெற்று தர முடியும் என்பது உறுதியாக சொல்ல முடியாது. அதுமட்டுமல்லாமல் தமிழக வெற்றி கழகத்தில் உள்ள தொண்டர்கள் பலரும் விஜய் பாஜகவை எதிர்த்து சொல்லிவிட்டு தற்போது அவர்களிடமே சரணாகதி அடைவதை பலரும் விரும்புவதற்கு வாய்ப்பில்லை. அதேபோல் தேசிய ஜனநாயக கூட்டணியிலும் பல பாஜக தலைவர்கள் திரு விஜய் அவர்களை பலவாறு விமர்சித்து விட்டு இன்று அவர்களோடு சேரும்பொழுது ஆரம்ப கட்டத்தில் சில நெருடர்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆனாலும் திமுக கூட்டணியிலும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் விசிக மதிமுக போன்ற கட்சிகள் திமுகவை கேவலமாக விமர்சித்து விட்டு பின்னர் தற்போது அவர்கள் கூட்டணியில் திருப்பதி பார்க்கும் பொழுது மக்கள் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியும் எடுபட வாய்ப்புள்ளது போலவே தெரிகிறது.
அதுமட்டுமல்லாது இந்தி கூட்டணியில் உள்ள திமுக ஆட்சியின் மீது பொதுமக்கள் பலரும் மிகுந்த கோபத்துடனும் வெறிப்பிலும் உள்ளனர். திமுக ஆட்சியில் பெரும்பாலான சாமானிய மக்களிடம் பேசும் போது அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை போதைப் பொருட்கள் அதிகம் புழங்குகின்றன.ஊழல் தலைவிரித்தாடுகிறது. திமுக கட்சியில் உள்ள அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை ஒருவரும் மக்களை மதிப்பதில்லை. சட்டம் ஒழுங்கிலும் மக்களுக்கான அடிப்படை பாதுகாப்பினை வழங்குவதிலும் திமுக அரசு தோல்வியை கண்டுள்ளது என்று பொதுமக்களில் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
மக்களிடம் கலந்துரையாடிய போது அவர்கள் தெரிவித்தது முக்கியமான கருத்து என்னவென்றால் கரூர் சம்பவத்தில் அண்ணாமலை போன்ற முக்கிய பாஜக தலைவர்களும் விஜய் மீது தவறே இல்லாதது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குவது நியாயமற்றது. இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை மிகுந்த பொறுப்பு விஜய்க்கு உள்ளது என்பதை மறுக்க இயலாதது. ஆனால் அண்ணாமலை போன்ற தலைவர்கள் எழுப்பும் கேள்விகளான உளவுத்துறை ஏன் இதைப் பற்றி சரியான தகவல்களை திரட்டி ஏற்கனவே அறிக்கை அளிக்கவில்லை? என்பதும், காவல்துறை ஏன் முன்கூட்டியே மக்களை அனுமதித்தனர் என்பதும் கடந்த நான்கு ஐந்து கூட்டங்களில் விஜய்க்கு வரும் கூட்டங்களை பார்த்த பின்பும் எதற்காக வேலுச்சாமிபுரம் போன்ற குறுகலான பகுதியில் கூட்டம் நடத்த அனுமதி தானே என்பதும் சரியான கேள்விகளாகவே தோன்றுகின்றன. இந்த சம்பவத்திற்கு விஜய் எந்த அளவுக்கு பொறுப்பு அதே அளவிற்கு தமிழக அரசின் மீதும் பொறுப்புள்ளது என்பது பல அரசியல் விமர்சகர்களின் கருத்தாகவும் பொதுமக்களின் கருத்தாகவும் உள்ளது.
அனைத்து கருத்துக்களின் வைத்து ஒப்பீடு செய்யும் பொழுது ஒருவேளை விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால் தேர்தலில் மிகுந்த இழுப்பறி நிலையோஅல்லது ஆளுங்கட்சியின் மீது உள்ள அதிருப்தியின் காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணி சிறிய வித்தியாசத்தில் வெல்லும் நிலையோ அல்லது கடைசி நேர பணப்பட்டுவாடா போன்ற விஷயங்களால் ஆளும் திமுக அரசு சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெறவும் வாய்ப்பு உள்ளது. என்பது அரசியல் நோக்கங்களின் கருத்தாகவும் பொதுமக்கள் மத்தியில் கருத்துக்களாக உலா வருகின்றன.
எங்கள் பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் களுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி. தங்கள் மேலான கருத்துக்களை எங்கள் தளத்தில் கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். எங்கள் தளத்தை சப்ஸ்கிரைப் செய்து உதவுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.



Comments
Post a Comment