2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்
நடந்து முடிந்த 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பலரும் எதிர்பார்க்காத ஆச்சரியமான முடிவுகளை மக்கள் கொடுத்துள்ளனர். இந்தத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் போது முன்னாள் அரசு கொடுத்த உதவித்தொகை இலவசங்கள் போன்ற எதையும் எதிர்பார்க்கவில்லை என்பதையும், மேலும் வாக்குக்கு பணம் பெற்றுக் கொண்டு பலரும் மாற்றி வாக்களித்துள்ளதையும் உறுதிப்படுத்துகிறது. இதன் மூலம் அரசியல்வாதிகள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இனி வரும் காலங்களில் நீங்கள் வாக்குச் செலுத்த பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி விடலாம் என்பதை நினைத்துப் பார்க்க முடியாது என்பதை தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் ஆட்சி முடியும் தருவாயில் நீங்கள் மக்களை ஏமாற்ற கொடுக்கும் சிறப்பு உதவித்தொகைகள், விழாக்கால தொகுப்புகள், மற்றும் உதவித்தொகைகள் போன்ற எதுவும் வாக்குகளைப் பெற்றுத் தராது என்பதை நிரூபித்துள்ளனர். அதற்கு பதிலாக ஐந்தாண்டுகளும் சிறப்பான சட்டம் ஒழுங்குடன், தரமான உட்கட்டமைப்பு, ஊழலற்ற ஆட்சி, சிறந்த மருத்துவ வசதி, சிறந்த பொதுப் போக்குவரத்து, சிறப்பான தரமான கல்வி முறை இதுபோன்ற வசதிகளை செய்து கொடுத்தால...