இட ஒதுக்கீடு சமூகத்தை சம நிலைக்கு கொண்டு வந்து விட்டதா?
நமது இந்திய திருநாட்டில் அரசியலமைப்புச் சட்டம் ஆரம்ப காலத்தில் இருந்தே இட ஒதுக்கீடு சட்டம் அமலில் உள்ளது. இது நமது இந்திய நாட்டின் சமூக அமைப்புகளை சமநிலைக்கு கொண்டு வரும் நோக்கோடு உருவாக்கப்பட்டது. தற்போது சுதந்திரம் அடைந்த பல ஆண்டுகாலம் ஆன பின்னரும் ஆரம்ப காலத்தில் இருந்த அதே இட ஒதுக்கீடு முறை இன்றும் தொடர்ந்து பிரிந்து வருகிறது. எப்போதுமே ஒரு சட்டம் காலம் மாற்றத்திற்கு ஏற்ப மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே அது மக்களுக்கு பயனளிக்கும் என்பது நிதர்சனம். சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீடு முறையில் தற்போது பலன் பெற்று வரும் மக்களை யார் என்று கணக்கெடுத்தால் கடந்த இரண்டு மூன்று தலைமுறைகளாக முதன்முறை பலன் பெற்றவர்களே அவர்களது வாரிசுகளுக்கு அப்பலன்களை கொண்டு சேர்ப்பது தெரியவரும். ஒரு விளிம்பு நிலை சமூகம் சமநிலை பெற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டத்தின் மூலமாக ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மட்டும் பலன் பெற்று வருகிறார்கள் என்பது நமது குற்றச்சாட்டு. அதே விளிம்பு நிலை பகுதியில் உள்ள மக்கள் இன்னமும் தங்...