ஆம்னி பேருந்தில் நகை திருட்டு. குற்றவாளி கைது
தூத்துக்குடி மாவட்டம்கயத்தாறு அருகே உணவகத்தில் நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தில் நகை திருட்டு -மத்தியபிரதேசத்தில் முக்கிய குற்றவாளி கைது; 40. 08 பவுன் நகை மீட்பு* திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பிலிப் காலனியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் சகாயராஜ். இவரது மனைவி ஜூலியட் லதா ஜெயகுமார் (59). தனியார் கல்லூரி உதவி பேராசிரியை. இவரும் அவரது கணவர் ஜஸ்டின் சகாயராஜ் இருவரும் கடந்த மாதம் 27ஆம் தேதி இரவு திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பேருந்தில் சென்றனர். பேருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறையடுத்த கரிசல்குளம் விளக்கில் சாலையோர உணவகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது பேருந்தில் ஜூலியட் லதா ஜெயக்குமார் சுமார் 40.08 பவுன் தங்க நகை உடன் வைத்து விட்டு சென்ற பையை காணாமல் போயிருந்தது.இதுகுறித்து கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பயணிகளிடம் விசாரித்தனர். மேலும் வழக்குப்பதிந்து உணவகத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் பதிவாகி இருந்த செல்போன் அழைப்புகள் விபரங்களையும் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து தூத்துக்குடி...