விஜயின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் தனது கட்சியின் பிரச்சார பயணத்தின் போது கரூரில் நடைபெற்ற துயரப் சம்பவத்திற்கு பின்னர் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் அமைதியாக இருக்கிறார்.
இந்நிலையில் கரூர் சம்பளத்திற்கு தார்மீக ரீதியில் விஜய் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஏனெனில் அவர் பிரச்சாரக் கூட்டத்திற்கு பல மணி நேரம் தாமதமாக வந்ததும் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யாததுமே இது போன்றதொரு பேரைச் சம்பவத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அது தவிர மற்ற பல காரணங்கள் இருந்தாலும் இது தமிழக வெற்றி கழகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி என்பதால் அவர்களுக்கே பொறுப்பு கூடுதல் என்பது அனைவரும் அறிந்தது.
இந்த கரூர் சம்பவத்திற்கு பின் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பலரும் தலைமறைவாக உள்ளனர். அது மட்டுமல்லாது பலர் கட்சியை விட்டு வெளியேறி விட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இதன்பின் விஜயின் எதிர்காலம் என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது.
இனி விஜய் அவர்கள் அரசியலில் வேறு ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணியுடன் போட்டியிட்டால் மட்டுமே ஓரளவு வாக்குகளை பெற முடியும். எனவே அவர் ஏதாவது ஒரு அரசியல் கட்சியுடன் கூட்டணி வைக்க முடிவு செய்யலாம் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.
அவர் ஒருவேளை அவர் அரசியலில் இருந்து விலகி முழுமையாக நடிக்க சென்றால் அது அவருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது உண்மை.
ஏனெனில் மக்களைப் பொறுத்தவரை அவர் ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதியாகவே தெரிவார். தமிழ்நாட்டின் முன்னணி நடிகர் மற்றும் சூப்பர் ஹீரோ போன்ற பட்டங்களோடு ஒரு பெரிய பிம்பத்தை உருவாக்கி விட்டு இன்று அவரது உண்மை முகத்தை மக்கள் பார்க்கும் பொழுது அவர் மீது இருந்த ஈர்ப்பு முழுமையாக குறைந்து ஒரு வித வெறுப்பு உருவாக வாய்ப்புள்ளது.
இதனால் அவர் திரும்ப நடிக்கும் படங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றி படங்களாகவும் மாபெரும் வெற்றி படங்களாகவோ அமைய வாய்ப்பில்லை. இதனால் அவருக்கு தமிழ் சினிமாவிலும் இறங்கு முகமாக அமைய வாய்ப்புள்ளது.
அது போன்ற ஒரு நிலை வந்தால் அரசியலிலும் சினிமாவிலும் ஒரு தோல்வியின் சின்னமாகவே விஜய் பார்க்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
சரியான திட்டமிடலும் தகுந்த முன்னேற்பாடுகளும் இல்லாமல் யார் எந்த ஒரு வேலை செய்தாலும் அது தோல்வில்தான் முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் விஜய்யின் தமிழக வெற்றி கழகம்.
.jpeg)
.jpeg)
Comments
Post a Comment