இந்திய பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இப் போட்டியில் 337 என்ற பெரிய இலக்கை எதிர்நோக்கி விளையாடிய இந்திய அணி ஆரம்பத்தில் சிறிது தடுமாறினாலும் பின்பு ஜெமிமா மற்றும் இந்தியனின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் இருவரின் சிறப்பான ஆட்டம் காரணமாக வெற்றிக்கு அடித்தளம் இட்டனர். மேலும் ரிச்சா, ஸ்ரீமித்தி மந்தனா, தீப்தி ஷர்மா போன்றோரின் ஆட்டமும் குறிப்பிடத்தக்கது. இவர்களின் ஆட்டத்தின் காரணமாகவே இந்திய அணியின் ரன் ரேட் உயர்ந்தது. இந்தப் போட்டியை பொருத்தவரை ஜெமிமா மிகச்சிறப்பாக ஆடினார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவருடைய பங்களிப்பு இந்த வெற்றிக்கு மிக முக்கியமானது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் நேற்று முதல் எல்லா சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஜெமிமா மட்டுமே இந்த வெற்றிக்கு காரணம் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு யூடியூப் அவர்களும் சமூக வலைத்தள வாசிகளும் தங்கள் பார்வையாளர்களின் எண்ணிக்கை உயர்த்த பயன்படுத்திக் கொள்கிறார்களோ என...