இந்திய பெண்கள் கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமாவை ஊடகங்கள் தங்கள் விளம்பரத்துக்கு பயன்படுத்துகிறதா?
இந்திய பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இப் போட்டியில் 337 என்ற பெரிய இலக்கை எதிர்நோக்கி விளையாடிய இந்திய அணி ஆரம்பத்தில் சிறிது தடுமாறினாலும் பின்பு ஜெமிமா மற்றும் இந்தியனின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் இருவரின் சிறப்பான ஆட்டம் காரணமாக வெற்றிக்கு அடித்தளம் இட்டனர்.
மேலும் ரிச்சா, ஸ்ரீமித்தி மந்தனா, தீப்தி ஷர்மா போன்றோரின் ஆட்டமும் குறிப்பிடத்தக்கது. இவர்களின் ஆட்டத்தின் காரணமாகவே இந்திய அணியின் ரன் ரேட் உயர்ந்தது.
இந்தப் போட்டியை பொருத்தவரை ஜெமிமா மிகச்சிறப்பாக ஆடினார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவருடைய பங்களிப்பு இந்த வெற்றிக்கு மிக முக்கியமானது என்பதை மறுப்பதற்கு இல்லை.
ஆனால் நேற்று முதல் எல்லா சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஜெமிமா மட்டுமே இந்த வெற்றிக்கு காரணம் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு யூடியூப் அவர்களும் சமூக வலைத்தள வாசிகளும் தங்கள் பார்வையாளர்களின் எண்ணிக்கை உயர்த்த பயன்படுத்திக் கொள்கிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது.
மேலும் அதில் தமிழில் கம்பி கட்டும் கதை என்ற முகநூல் பக்கத்தை நடத்தும் ஒரு ஒரு கேவலமான பிறவி( மன்னிக்கவும் அவனைப் போன்ற ஒருவரை மரியாதையாக அழைக்க மனம் வரவில்லை) இதிலும் ஒரு மத விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறான்.
ஜெமிமாவை போற்றி பாராட்டி தூக்கி கொண்டாடி கொண்டிருக்கும் மக்களின் 90 சதவீதம் பேருக்கு மேல் மாற்று மதத்தினர் என்பது அனைவரும் அறிந்தது. ஆனாலும் இவர்கள் ஈன புத்தியை பயன்படுத்தி அதிலும் ஒரு மத அரசியல் செய்ய முன் வருவது கண்டிக்கத்தக்கது.
இதேபோல் தமிழகத்திலிருந்து இதேபோல் வடசென்னை சேர்ந்த கார்த்திகா என்ற பெண் கபடி போட்டியில் தங்கம் என்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நிலையில் இது போன்ற ஒரு ஊடக வெளிச்சம் அந்தப் பெண்ணுக்கு கிடைக்கவில்லை. அப்போது இந்த கம்பி கட்டும் கதை எங்கே சென்றான் என்பதும் தெரியவில்லை.
அதேபோல் சதுரங்க விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற பலருக்கும் இது போன்ற ஒரு ஊடக வெளிச்சம் கிடைத்ததா என்றால் அது கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.
இந்தப் பெண்ணை வைத்து அரசியல் செய்து அவருடைய வாழ்க்கை வீணாக்க ஏதோ சதி நடக்கிறதோ என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது.


Comments
Post a Comment