Posts

Showing posts with the label #ரஜினிகாந்த்

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

Image
    நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க மெகா ஹிட் வெற்றி படங்களில் ஒன்று படையப்பா.  தற்போது ரஜினி அவர்கள் தனது  பிறந்தநாள் அன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் படையப்பாவின் இரண்டாம் பாகம் தயாராக விவாதங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் அந்தப் படத்திற்கு நீலாம்பரி என்று பெயர் சூட்ட இருப்பதாகவும் இருப்பதாகவும் விரைவில் முறையான அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிவித்தார்.

ஓடும் குதிரையில் பயணிக்கிறாரா ரஜினிகாந்த்?

Image
  தமிழ் சினிமா உலகின் முடி சூடா மன்னனாக விளங்கும் திரு ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே மிகப்பெரும் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களை அழைத்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது வழக்கமாகக் கொண்டுள்ளார்.  தற்போது கமலஹாசன் இயக்கத்தில் திரு ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் ஒரு படம் உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்தன. அதை திரு சுந்தர் சி அவர்கள் இயக்குவதாகவும் தகவல்கள் பரவியது. அந்தப் படத்தின் கதை பற்றிய விவாதங்களும் நடந்து வந்ததாக கூறப்பட்டது.  ஆனால் தற்போது திரு சுந்தர் சி அவர்கள் அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல்கள் வருகிறது.  கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினிகாந்த் அவர்கள் பெரும் வெற்றி படங்களை கொடுத்த இளம் தலைமுறை இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வந்தார். காரணம் அவர்கள் இளம் தலைமுறை என்ன ஓட்டங்களை சரியாக புரிந்து வைத்து அதற்கேற்றார் போல் படங்களை உருவாக்குவார்கள் என்ற எண்ணத்தில் அப்படி செயல்பட்டதாக கூறப்படுகிறது.  ஆனாலும் தற்போது வரை அவர் நடித்த படங்களில் சமீபத்திய படங்கள் பலவும் பெரிய வெற்றியை பெற முடியவில்லை. தற்போதைய இளம் தலைமுறை இயக்குனர்களை விட சிறந்த...

சமூக அக்கறை இல்லாதவரா? நடிகர் ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த்

Image
தமிழ் சினிமாவில் பலரும் கதாநாயகனாக நடித்து வந்தாலும் வெகு சிலரே மக்களின் அபிமான கதாநாயகர்களாக அறியப்படுகின்றனர்.  அவ்வாறு தமிழ் சினிமாவில் பெரிதாக ரசிகர் கூட்டத்தைக் கொண்ட பலர் இருந்தாலும் அவர்களில் முக்கியமானவராக கருதப்படுபவர் திரு ரஜினிகாந்த் அவர்கள்.  இவர் கடந்த பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருவதால் தலைமுறைகளை தாண்டி சூப்பர் ஸ்டாராக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். தமிழகத்தில் இவர் கூறிய கருத்துகளால் கடந்த காலங்களில் அரசியல் மாற்றமே உருவாகியுள்ளது. இவர் அரசியலில் வந்து குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று ஒரு தரப்பு மக்களால் நம்பப்பட்டது. அவர் மீது மக்களுக்கு அப்படி ஒரு அபிமானம் இருந்து வருகிறது.   ஆனால் அவர் தனக்கு அரசியல் சரிவராது என்பதும் அரசியலில் பல நேர்மை மற்ற வேலைகளும் குள்ளநரித்தனங்களும் செய்ய வேண்டியது இருக்கும் என்பதும் அதுமட்டுமல்லாது தன்னை கவிழ்க்க மிகப்பெரிய சாதிகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து பல அரசியல் கட்சிகள் மற்றும் முக்கிய புள்ளிகள் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்தார். அதில் பலரும் ரஜினி பயந்துவிட்டதாகவும் கோழை ...