Posts

Showing posts with the label #ntk

நம்பிக்கை துரோகியான நாம் தமிழர்

Image
  தமிழ்நாட்டில் அரசியல் முக்கிய கட்சிகளில் ஒன்று நாம் தமிழர் கட்சி. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் தமிழ் மற்றும் தமிழ் தேசியம் பற்றி எப்போதும் பேசக் கூடியவர். அப்படி அவர் தமிழ் பற்றி பேசும்போது தமிழ் கடவுள் ஆன முருகனை முப்பாட்டன் முருகன் என்று அழைப்பார்.  எப்போதும் முருகனைப் பற்றி பேசக்கூடிய திரு சீமான் அவர்கள் தமிழ் கடவுள் முருகன் திருத்தலமான திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வின் போது நடந்த பிரச்சனையைப் பற்றி வாயே திறக்காமல் அமைதி காத்துள்ளார்.  தமிழ்நாட்டில் பிஜேபி தவிர சிறுபான்மை வாக்குகளுக்காக அனைத்து கட்சிகளும் சிறுபான்மை வாக்குகளுக்காக தங்கள் சுய கௌரவத்தையும் தன்மானத்தையும் கூட அடக்க வைக்க தயங்க மாட்டார்கள் என்பதற்கு திரு சீமான் போன்றவர்களை சாட்சி. மற்ற விஷயங்களுக்கெல்லாம் முந்திக்கொண்டு கருத்து சொல்லும் திரு சீமான் அவர்கள் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றும் விழாவின் பிரச்சனையில் ஓடி ஒளிந்து கொண்டு வாயில் வாழைப்பழத்தை வைத்திருக்கிறாரா என்பது தெரியவில்லை. மொத்தத்தில் இந்து மக்களுக்கு நம்பிக்கை துரோகியாக மாறிவிட்டது நாம் தமிழர் கட்சி....

தமிழகமெங்கும் சாலைகளின் அவலநிலை

Image
  தமிழகத்தில் தற்போது எல்லா இடங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மக்கள் தங்கள் அன்றாட வேலைகள் மற்றும் பள்ளி செல்லுதல் போன்ற பல காரணங்களுக்காக தினசரி வெளியே சென்று வரும் நிலையில் நமது தமிழ்நாட்டின் பெரும்பாலான சாலைகள் வயல்வெளிகளைப் போல் சேரும் சகதியும் ஆக மழை நீரோடு சேர்ந்து கழிவு நீரும்  சாலைகளில் தேங்கியுள்ளது.  இதில் பயணிப்பதால் பலருக்கும் பலவிதமான நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் சாலைகளில் உள்ள பள்ளமேடுகள் நீர் நிரம்பியுள்ளதால் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் பலரும் விபத்துக்குள்ளாகும் நிகழ்வுகளும் அன்றாடம் நடைபெற்று வருகிறது.  திராவிட மாடல் ஆட்சி என்று பெருமை பேசும் இந்த ஆட்சியாளர்கள் கடந்த நான்கரை வருடங்களாக தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்கள் எதிலும் சாலைகளை சிறப்பாக சீரமைத்ததாக ஒரு தமிழக சாமான் என் கூட தெரிவிக்கவில்லை. சில சாலைகள் போடப்பட்டாலும் கூட அவை தரத்தில் மிக மோசமாகவும் ஒரு மலைக்கு கூட தாங்காத அளவிற்கு தகுதியற்றதாக உள்ளது.  இதற்கு நாம் ஆட்சியாளர்களை குறை சொல்லி ஒன்றும் பிரயோஜனம் இல்லை. இலவசத்திற்காகவும் காசுக்...

உங்கள் பகுதியின் வேட்பாளர் எப்படி இருக்க வேண்டும்?

Image
 தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உங்கள் பகுதியில் நல்ல வேட்பாளரை எப்படி தேர்வு செய்யலாம் என்பது குறித்து சில கருத்துக்கள் கொடுத்துள்ளோம். இதை பயன்படுத்தி சிறந்த வேட்பாளரை தேர்வு செய்து வாக்களித்து வெற்றி பெற வைத்து உங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க வழி செய்யுங்கள்.  முதலில் உங்கள் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை தயார் செய்து கொள்ளுங்கள். அதில் ஏற்கனவே பலமுறை போட்டியிட்ட வேட்பாளர்களின் விவரங்களை வைத்து ஆர் போட்டியிட்ட ஒவ்வொரு முறையும் என்னென்ன வாக்குறுதிகள் எல்லாம் அளித்துள்ளார். அதில் எத்தனை சதவீதத்தை நிறைவேற்றி உள்ளார். அவர் சார்ந்த அரசியல் கட்சி என்னென்ன வாக்குறுதிகளை அளித்தது அதில் எவற்றையெல்லாம் நிறைவேற்றி உள்ளது என்பது குறித்து ஒரு பட்டியல் தயார் செய்யுங்கள். இதை வைத்து அவர்கள் எத்தனை சதவீதம் நம்பகத்திற்குரியவர்கள் என்பதை முடிவு செய்யுங்கள்.  உங்கள் பகுதியில் அரசியல் கட்சிகளையும் தாண்டி உங்கள் தனிப்பட்ட அரசியல் சார்பையும் விட்டு தனிப்பட்ட முறையில் எந்த வேட்பாளர் சிறந்தவர் என்பதை கண்டறிய உங்கள் பகுதியி...

தமிழகம் மெல்ல மெல்ல தெலுங்கர்கள் பிடியில் செல்கிறதா?

Image
  தமிழகத்தில் தற்போது நடந்து வரும் திமுக ஆட்சி எப்போதும் செய்வது மொழி அரசியல்.  அவர்கள் எப்போதும் இந்தி மொழியை எதிர்த்து போராட்டம் நடத்துவதும் ஏதோ தமிழ் மொழிக்கு அவர்கள் தான் பாதுகாப்பு அதிகாரம் பெற்றவர்கள் போலவும் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள்.  ஆனால் உண்மையில் தமிழ் மொழியை திட்டமிட்டு அழிப்பதும் தமிழர்களை பின்னுக்கு தள்ளி தெலுங்கர்களை வாழ வைப்பதும் திமுக தான் என்பதை தமிழ் மக்கள் எப்போது அறிந்து கொள்வார்கள் என்பதே தெரியவில்லை.  மூன்றாவது மொழியாக இந்தி வந்தால் தமிழ் அழிந்துவிடும் என்று கூறுபவர்கள் தங்கள் அமைச்சரவையில் பெரும்பான்மை அமைச்சர்கள் தெலுங்கர்கள் என்பதை மறைத்துக் கொண்டே வருவார்கள்.  இந்தி மொழி எதிர்ப்பது போலவே தெலுங்கர்களின் தெலுங்கு மொழியையும் எதிர்க்க வேண்டும் என்பது தானே நியாயம். இந்தி மொழி வந்தால் தமிழ் அழியும் என்றால் தெலுங்கு மொழி வந்தாலும் தமிழ் அழிய தானே செய்யும்.  இங்கிருக்கும் அமைச்சர்கள் ஊழல் செய்து கொள்ளை அடித்த பணத்தில் பங்கு கொடுக்கும் கடவுள் கூட தெலுங்கு தேசத்தில் தான் இருக்கிறார்.  அதுமட்டுமல்லாது மறைமுகமா...

தமிழக வாக்காளர்களின் கனிவான கவனத்திற்கு

Image
  தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழக வாக்காளர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் திறமையான நேர்மையான சிறந்த வேட்பாளரை தேர்வு செய்ய என்ன செய்ய கீழே உள்ள கேள்விகளை அவர்களிடம் கேட்டு அதற்கு அவர்கள் அளிக்கும் பதில்கள் உங்களுக்கு திருப்தி அளிப்பதாக இருந்தால் நீங்கள் அவர்களுக்கு வாக்களிக்கலாம். அப்படி நீங்கள் இதை பின்பற்றும் பட்சத்தில் உங்கள் தொகுதி வளர்ச்சி அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பானதாக இருக்க வாய்ப்புகள் உண்டு.  முதலில் தற்போது வெற்றி பெற்று பதவியில் உள்ள  வேட்பாளர் தங்களிடம் கலந்து தேர்தலின் போது பிரச்சாரத்திற்கு வரும்போது என்னென்ன வசதிகள் செய்து கொடுப்பேன் என்றும் அடிப்படை வசதிகளில் எதை செய்வேன் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார் என்பதை பழைய தேர்தல் அறிக்கையை எடுத்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் வெற்றி பெற்ற  வேட்பாளர் சார்ந்துள்ள கட்சி வெற்றி பெற்ற கட்சியா? அவ்வாறு அவர் வெற்றி பெற்ற கட்சியிலோ அல்லது கூட்டணியோ இருந்திருந்தால் அந்தக் கூட்டணி கொடுத்துள்ள வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டனரா? என்று முதலில் பார...

தில்லு முல்லு திமுகவின் தில்லாலங்கடி வேலை

Image
  தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நாடு முழுவதும் SIR சிறப்பு வாக்காளர் திருத்த திட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சென்ற தேர்தலில் வாக்களித்த பல வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.  தமிழ்நாட்டின் பல தொகுதிகளிலும் திமுகவுக்கு எதிராக வாக்களிக்கும் வாக்காளர்களின் அடையாளம் காணப்பட்டு அவர்களின் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக பெரும்பாலான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.  குறிப்பாக அதிமுக பிஜேபி போன்ற கட்சிகளுக்கு வாக்களிக்க விரும்பும் சாதாரண வாக்காளர்களின் பெயர்களை வெகு சாமர்த்தியமாக நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.  சமீபத்திய தேர்தல்களில்  எந்த அரசியல் கட்சி வெற்றி பெற்றாலும் வெற்றி சதவீதம் மிகவும் குறைவாக உள்ள நிலையில் இதுபோன்று வாக்காளர்கள் நீக்கப்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பாதிப்பை உண்டாக்க அதிக வாய்ப்பு உள்ளது.  எனவே எதிர்க்கட்சியில் உள்ள பூத் கமிட்டி முகவர்கள் தங்கள் ஏரியாவில் உள்ள வாக்குச்சாவடி பூத் லிஸ்ட்டை வைத்து வீடு வீடாக சென்று ...

வங்கதேசத்தினர் ஊடுருவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

Image
  நமது இந்திய நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தச் சட்டம் தற்போது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் திருநாமல்  காங்கிரஸ் திமுக போன்ற எதிர்க்கட்சிகள் பலவும் வாக்காளர் திருத்தச் சட்டத்தை எதிர்த்து வருகின்றன.   இந்த தீவிர வாக்காளர் திருத்தச் சட்டத்தால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம். பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருக்கும் நபர்கள் இறந்து போயிருந்தாலும் அல்லது மாற்றலாகி வேறு இடங்களுக்குச் சென்று இருந்தாலோ அவர்களது வாக்குரிமை பட்டியலில் இருக்கும். அவற்றை கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டியது அவசியம். அதேபோல் 18 வயதிற்கு மேல் உள்ள புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. பலர் சட்ட விரோதமாக அந்நிய நாட்டவர்கள் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளனர் அவற்றின் கண்டறிந்து நீக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.  இதனால் பெரும்பான்மை பொதுமக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெறும் நிலை உருவாகும். கள்ள ஓட்டுக்கள் தடுக்கப்படும் சட்டவிரோத ஜனநாயக நடைமுறைகள் தடுக்கப்படும். பொதுமக்கள்...

திமுக கையில் எடுக்கும் ஆயுதங்கள் அனைத்தும் மண்ணைக் கவ்வுகிறதா?

Image
 தமிழகத்தில் திமுகவிற்கு எப்போதெல்லாம் பின்னடைவு பிரச்சனைகள் எதிர்ப்புகள் போன்றவை வருகிறதோ அப்போதெல்லாம் திமுக அதனை மடை மாற்ற பல யுக்திகளை கையாளும்.  அவற்றில் முக்கியமானது இந்தி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு, நீட் விலக்கு மற்றும் மத்திய அரசின் சட்டங்களுக்கு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு போன்ற ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு மக்களுக்கு தங்கள் மீது உள்ள கோபத்தையும் அதிருப்தியையும் சரி செய்ய இவற்றை ஆயுதமாக பயன்படுத்தும்.  அப்படி அவர்கள் சமீப காலங்களில் முயற்சி செய்த இந்தி எதிர்ப்பு, பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றில் இவர்கள் செய்த அரசியல் எடுபடவில்லை.  தற்போது சென்னை சாலைகளில் நிலை, மழை வெள்ளம், விவசாய நெல் கொள்முதல், மற்றும் பல முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாதது போன்ற இவர்களின் தவறுகளை மறைக்க இவர்கள் எடுத்திருக்கும் ஆயுதம் SIR எனப்படும் வாக்காளர் சரி பார்க்கும் பணியை வைத்து ஒரு போராட்டத்தை உருவாக்க நினைக்கிறது திமுக அரசு.  தமிழ்நாட்டில் பல தொகுதிகளில் போலி வாக்காளர்கள் அதிகம் உள்ளதாக 2016ல் திமுக அரசே புகார் தெரிவித்து இருக்...

திமுகவை கர்மா பின் தொடர்கிறதா?

Image
 திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது செய்தி ஊடகங்கள் அனைத்தையும் கையில் வைத்துக் கொண்டு பிண அரசியல் பண அரசியல் என எல்லா வகையிலும் ஆளுங்கட்சியை குறை சொல்லி அரசியல் செய்து கொண்டிருந்தனர்.  அப்படி எல்லா விதத்திலும் அரசியல் செய்து அதிமுகவை வில்லன் போல் சித்தரித்து நாங்கள் ஆட்சிக்கு வந்த நாட்டில் பாலாறும் தேன்ஆறும் ஓடும் என்று மக்களை மூளைச்சலவை செய்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டனர்.  தமிழில் ஒரு பழமொழி உண்டு முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல தற்போது திமுக எதையெல்லாம் வைத்த அரசியல் செய்கிறதோ அதே போல் பிரச்சனைகள் அவர்கள் ஆட்சியிலும் நடக்கிறது. இதைத்தான் கர்மா பின் தொடர்தல் என்று கூறுவர்.  எடுத்துக்காட்டாக  சாத்தான்குளம் ஜெயராஜ் பெனிக்ஸ் லாக்கப் மரணத்தை வைத்து பெருமளவில் பினார அரசியல் செய்தது திமுக.  அதேபோல் திமுக ஆட்சியில் அஜித்குமார் கொலை நடந்தது. ஆனால் இப்போதும் ஊடகங்களை வைத்து அதை திசை திருப்ப பல வகைகள் என்னும் திமுக அரசின் முயற்சி செய்து வருகிறது.  அடுத்ததாக   அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து கனிமொழி உள்ளிட்ட...

தமிழகத்தில் இன்றைய இளைய தலைமுறை அரசியல் தலைவர்களில் யார் தகுதியானவர்?

Image
 தமிழக அரசியல் களம் தற்போது இளைஞர்களை சுற்றி நடந்து வருகிறது.  தமிழகத்திலும் முதல் முறை வாக்களிக்கும் இளைய தலைமுறை வாக்காளர்கள் அதிகம் உள்ள நிலையில் அவர்களின் மனம் கவர்ந்த தலைவர் யார் என்ற கோணத்தில் நாம் இளைஞர்களுடன் கலந்தாலோசித்த பொழுது அவர்களின் எதிர்பார்ப்பு இளம் தலைவர்கள் பற்றி தான் இருந்தது.  ஒருவர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் ஆகவும் அடுத்தவர் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் திரு அண்ணாமலை அவர்களாகவும் திமுகவின் இளம் தலைமுறை தலைவராக இளைஞர்களின் தேர்வாக உள்ளது.  இன்றைய தமிழக அரசியல் முழுவதும் இவர்கள் மூவரை சுற்றிய நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.  நாம் பொதிகை டைம்ஸ் இதழ் நிருபர்கள் இளைஞர்களுடன் கலந்து ஆலோசித்த பொழுது அவர்கள் கூறிய சில கருத்துக்கள் அடிப்படையில் யாருக்கு எப்படி வாய்ப்புகள் உள்ளது என்பதை பற்றி விவரத்தை பார்க்கலாம்.  நடிகர் விஜய் அவர்களைப் பொறுத்தவரை தமிழக வெற்றி கழகம் அரசியல் கட்சியின் மூலம் தமிழக முழுவதும் பல லட்சக்கணக்கான இளைஞர்களை தன்வசம் வைத்துள்ளார். ஆனால் அவரது தமிழக வெற்றி கழகத்தில் ஒரு சரியான கட்டமைப்போ, திட்...

நாம் தமிழர் கட்சியில் நடப்பது என்ன?

Image
 தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே தமிழ் தேசியம், சுயசார்பு பொருளாதாரம் போன்றவற்றில் உறுதியாக நின்று போராடி வரும் அமைப்புகளில் நாம் தமிழர் கட்சி முக்கியமான ஒன்றாகும்.  இதில் சீமான் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து முன்னின்று நடத்தி வருகிறார். நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை ஏராளமான இளைஞர்கள் தன்னார்வத்துடன் களப்பணி  செய்து வருகின்றனர்.  இக்கட்சியின் மூலம் ஏராளமான புதிய இளைஞர்கள் அரசியல் தலைவராக உருவெடுத்து உள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது.  நாம் தமிழர் கட்சியில் இருந்து களப்பணியாற்றி இரண்டாம் கட்ட தலைவர்களாக முன்னேறிய ராஜீவ் காந்தி கல்யாண சுந்தரம் காளியம்மாள் போன்ற பலரும் தமிழக மக்கள் பலராலும் அறியப்படுபவர்கள்.  ஆனால் தற்போது அவர்கள் அனைவரும் இக்கட்சியை விட்டு வெளியேறி வெவ்வேறு புதிய கட்சிகளின் இணைந்துள்ளனர் சிலர் இணைய தயாராக உள்ளனர். நாம் தமிழர் கட்சி நன்றாக வளர்ந்து வரும் நிலையிலும் இது போன்ற இரண்டாம் கட்ட தலைவர்களும் பலராலும் அறியப்பட்ட நிலையில் வளர்ந்து வரும் நிலையிலும் ஏன் இவர்கள் அக்கட்சியினை விட்டு வெளியேறினார்கள் என்பது அனைவரும் கேள்வியாக உள்...