தமிழகமெங்கும் சாலைகளின் அவலநிலை
தமிழகத்தில் தற்போது எல்லா இடங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மக்கள் தங்கள் அன்றாட வேலைகள் மற்றும் பள்ளி செல்லுதல் போன்ற பல காரணங்களுக்காக தினசரி வெளியே சென்று வரும் நிலையில் நமது தமிழ்நாட்டின் பெரும்பாலான சாலைகள் வயல்வெளிகளைப் போல் சேரும் சகதியும் ஆக மழை நீரோடு சேர்ந்து கழிவு நீரும் சாலைகளில் தேங்கியுள்ளது.
இதில் பயணிப்பதால் பலருக்கும் பலவிதமான நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் சாலைகளில் உள்ள பள்ளமேடுகள் நீர் நிரம்பியுள்ளதால் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் பலரும் விபத்துக்குள்ளாகும் நிகழ்வுகளும் அன்றாடம் நடைபெற்று வருகிறது.
திராவிட மாடல் ஆட்சி என்று பெருமை பேசும் இந்த ஆட்சியாளர்கள் கடந்த நான்கரை வருடங்களாக தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்கள் எதிலும் சாலைகளை சிறப்பாக சீரமைத்ததாக ஒரு தமிழக சாமான் என் கூட தெரிவிக்கவில்லை. சில சாலைகள் போடப்பட்டாலும் கூட அவை தரத்தில் மிக மோசமாகவும் ஒரு மலைக்கு கூட தாங்காத அளவிற்கு தகுதியற்றதாக உள்ளது.
இதற்கு நாம் ஆட்சியாளர்களை குறை சொல்லி ஒன்றும் பிரயோஜனம் இல்லை. இலவசத்திற்காகவும் காசுக்காகவும் அவர்கள் கூறிய பொய்களை கேட்டு இவர்கள் வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்ற நம்பி வாக்களித்த முட்டாள் வாக்காளர்களை தான் குறை கூற வேண்டும்.
தமிழகத்தின் நிதி நிலைமையை அதுல பாதாளத்திற்கு கொண்டு சென்ற இந்த தேவிராவிடம் ஆண்டவர் ஆட்சியால் அடுத்து வரும் ஆட்சியாளர்களும் கடும் சிக்கலையும் நிதி நெருக்கடியையும் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இதனால் அடுத்து வரும் ஆட்சியாளர்களாலும் உடனே இந்த பிரச்சனைகளை தீர்த்து விடவோ தீர்வு காணவோ முடியாத அளவிற்கு சிக்கல் உள்ளது.
இதனால் அடுத்து வரும் ஆட்சிக்கும் பெரும் சிக்கல்கள் காத்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. இந்த நிலையில் தேர்தலில் மேலும் இலவசங்கள் மற்றும் நலத்திட்டங்கள் என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் திட்டங்களை எல்லா கட்சிகளும் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. அப்படியே ஏதாவது நிகழ்ந்தால் தமிழ்நாடு மிகவும் மோசமான படுகுழியில் தள்ளப்படும் என்பது நிதர்சனமான உண்மையாக இருக்கும். அது மட்டுமல்லாது அவர்கள் அறிவிக்கும் நலத்திட்டங்களுக்கு மற்றும் இலவசங்களுக்கு கொடுக்கப்படும் பணமும் நமது பாக்கெட்டில் இருந்தே செல்லும் என்பதையும் வாக்காளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.




Comments
Post a Comment