Posts

Showing posts with the label #தென்காசி

தென்காசியில் காணாமல் போன நிட்சேப நதி

Image
  தென்காசியில் காந்தியின் அஸ்தியை கரைத்த நிட்சேப நதி காணாமல் போன அவலம்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு- சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகும் நிட்சேப நதி தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 11/2 லட்சத்திற்கும் மேலான விவசாய விளைநிலங்கள் செழிக்க உதவியது. கரிவலம் வந்தநல்லூர் வழியாக வைப்பாறை அடைந்து கடலில் கலக்கும் இந்நதி கங்கை நதியினைப் போல புனித நதியாக கருதப்படுகிறது. இதனால் மகாத்மா காந்தியின் அஸ்தியை 7 இடங்களில் கரைக்கப்பட்ட நிலையில் நிட்சேப நதியிலும் கரைக்கப்பட்டது. இந்நதியில் காந்தியின் அஸ்தி 12.2.1948ல் கரைக்கப்பட்டது. இதற்கான நினைவு கல்வெட்டு வினோபாஜி அவர்களால் 4.4.1957 ல் இங்கு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழக-கேரள எல்லையில் உள்ள செண்பகவல்லி அணைக்கட்டு கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக உடைந்தது. காமராஜர் ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட அணை சீர்செய்யப்பட்ட நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக மீண்டும் பாதிக்கப்பட்டது. இதன் பின் இதுவரையில் சீரமைப்பு பணிகள்...

கடன் கொடுத்தவர் தற்கொலை

Image
  கடன் கொடுத்தவர் தற்கொலை..  கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மிட்டா ஆபீஸ் தெருவில் வசித்தவர் சுப்பையா மகன் சந்திரன் (வயது 72). இவர் தச்சு தொழில் செய்து வந்தார். கடையநல்லூர் மதினா நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் சலாம் மகன் முகமது ரபீக். இவர் அப்பகுதியில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஓட்டல் நடத்தி வந்தார். அப்பொழுது சந்திரனிடம் ஓட்டல் உரிமையாளர் முகமது ரபிக் ரூ.10 லட்சம் கடனாக பெற்றுள்ளார். அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாததால் மேலும் 17 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு முகமது ரபீக் 27 லட்ச ரூபாய் மதிப்புள்ள தனக்கு சொந்தமான நிலத்தை சந்திரனுக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார். பின்னர் அது போலி பத்திரம் என தெரிய வந்ததால், தான் கொடுத்த 27 லட்ச ரூபாய் பணத்தை திரும்பி கேட்டதால் முகமது ரபீக் ஓட்டலை மூடிவிட்டு தலைமறைவானார். தொடர்ந்து 5 ஆண்டுகளாக முகமது ரபீக் வீட்டுக்குச் சென்று அவருடைய குடும்பத்தார்களிடம் பணத்தை கேட்ட நிலையில் பணம் திரும்ப கிடைக்காது என்ற விரக்தியில் நேற்று முகமது ரபீக்கின் வீட்டு வாசலில் சந்திரன் உடலில் மண் எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல்...

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்

Image
  நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் பாரத் கல்விக் குழுமத்துடனும் நங்கூரம் மாத இதழ்டனும் இணைந்து நடத்திய சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு முடிவுகள் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதியை பொருத்தவரை பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில்களும் கூலி தொழிலாளர்களுக்கும் அதிகம் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்த பகுதியை பொருத்தவரை பல ஆண்டுகளாக பெரிய வளர்ச்சிகள் ஏதும் இல்லாத பகுதி ஆகும்.  இந்த தொகுதியில் நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் பெரும்பாலும் இழுப்பதி நிலையே காணப்பட்டது. எந்தக் கட்சி இங்கு வெற்றி பெறும் என்ற வாய்ப்பு தெளிவாக தெரியவில்லை. இருந்தாலும் நமது கருத்துக்கணிப்பின் கணக்குகளின் படி தி மு க கூட்டணி சிறிய அளவில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக முடிவுகள் வந்துள்ளது.  இந்த கருத்துக்கணிப்பு வேட்பாளர் தேர்வுகள் நடைபெறுவதற்கு முன்பு எடுக்கப்பட்டது என்பதால் அந்த தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களின் பலத்தைப் பொறுத்து வாக்குகள் மாறவும் வாய்ப்பு உள்ளது.  இங்கு தமிழக வெற்றி கழகத்தின் வாக்குகள் 10 சதவீதம் அளவிற்கு நமது கருத்துக்கணிப்பில் உள்ளதாக தெரி...

புளியங்குடியில் மனதை வேதனை பட வைக்கும் சோக சம்பவம்

Image
  புளியங்குடியில் பள்ளி மாணவிகளின் மீது பள்ளிக்குள் விரைந்து வந்த கார் மோதியதில் சம்பவ இடத்தில் உயிர் இழப்பு பெற்றோர்கள் கொதிப்பு 5 மணி நேரம் சாலை மறியல்  பேச்சுவார்த்தைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரசு அதிகாரிகள் வராததால் சம்பவம் நடந்த பள்ளிக்கு திடீரென திரண்டு பள்ளியின் மீது கற்கள் வீசி பரபரப்பு தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிந்தாமணியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது இப்பள்ளியில் புளியங்குடி அருகே உள்ள   நெல்கட்டும்செவல் கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி வேல்மகில் தம்பதியரின்  ஒரே மகள்   சிவயாழினி  (4) பள்ளியில் யுகேஜி  படித்து வந்தார் மாலை வீட்டிற்கு செல்வதற்கு பள்ளி மைதானத்தில் மாணவி நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது அப்போது பள்ளி வளாகத்திற்குள் வந்த ஒரு கார் மாணவியின் மீது மோதியதாக கூறப்படுகிறது இதில் படுகாயம் அடைந்த மாணவி சிவ யாழினி உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அங்கு சிவ யாழினி பரிதாபமாக இறந்து போனார்  இந்நிலையில் மாலை நேரத்தில் பள்ளியில் பஸ்ஸில் மாணவி...

ஆலங்குளம் சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு

Image
  நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் பாரத் கல்விக் குழுமத்துடனும் நங்கூரம் மாத இதழ்டனும் இணைந்து நடத்திய சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு முடிவுகள் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை அதிகபட்ச கிராமங்களும் விவசாய தொழில்களும் நிறைந்த மாவட்டமாக உள்ளது. இத்தொகுதியை பொருத்தவரை பி எச் மனோஜ் பாண்டியன் அவர்கள் அதிமுகவிலிருந்து திமுகவிற்கு கட்சித் தாவியது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் திமுக கட்சியிலும் உட்கட்சி பூசல்களுக்கு வழி வகுத்துள்ளது. நீங்க திமுகவில் ஏற்கனவே பூங்கோதை ஆலடி அருணா போன்ற பிரபல வேட்பாளர்கள் உள்ள நிலையில் திரு பி எச் பாண்டியனின் திமுக வருகை என்பது அவர்களுக்கு போட்டியாக உருவாகும் என்பதில் உட்க்கட்சியின் மேலே பூசல்களை அதிகரித்துள்ளது. இதனால் திமுகவில் இந்த முறை யார் போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக உட்க கட்சியினரை செயல்படக்கூடிய சூழ்நிலை உள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் திமுகவின் மீது உள்ள அதிருப்தி மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு கனிம வள கடத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் திமுக தொகுதியில் பின்னடைவை சந்திக்கிறத...

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி கருத்துக்கணிப்பு

Image
  நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் பாரத் கல்விக் குழுமத்துடனும் நங்கூரம் மாத இதழ்டனும் இணைந்து நடத்திய சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு முடிவுகள்  சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திரு ராஜா அவர்களுக்கு உட்க் கட்சிக்குள்ளேயே கோஷ்டி பூசல்கள் உள்ளது. ஆனாலும் சங்கரன்கோவில் பொறுத்தவரை திமுக வலுவான நிலையில் உள்ளது. ஆனாலும் இந்த சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை இரு கட்சிகளிலும் நிற்கும் வேட்பாளர்களின் பலமே முக்கியமானது. அது மட்டுமல்லாது கடைசி நேர தேர்தல் யுக்திகளும் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்ற நிலையில் உள்ளது.  இத்தொகுதியைப் பொறுத்தவரை யார் வெற்றி பெற்றாலும் பெரிய அளவில் வாக்கு வித்தியாசம் இல்லாமல் இழுபறி நிலையில் இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.  தற்போதைய சூழ்நிலையில் இத்தொகுதியில் திமுக வலுவான நிலையில் உள்ளதாகவே தெரிகிறது.

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி கருத்துக்கணிப்பு

Image
  நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் பாரத் கல்விக் குழுமத்துடனும் நங்கூரம் மாத இதழ்டனும் இணைந்து நடத்திய சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு முடிவுகள்  கடையநல்லூர் தொகுதியை பொருத்தவரை தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திரு கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பாவிற்கு நல்ல  பெயர் உள்ளது. இவர் தொகுதி மக்கள் அனைவரையும் அரவணைத்து செல்லும் விதமாக செயல்படுவதாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இல்லாமல் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் இவரால் சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்றாலும் மக்கள் அரசியல் காரணங்களால் அவரால் அதை நிறைவேற்ற முடியவில்லை என்பதை புரிந்து கொண்டுள்ளனர். மேலும் கனிம வளம் கொள்ளைக்கு எதிராக இவர் குரல் கொடுத்ததும் போராடியதும் மக்கள் ஆதரவு இவர் பக்கம் வந்துள்ளது.  கடையநல்லூர் தொகுதி இஸ்லாமிய பெரும்பான்மையாக வாழும் பகுதியாக இருந்தாலும் திமுக இஸ்லாமியர்களுக்கு ஆன அரசியல் சக்தி என்று பிரச்சாரங்கள் வைக்கப்பட்டாலும் இந்த தொகுதியை பொருத்தவரை திரு கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பாவிற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக...

தென்காசி சட்டமன்றத் தொகுதி கருத்துக்கணிப்பு முடிவுகள்

Image
         நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் பாரத் கல்விக் குழுமத்துடனும் நங்கூரம் மாத இதழ்டனும் இணைந்து நடத்திய சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு முடிவுகள்      பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் சார்பாக நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தல் 2026 தென்காசி மாவட்டத்திற்கான கருத்துக்கணிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவுகளில் முதல் தொகுதியாக தென்காசி தொகுதி முடிவு வெளியிடப்படுகிறது. தென்காசி பகுதியில் பொறுத்த வரை தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு பழனி நாடார் அவர்களுக்கு மக்கள் மத்தியில் சிறிய அளவில் அதிருப்திகள் உள்ளது தெரிய வருகிறது. சில இடங்களில் அவரிடமே நேரடியாக எதிர்ப்புகளை தெரிவித்த காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. தென்காசி பெரும்பாலும் அதிமுக திமுக கட்சிகள் இருவராலும் பலமுறை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியாகவே இருந்துள்ளது.  தற்போது இந்த தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவிற்கு அல்லது வேறு ஏதேனும் கூட்டணி கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்படலாம் என்று பரவலாக கருத்த...

தென்காசி காய்கறி மார்க்கெட் புது பொலிவுடன்

Image
  தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாய்க்கால் பாலம் அருகில் உள்ள தென்காசி தினசரி காய்கறி மார்க்கெட் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது அந்தப் பணிகள் நிறைவடைந்து புதிய தென்காசி காய்கறி மார்க்கெட் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. #தென்காசி #காய்கறிமார்க்கெட் 

தென்காசியில் வேலை வாய்ப்பு முகாம்

Image
 📢 வேலைவாய்ப்புச் செய்தி: தென்காசி மாவட்ட இளைஞர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு! 💼✨ தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது! 🎯 📍 இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தென்காசி. 🗓️ தேதி: 13-03-2026 (வெள்ளிக்கிழமை) ⏰ நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை 🎓 கல்வித்தகுதி:  * 10-ஆம் வகுப்பு  * 12-ஆம் வகுப்பு (+2)  * ITI  * டிப்ளமோ (Diploma)  * பட்டப்படிப்பு (Any Degree) ✅ முக்கிய விவரங்கள்: இந்த முகாமில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். 📢 உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்! யாராவது ஒருவருக்கு இந்த வேலைவாய்ப்பு பயனுள்ளதாக இருக்கும். 🙏 #Tenkasi #JobFair #TenkasiJobs #Employment #CareerOpportunity #TamilNaduJobs #PrivateSectorJobs #DistrictEmploymentOffi...

இன்றைய28/02/2026 குற்றால நிலவரம்

Image
ஐந்தருவி மெயின் அருவி  

உங்கள் கருத்து என்ன? பதிவிடுங்கள்

Image
 அன்பார்ந்த பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.  தற்போது நமது பொதிகை டைம் டிஜிட்டல் இதழ் சார்பாக தென்காசியின் புகழ்பெற்ற பாரத் கல்வி குழுமத்துடன் இணைந்து 2026 சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு தென்காசி மாவட்டத்திற்காக நடத்தப்பட்டு வருகிறது.  இதில் தென்காசி கடையநல்லூர் வாசுதேவநல்லூர் சங்கரன்கோவில் ஆலங்குளம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வருகிறது.  மேலே உள்ள தொகுதிகளில் வாக்களிக்க உள்ள வாசகர்கள் அனைவரும் இத்துடன் இணைக்கப்பட்ட தேர்தல் கருத்துக்கணிப்பு கேள்விகளைப் படித்து அதற்கான பதில்களை எங்கள் டிஜிட்டல் இதழில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு பக்கத்தில் 12 கேள்விகளுக்கான பதில்களை மட்டும் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  நீங்கள் அளிக்கும் இந்த கருத்துக் கணிப்பு பங்களிப்பின் இறுதி முடிவு வரும் பிப்ரவரி 20ஆம் தேதி 2026 அன்று நமது பொதிகை டைம் டிஜிட்டல் இதழில் வெளியிடப்படும்.  வாசகர்கள் அனைவரும் தவறாது தங்கள் கருத்துக்களை பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தென்காசியில் மான் வேட்டை ஒருவர் கைது

Image
  தென்காசியில் வேட்டையாடிய நபர் கைது தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், மேக்கரை வருவாய் கிராமம், குற்றாலம் வனச்சரகம், மேக்கரை பிரிவு, மேக்கரை பீட் எல்லைக்குட்பட்ட அடவிநயினார் டேம் அணைக்கட்டு மேல்பகுதியில் கடமானை வேட்டையாடி எரித்ததுள்ளனர். இதுக்குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு கடமானை வேட்டையாடி எரித்த வடகரையை சேர்ந்த சாமி என்பவரை வனத்துறையினர் கைது செய்து செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

2026 சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு பணிகள்

Image
  நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் நடத்தும் தென்காசி மாவட்டத்திற்கான 2026 சட்டமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்பு பணிகள் இன்று தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.  இதில் பெரும்பாலான மக்கள் தங்கள் கருத்துக்களை கூற மிகவும் தயங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அரசு அலுவலர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் எனப்படும் சாமானிய மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக கூற மிகவும் தயங்கி வருகின்றனர். 

கார் டிக்கியில் அமர்ந்து பயணித்த இளைஞர்கள்!!!

Image
  கார் டிக்கியில் அமர்ந்து பயணித்த இளைஞர்கள்!!! வாகன ஓட்டுனர் மீது வழக்கு பதிவு!!! தென்காசி பகுதியில் நான்கு சக்கர வாகனத்தின் டிக்கியில் இரண்டு இளைஞர்கள் அமர்ந்து பயணம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.S.மாதவன் T.P.S., அவர்களின் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை செய்ததில், மேற்படி நான்கு சக்கர வாடகை வாகனத்தில் திருநெல்வேலியில் இருந்து குற்றாலத்திற்கு ஓர் குடும்பத்தை அழைத்து வந்ததாகவும்  அவ்வாறு வரும் வழியில் இது போன்ற பயணம் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுபோன்று அபாயகரமான முறையில் பயணம் செய்வதை அனுமதித்த திருநெல்வேலி, பேட்டை பகுதியை சேர்ந்த வாகன ஓட்டுநர் ராஜசேகர் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரின் வாகன ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  வாகனத்தை அதிவேகமாகவும், ஆபத்தான முறையில் இயக்குதல், 18 வயது நிரம்பாத சிறுவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதிக்கும்...

தென்காசியில் பள்ளி நிர்வாகி போக்சோ சட்டத்தின் கீழ் கைது

Image
  தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவநாடானூரில் நடுநிலைப்பள்ளி நிர்வாகி செல்வ சௌந்தரபாண்டியன், ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவநாடானூரில் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளி நிர்வாகி செல்வ சௌந்தரபாண்டியன் ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.

தென்காசியில் 07/02/2026 மின்தடை ஏற்படும் பகுதிகள்

Image
  ⚡ மின்விநியோகம் நிறுத்தம் – தென்காசி மாவட்டம் 📅 தேதி: 07.02.2026 (சனிக்கிழமை) 🛠 காரணம்: மாதாந்திர பராமரிப்பு பணிகள் ⏰ நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை இந்த நேரத்தில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது: 📍 தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம்பாறை, திரவியநகர், ராமச்சந்திரபட்டணம், மேலமெஞ்ஞானபுரம் 📍 செங்கோட்டை, கணக்கப்பிள்ளை வலசை, பெரிய பிள்ளை வலசை, பிரானூர், வல்லம், கற்குடி, புளியரை, தெற்கு மேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு 📍 சுரண்டை, இடையர் தவணை, குலையனேரி, இரட்டைக் குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூர், ஆனைக்குளம், கரையாளனூர், அச்சங்குன்றம் 📍 சாம்பவர் வடகரை, சின்னத்தம்பி நாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, M.C. பொய்கை, துரைச்சாமிபுரம் 👉 பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. #தென்காசி #மின்தடை #மின்வாரியம் #PowerCut #MaintenanceWork

தென்காசி மாவட்ட சட்டமன்றத் தேர்தல் 2026 மெகா கருத்துக்கணிப்பு

Image
தென்காசியின் புகழ்பெற்ற பாரத் கல்விக் குழும நிறுவனங்களுடன் இணைந்து பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் மற்றும் நங்கூரம் மாத இதழ் இணைந்து நடத்தும் தென்காசி மாவட்ட 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மெகா கருத்துக்கணிப்பு நடைபெற்று வருகிறது.  இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தென்காசியின் ஐந்து சட்டமன்ற தொகுதி வாரியாக முடிவுகள் வெளியிடப்படும். தென்காசி, கடையநல்லூர், ஆலங்குளம், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய ஐந்து தொகுதிகளின் கலா நிறுவனம் பற்றி அறிய எங்கள் பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழை பின் தொடருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தென்காசி ஜவுளி துறையில் புரட்சி ராஜலட்சுமி ஃபேஷன்ஃபேஷன்

Image
   தென்காசி மாவட்டத்தில் நகரின் மையப் பகுதியில் சத்தம் இல்லாமல் சாதனை படைத்து வரும் ராஜலட்சுமி டெக்ஸ்டைல்ஸ்.  தென்காசியில் வேன் ஸ்டாண்ட் அருகில் மொத்த ஜவுளி விற்பனையில் குறைந்த விலையில் நிறைந்த தரத்தோடு அனைத்துவித ஆண் பெண்களுக்கான ஆடைகளை சில்லறையிலும் மொத்த விலையிலும் விற்பனை செய்து வரும் நிறுவனம் ராஜலட்சுமி ஃபேஷன் .  கிராமப் புறப்பகுதிகளுக்கு வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகள் முதல் திருமணம், கோயில் விழாக்கள் மற்றும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் தேவையான எல்லாவித ஆடை ரகங்களும் விற்பனை செய்து வருகின்றனர்.  கிராமப்புற பகுதி மக்கள் பலரும் நம்பகமான கைராசியான கடை என்று தெரிவிக்கின்றனர்.  எந்தவித விளம்பரமும் இல்லாமல் தரமான ஆடைகளை சரியான விலையில் தருவதாலேயே மக்கள் மத்தியில் நீங்காத இடம் பெற்ற நிறுவனமாக உள்ளது.  ராஜலட்சுமி ஃபேஷன்  நிறுவன ஆடைகளின் அணிவகுப்புகளை கீழே உள்ள இன்ஸ்டாகிராம் அல்லது whatsapp லிங்க்கை பயன்படுத்தி கண்டு மகிழுங்கள். https://www.instagram.com/rajalaxmi.fashion_21?utm_source=qr&igsh=MWpheHF3aHUwYTNzdw...

ஆழ்வார்குறிச்சி பகுதிகளில் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது

Image
  தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய சரகம் பொட்டல்புதூர் பகுதியில் கடந்த 09.01.26 அன்று பூட்டியிருந்த நான்கு வீடுகளில் தொடர்ச்சியாக அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தங்கம், வெள்ளி மற்றும் பணம் ஆகியவற்றை திருடி சென்றதாக பாதிக்கப்பட்ட நபர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.S.மாதவன் T.P.S., அவர்களின் உத்தரவின் பேரில் ஆழ்வார்குறிச்சி காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பல்வேறு கோணங்களில் தீவிரமாக தேடிவந்தனர். 320 க்கும் மேற்பட்ட CCTV காட்சிகளை ஆராய்ந்து வள்ளியூரை சேர்ந்த சிவலிங்கம்(40), செட்டிகுளத்தைச் சேர்ந்த சிவகுமார்(42), மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ்(27) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி நபர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது, அவர்களிடமிருந்து திருடப்பட்ட 157 கிராம் தங்கம், 874கிராம் வெள்ளி மற்றும் பணம் ரூபாய் 15,000 பறிமுதல் செய்யப்பட்டு மேற்படி மூன்று நபர்களும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.  மேற்படி கைதுசெய்யப்பட்ட சுரேஷ் என்பவருக்கு தருமபுரி, திர...