பங்கு சந்தை நிபுணர்கள் ஒரு ஒப்பீடு. -------------- பங்குச் சந்தை நிபுணர்கள் திரு நாகப்பன் அவர்களுக்கும் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கும் இடையே ஒரு ஒப்பீடு.
பங்கு சந்தை நிபுணர்கள் ஒரு ஒப்பீடு. -------------- பங்குச் சந்தை நிபுணர்கள் திரு நாகப்பன் அவர்களுக்கும் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கும் இடையே ஒரு ஒப்பீடு.
தற்போது பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது டிமேட் கணக்குகள் மூலம் எளிதாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்கள் மூலம் பங்குச்சந்தை பற்றிய தகவல்களை உடனுக்குடன் பெற முடிகின்றது. இதனால் பலரும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றனர்.
அவர்கள் தங்கள் முதலீடுகள் செய்ய பங்குகளை தேர்ந்தெடுக்க சமூக வலைத்தளங்களான யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பங்குச் சந்தைகளை பற்றி தகவல்களை வெளியிடுபவர்களை நாடுகின்றனர்.
அவ்வாறு பங்குச்சந்தை பற்றி தமிழில் தினந்தோறும் தகவல்களை வழங்குவதில் விகடன் குழுமம் நடத்தும் ஐபிஎஸ் பைனான்ஸ் என்ற சேனலில் திருநாகப்பன் அவர்களும் மணி பேச்சு என்ற சேனலில் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்களும் தங்கள் கருத்துக்களை தினந்தோறும் பகிர்ந்து வருகின்றன.
இவ்வாறு அவர்கள் பகிர்ந்து வருவதில் பல நல்ல தகவல்கள் முதலீட்டாளர்களுக்கு சென்று சேர்க்கின்றது. அவர்கள் இருவரும் எப்படி செயல்படுகின்றனர் என்பது பற்றி ஒரு ஒப்பிட்டு அடிப்படையில் பார்க்கலாம்.
திரு நாகப்பன் அவர்கள் பல வருட பங்குச் சந்தை அனுபவம் பெற்றவர். மேலும் அவர் பங்குச்சந்தை பற்றிய தகவல்களை கூறும்போது எந்த ஒரு தனிப்பட்ட பங்கை பற்றியும் அதிகம் விவாதிப்பதில்லை. தினசரி சந்தையின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் வரும் காலங்களில் சந்தையின் செயல்பாடு எப்படி இருக்கும் எந்தெந்த துறை சார்ந்த பங்குகளுக்கு எந்த மாதிரியான எதிர்காலங்கள் இருக்கும் போன்ற பொதுவான கருத்துக்களை வழங்குவதோடு நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் மிகவும் பொறுமையுடனும் தெளிவாகவும் பதில் அளிப்பார். அது மட்டுமல்லாது எந்த ஒரு தனி நபர் பற்றியோ அல்லது அரசியல் சார்புகளும் அல்லது தனிப்பட்ட நிறுவனங்கள் பற்றியோ எதிர்மறையான கருத்துக்களையோ, மற்றவர்கள் முகம் சுழிக்கும்படியோ கருத்துக்களை ஒருபோதும் தெரிவிக்க மாட்டார். மேலும் அனைவரையும் மிகுந்த மரியாதையுடனும் மதிப்புடனும் குறிப்பிடுவார். தனக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத அல்லது தெரியாத தகவல்களை நேரடியாக அந்த தகவல்கள் தன்னிடம் இல்லை என்பதையும் சில இடங்களில் தரவுகள் தன்னால் பார்க்க முடியவில்லை என்பதையும் தெளிவாக குறிப்பிடுவார். இவரது பேச்சு அனைவருக்கும் கேட்க இனிமையாக இருப்பதுடன் மேலும் மேலும் தகவல்களை பெற ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இருக்கும்.
மணி பேச்சு சேனலில் பேசும் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்கள் பல வருட அனுபவம் உடையவர். அவரது தந்தை காலத்திலிருந்து பங்குச்சந்தை முதலீட்டில் இருந்து வருபவர். இவர் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பங்குச் சந்தையில் முதலீடு வாய்ப்புகள் இருக்கும் பங்குகளை பற்றி தெளிவாக குறிப்பிடுவதுடன் அவற்றை எந்த நேரத்தில் நாம் தேர்ந்தெடுக்கலாம் என்பது போன்ற சில அறிவுறுத்தல்களையும் தகுந்த நேரத்தில் அளிக்கக் கூடியவர். மேலும் பல நிறுவனங்களில் உள்ள பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் ஸ்தாபகர்கள் பற்றிய தகவல்களையும் அவர்களது பின்னணியும் பற்றி தெளிவாக எடுத்துக் கூறி நல்ல புரமோட்டர்கள் உள்ள பங்குகளை தேர்ந்தெடுக்க சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் உள்ளது.
ஆனால் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்களிடம் எப்போதும் தான் மேதாவி என்பது போன்ற ஒரு தோணி அவரிடம் இருக்கும். அதுமட்டுமல்லாது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி சார்பாக தனது கருத்துக்களை சாமானிய மக்களிடம் சில சமயங்களில் திணிக்கும் முயற்சிகளிலும் ஈடுபடுவார். மேலும் சில நிறுவனங்கள் பற்றியும் தனிநபர்கள் மற்றும் பெருமுதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கி கவர்னர் போன்ற பலரையும் தாழ்த்தி பேசும் வழக்கமும் இவரிடம் உண்டு. எல்லா மனிதர்களிடமும் அவரவர்களுக்கு உரித்தான பலம் மற்றும் பலவீனம் உண்டு. இங்கு யாரும் 100% சரியான மனிதர்கள் இல்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில் என்ன தான் பங்குச்சந்தைகளில் நிபுணராக இருந்தாலும் அவருடைய பேச்சுக்கள் சில சமயம் நமக்கு அதிருப்தியை ஏற்படுத்தும். திரு ஆனந்த் சீனிவாசன் அவர்கள் இது போன்ற செயல்களில் இருந்து தன்னை மாற்றிக் கொண்டால் அனைவரும் போற்றும் ஒரு மிகச்சிறந்த பங்குச்சந்தை நிபுணராக வாய்ப்பு உள்ளது. தற்போது அவரது மணி பேச்சு சேனலிலேயே வரும் கமெண்ட்கள் பலதும் அவர் மீது குறையும் குற்றம் சொல்வதாகவே உள்ளது. இவற்றை பார்த்த பின்னும் அவர் அதை மாற்ற முயற்சிக்காகது ஏன் என்பது தெரியவில்லை. -கண்ணப்பன்


Comments
Post a Comment