Free fire game ஆல் வந்த வினை


     Free Fire mobile game க்கு அடிமையாகி பள்ளி செல்வதை தவிர்த்த மாணவன். மனநிலையை மாற்றி மாணவன் பள்ளி செல்வதை உறுதி செய்த டாக்டர்.R. ஸ்டாலின் Dr.R.Stalin IPS அவர்களின் நிமிர் (The Rising Team)


* கன்னியாகுமரி மாவட்டம் - அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்த ஒன்பதாவது வகுப்பு பயிலும் பள்ளி மாணவன் நான்கு மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளான்.


* இந்த தகவலை அறிந்த, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அவர்களின்  நிமிர் (The Rising Team) குழுவின் 


* தலைமை பெண் காவலர்கள் சுமிதா, விஜயலட்சுமி மற்றும் மலர்விழி ஆகியோர் பள்ளிக்கு வராத மாணவரின் விலாசத்தை அறிந்து, 

* அவரின் வீட்டிற்கே சென்று மாணவனை தனியாக அழைத்து விசாரித்தில் "Free Fire Mobile game" க்கு அடிமையாக இருப்பதை அறிந்து கொண்டனர்.


* அந்த மாணவனுக்கு இளம் வயதின் கற்கும் கல்வியின் பலனை எடுத்து கூறி, அளவுக்கு மீறி விளையாடும் Mobile game னால் ஏற்படும் அபாயத்தை விளக்கி சிறந்த முறையில் கவுன்சிலிங் கொடுத்து...

* அடம் பிடித்த சிறுவனுக்கு தாயுள்ளத்தோடு சீருடை அணிய வைத்து, தங்களது இருசக்கர வாகனத்திலே பள்ளிக்கு கொண்டு சேர்த்தது மட்டுமின்றி, இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக சிறுவனின் நடத்தையையும் கண்காணித்தனர்.


* சிறுவன் தற்போது விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு செல்வதாகவும், Free Fire Mobile game லிருந்து விடுப்பட்டுள்ளதாகவும் சிறுவனின் பெற்றோர் கூறியுள்ளனர்..


* மேலும் சிறுவர் / சிறுமியர்களை பாதுகாக்கும் நிமிர் குழுவை உருவாக்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு  நன்றியை தெரிவித்தனர். Kanniyakumari District Police



Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் விபத்து

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?