Posts

Showing posts with the label #அறநிலையத்துறை

நம்பிக்கை துரோகியான நாம் தமிழர்

Image
  தமிழ்நாட்டில் அரசியல் முக்கிய கட்சிகளில் ஒன்று நாம் தமிழர் கட்சி. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் தமிழ் மற்றும் தமிழ் தேசியம் பற்றி எப்போதும் பேசக் கூடியவர். அப்படி அவர் தமிழ் பற்றி பேசும்போது தமிழ் கடவுள் ஆன முருகனை முப்பாட்டன் முருகன் என்று அழைப்பார்.  எப்போதும் முருகனைப் பற்றி பேசக்கூடிய திரு சீமான் அவர்கள் தமிழ் கடவுள் முருகன் திருத்தலமான திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வின் போது நடந்த பிரச்சனையைப் பற்றி வாயே திறக்காமல் அமைதி காத்துள்ளார்.  தமிழ்நாட்டில் பிஜேபி தவிர சிறுபான்மை வாக்குகளுக்காக அனைத்து கட்சிகளும் சிறுபான்மை வாக்குகளுக்காக தங்கள் சுய கௌரவத்தையும் தன்மானத்தையும் கூட அடக்க வைக்க தயங்க மாட்டார்கள் என்பதற்கு திரு சீமான் போன்றவர்களை சாட்சி. மற்ற விஷயங்களுக்கெல்லாம் முந்திக்கொண்டு கருத்து சொல்லும் திரு சீமான் அவர்கள் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றும் விழாவின் பிரச்சனையில் ஓடி ஒளிந்து கொண்டு வாயில் வாழைப்பழத்தை வைத்திருக்கிறாரா என்பது தெரியவில்லை. மொத்தத்தில் இந்து மக்களுக்கு நம்பிக்கை துரோகியாக மாறிவிட்டது நாம் தமிழர் கட்சி....

மத வழிபாடு பற்றி அரசியல் அமைப்பு என்ன சொல்கிறது?

Image
 நமது இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டம் இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்று குறிப்பிடுகிறது. இங்கே ஒருவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் அவர் விருப்பப்படி அவரது மத வழிபாட்டு முறைகளை பின்பற்ற உரிமை உள்ளது.  ஆனால் நமது தமிழ்நாட்டில் இந்து மதத்தை தவிர மற்ற எல்லா மதங்களுக்கும் அந்த உரிமை உள்ளது. ஆனால் இந்து மதத்தை நமது தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கையில் வைத்துக்கொண்டு குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போன்று வைத்திருக்கிறது.  இந்திய அரசு சட்டப்படி இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்ள அதிகாரம் கோயில் சொத்துக்களை நிர்வகித்து அதன் வரவு செலவு கணக்குகளை சரி பார்த்து கோயிலுக்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுப்பது மட்டுமே ஆகும். மற்றபடி நமது இந்து சமயத்தின் ஆகம விதிகள், வழிபாட்டு சட்டதிட்டங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளில் தலையிட உரிமை இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனால் தற்போது இந்து சமய அறநிலைத்துறை என்பது முழு வீச்சில் இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நமது இந்து கோவில்களின் நிதி வருவாய் எடுத்து அரசு பல்வேறு ...

தேசிய ஜனநாயக கூட்டணியில் திரு அண்ணாமலை அவர்களின் நிலை என்ன?

Image
  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய கூட்டணிகளை வலு சேர்க்கும் விதத்திலும் மக்களிடம் பிரச்சாரங்களிலும் தீவிரமாக ஈடுபட தொடங்கி விட்டனர்.  இந்நிலையில் பெரும்பாலான கட்சிகளில் ஒரு கட்சி அரசியலும் சூடு பிடித்துள்ளது.  தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளாக உள்ள அதிமுக பாஜக இரு கட்சிகளிலும்  உட்கட்சி பிரச்சனைகளும் அதிகார போட்டியும் மேலோங்கி உள்ளது.  அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு வைத்த முதல் நிபந்தனையாக கூறப்படுவது திரு அண்ணாமலை அவர்களை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பது.  ஏனெனில் அண்ணாமலை தமிழக பாஜகவை பெருமளவில் வளர்ச்சி இருக்கிறார் அது மட்டும் அல்லாமல் தற்போது அரசியலில் பாஜகவின் முகமாக அனைவராலும் அறியப்படுபவர் திரு அண்ணாமலை அவர்கள். இதுபோன்று மாற்றுக் கட்சியில் ஒரு தலைவர் உருவானால் அது பின்னாலே நமக்கு பிரச்சனையாக முடியும் என்று யோசித்ததாலே இது போன்ற ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  அதிமுக போன்ற வேறு கட்சியில் இருப்பவர்கள் அண்ணாமலை பார்த்து பயப்படுவது நியாயம். ஆனால் பாஜகவில் இரு...

தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் அறநிலையத்துறை குளறுபடிகள்

Image
  தென்காசி மாவட்டத்தில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோயிலில் சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக செய்யப்பட்டது.  இந்நிலையை தற்போது தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கோவிலின் பிரகாரத்தில் மழைநீர் வடிகால்கள் சரியாக அமைக்காததால் மழைநீர்  தேங்கியுள்ளது. இதனால் பக்தர்கள் பலரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். கும்பாபிஷேகத்தின் போது திருப்பணிகளுக்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டும் அவை சரியாக முறையாக செலவிடப்படவில்லை என்று பக்தர்கள் சார்பில் அப்போதே பிரச்சனை எழுப்பப்பட்டது. அது தற்போது அவர்கள் செய்துள்ள வேலைகள் எதுவுமே தரமானதாகவும் நேர்த்தியானதாகவும் இல்லை என்பது தற்போது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது.  அதுமட்டுமல்லாது தற்போது மழை நீர் வடிவ வழியில்லாததால் பக்தர்கள் பிரகாரம் சுற்றிவர போடப்பட்ட சிமெண்ட் பாதையை உடைத்து தற்போது மீண்டும் வேலை செய்து வருகின்றனர். அறநிலையதுறை இவற்றையெல்லாம் முன்பே சரியாக கவனித்திருந்தால் இதுபோன்று பக்தர்களுக்கு தொந்தரவு இல்லாமலும் கோவிலின் நிதி சரியான முறையில் செலவு செய்யப்பட்டிருக்கும்.  தற்போது...