பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?
தமிழகத்தில் பங்கு சந்தை முதலீட்டில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் தெரிந்த ஒரு முக்கிய நபர் என்றால் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்கள் தான்.
இவர் யூடியூப் வலைத்தளங்களில் மணி பேச்சு என்ற பங்குச்சந்தை சம்பந்தமான வலையொலி மூலம் தனது கருத்துக்களை மக்களுக்கு தெரிவித்து வருகிறார்.
இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் பலரும் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் பங்குச்சந்ததி மூவி எத்தனை சம்பந்தமான தகவல்களை மக்களுக்கு தெரிவிப்பதோடு முதலீடு சம்பந்தப்பட்ட அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்.
இவர் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்று கூறப்படுகறது. இதனால் பங்குச்சந்தையோடு சேர்த்து தனது அரசியல் கருத்துக்களையும் இதில் புகுத்தி வருவார்.
இதனால் தற்போது மக்களிடையே திருப்தி ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இவர் பரிந்துரை செய்த பல பங்குகள் மிகுந்த வீழ்ச்சி அடைந்துள்ளதாலும் அதைப்பற்றி அவர் எந்த கருத்துக்களும் தெரிவிக்காமல் அவருக்கு சாதகமாக எந்த பங்குகள் செயல்பட்டு இருக்கிறதோ அதை பற்றி மட்டுமே பேசி வருகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தற்போது தங்கம் உச்சத்தில் உள்ளதால் இவருடைய காணொளிகளில் பெரும்பாலும் தங்கத்தை பற்றிய பேச்சுக்களே அதிகம் பேசப்படுகிறது. இதனால் அவர் பின் தொடர்பவர்கள் பலரும் தங்கத்தை பற்றி பேசுவது குறைத்துக் கொள்ளுமாறும் இறங்கியுள்ள பங்குகளை பற்றி பேசி அவற்றை எப்படி சரி செய்வது என்ற கருத்துக்களை தெரிவிக்குமாறு கமெண்ட் செய்து வருகின்றனர்.
திரு ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கு கடந்த காலங்களில் இருந்தது போன்ற ஒரு பெரிய ரசிகர் கூட்டம் தற்போது சிறிது சிறிதாக அதிருப்தி ஏற்பட்டு மாறி வருவதாகவே பங்குச்சந்தையைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்கள் கடந்த காலங்களில் தான் பரிந்துரைத்த பங்குகளில் ஏதேனும் வீழ்ச்சி இருந்தால் அதை ஒப்புக்கொண்டு வரும் காலங்களில் அதை எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி பேச வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. பங்குச் சந்தை பொறுத்தவரை யாரும் 100% சரியாக கணிக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. தான் பணிந்து அனைத்து பங்குகளும் சரியாக செயல்படும் என்று யாராலும் கூற முடியாததால் அவர் பரிந்துரைத்த பங்குகளில் ஒன்று இரண்டு சரியாக செயல்படவில்லை என்றாலும் அதைப்பற்றி அவர் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் யாரும் தவறாக நீ என்ன வேண்டிய அவசியம் இல்லை. இது எல்லாம் கருத்தில் கொண்டு வரும் காலங்களில் சில ஆனந்த் சீனிவாசன் அவர்கள் செயல்பட வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது.


Comments
Post a Comment