Posts

Showing posts with the label #பொதிகைடைம்ஸ்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

Image
  அமெரிக்காவில் வாழ்ந்து வந்த அபர்ஜித் தீர்க்க என்ற இளைஞர் இந்தியாவில் அரசியல் செய்ய கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி என்ற அமைப்பை உருவாக்கினார்.  இந்தியாவில் கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி என்ற அமைப்பின் மூலம் நாட்டின் பல இடங்களில் ஏதாவது ஒரு பிரச்சனையை கையில் எடுத்து அதை வைத்து அரசியல் சூழ்நிலையை மாற்ற முடியாதா? என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்து வருகின்றனர்.  இவர்கள் நோக்கம் என்னவாக இருக்கிறது என்றால் இந்திய அரசுக்கு ஏதாவது ஒரு வகையில் நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த அரசும் அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் ஏதாவது ஒரு நெருக்கடிக்கு உள்ளாய் கொண்டே இருக்க வேண்டும்.  அப்போதுதான் அவர்களால் நாட்டின் வளர்ச்சி பற்றியோ அல்லது அடுத்த கட்டத்திட்டங்கள் பற்றியோ யோசிக்க விடாமல் செய்ய வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்.  அதுமட்டுமல்லாமல் இன்றைய இளைய தலைமுறை எப்படியாவது தங்கள் வலைக்குள் வீழ்த்தி தாங்கள் நினைத்த காரியத்தை சாதித்து விட வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளனர்.  கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான அரசு செயல்பட்டு வ...

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

Image
  கடந்த சில ஆண்டுகளாகவே பண பரிவர்த்தனைகளை தங்கள் ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்தி மக்கள் யுபியை வழியாக செலுத்திக் கொண்டு வந்தனர்.  இது வாடிக்கையாளர்கள் பலருக்கும் வசதியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் சில்லறை வர்த்தகம் செய்பவர்களுக்கும் சில்லறை தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகள் இல்லாமல் எளிதாக தங்கள் பெற வேண்டிய தொகையினை பெற்று வந்தனர்.  தற்போது யுபிஐ ₹2000/- மேற்பட்ட வர்த்தக ரீதியிலான பண பரிமாற்றத்திற்கு 0.4 சதவீதம் கட்டணம் விதிக்கும் நடைமுறையை அரசு கொண்டு வந்துள்ளது.  இதனால் தற்போது பல வணிக நிறுவனங்களில் யுபிஐ மூலம் பணம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் வலுக்கட்டாயமாக வலியுறுத்துகின்றனர். இது ரெண்டாயிரத்துக்கு குறைவான பண பரிமாற்றத்திற்கும் வலியுறுத்தப்படுகிறது.  இதற்குக் காரணமாக வணிகர்கள் கூறுவது நீங்கள் செலுத்துவது 2000 க்கு குறைவான சிறு தொகையாக இருந்தாலும் நாங்கள் மொத்த தொகையாக எங்களது பொருட்களை விநியோகிக்கும் வியாபாரிகளுக்கு செலுத்தும் பொழுது அவர்களுக்கு அது கட்டணமாக செலுத்த வேண்டிய சூழ்நிலை வருகிறது. இதனால் அவர்கள் எங்களிடம் அந்த கட்...

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

Image
  தற்போது உலக அளவில் வாகன போக்குவரத்தில் எலக்ட்ரிக் வாகனங்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது.  மக்கள் பலரும் பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருள் நிரப்பும் வாகனங்களை தவிர்த்து தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பி உள்ளனர். இதனால் அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் பல புதுவித மாடல்களில் எலக்ட்ரிக் வாகனங்களை சந்தையில் களம் இறக்கி வருகின்றனர்.  ஆரம்ப காலங்களில் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்ற எரிபொருள் நிரப்பும் வாகனங்களை விட செலவுகள் குறைந்ததாகவும் வாகனங்களின் பராமரிப்பு செலவு மற்றும் வாகனங்களின் விலையும் சற்று குறைவாகவே இருந்தது.  ஆனால் தற்போது உலகில் உள்ள முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல வாகனங்களையும் பலவித சிறப்பம்சங்களுடன் தொடர்ந்து களம் இறக்கி வரும் நிலையில் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களின் விலை சந்தையில் அதிகரித்துக் கொண்டே செல்வதை பார்க்க முடிகிறது. இதற்குக் காரணம் வாகனங்களுக்கு தேவையில்லாத பல சிறப்பு அம்சங்களையும் வாடிக்கையாளரின் தேவைகளை அறிந்து கொள்ளாமலேயே அளித்து வாகனங்களின் விலையை உயர்த்தும் உத்தியை கையாளுகின்றனர்.  எடுத்துக்காட்டாக இரு...

ஆனந்த் ஸ்ரீனிவாசனின் இரட்டை நிலைப்பாடு

Image
  தமிழகத்தில் பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தை தொடர்பான தகவல்களை பார்ப்பவர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்கள்.  அவர் தனது வளையளிப்பக்கங்களிலும், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தனது கருத்துக்களை தெரிவிப்பார்.  திரு ஆனந்த் சீனிவாசன் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கிய அபிமானி என்பதால் தனது கருத்துக்களில் எப்போதும் ஒரு சார்பு நிலைப்பாடோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆளும் பாஜக அரசு மற்றும் சில குறிப்பிட்ட நிறுவனங்களின் ப்ரமோட்டோர்களையும் தாக்கிப் பேசும் ஒரு சார்பு நிலைப்பாடு கொண்டவர்.  இவர் தற்போது டாடா நிறுவனத்தில் வெடித்துள்ள பிரச்சனையைப் பற்றி பேசும் பொழுது டாட்டா நிறுவனத்தின் இறுதி முடிவுகளை எடுக்கக்கூடிய  தகுதியும் அதிகாரமும் டாட்டா நிறுவனத்தின் நோயல்  டாட்டா அவர்களுக்கு தான் உண்டு என்று கூறியிருந்தார். அது முற்றிலும் சரியானது தான். அதேபோல் எடுத்துக்காட்டு அவர் கூறும் பொழுது போர்டு நிறுவனத்தை மேற்கோள் காட்டி ஒரு கருத்தை கூறியிருந்தார். அதுவும் சரியானது தான்.  ஆனால் அதே சமயம் ரிலையன்ஸ் நிறுவனத்திலையோ அல்லது அதானி நிறுவனத்திலையோ ...

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

Image
 #இலஞ்சிபேரூராட்சி  #தென்காசிமாவட்டம்  தென்காசி மாவட்டத்தில் உள்ள இலஞ்சி பேரூராட்சி நிர்வாகத்தினர் கவனத்திற்கு   இலஞ்சியில் உள்ள இலஞ்சி பேரூராட்சிதுணைத் தலைவர் அலுவலகத்துக்கு எதிரிலேயே தினமும் சில விஷமிகள் குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகின்றனர். இது ஒரு பள்ளி வளாகமாக இருப்பதாலும் பல குழந்தைகள் அந்த வழியாக பள்ளிக்கு சென்று வருவதால் குழந்தைகளுக்கு பல நோய்த்தொற்றுகள் உருவாக வாய்ப்பு உள்ளது. மேலும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் இதுபோன்ற குப்பைகளை கொட்டி இருப்பதை இளஞ்சி பேரூராட்சி நிர்வாகம் தடுத்து இதுபோன்ற நிகழ்வுகள் இனி ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இலஞ்சி துப்புரவு பணியாளர்கள் துணைத் தலைவர் அலுவலகத்திற்கு முன்பு மட்டும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து உள்ளனர். எனினும் எதிரே உள்ள சுகாதார சீர்கேடு பற்றி சிறிதும் கவலை இல்லாமல் அப்படியே விட்டுச் சென்றுள்ளனர்.  அதற்கு ஆதாரமான புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

ஆம்னி பேருந்தில் நகை திருட்டு. குற்றவாளி கைது

Image
 தூத்துக்குடி மாவட்டம்கயத்தாறு அருகே உணவகத்தில் நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தில் நகை திருட்டு  -மத்தியபிரதேசத்தில் முக்கிய குற்றவாளி கைது; 40. 08 பவுன் நகை மீட்பு* திருநெல்வேலி மாவட்டம்  பாளையங்கோட்டை பிலிப் காலனியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் சகாயராஜ். இவரது மனைவி ஜூலியட் லதா ஜெயகுமார் (59). தனியார் கல்லூரி உதவி பேராசிரியை. இவரும் அவரது கணவர் ஜஸ்டின் சகாயராஜ் இருவரும் கடந்த மாதம் 27ஆம் தேதி இரவு திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பேருந்தில் சென்றனர். பேருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறையடுத்த கரிசல்குளம் விளக்கில் சாலையோர உணவகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது பேருந்தில் ஜூலியட் லதா ஜெயக்குமார் சுமார் 40.08 பவுன் தங்க நகை உடன் வைத்து விட்டு சென்ற பையை காணாமல் போயிருந்தது.இதுகுறித்து கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பயணிகளிடம் விசாரித்தனர். மேலும் வழக்குப்பதிந்து உணவகத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் பதிவாகி இருந்த செல்போன் அழைப்புகள் விபரங்களையும்  ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து தூத்துக்குடி...

திருச்சியில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Image
 திருச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் அருகில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களது 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்று27/08/2026 வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

திராவிடம் 2.0 ஆக மாறுகிறதா? தவெக

Image
  தமிழகத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றி கழகம் கூட்டணியோடு ஆட்சி அமைத்தது.  இந்த நிலையில் அதிமுக திமுக போன்ற திராவிட கட்சிகளில் இருந்து பல முக்கிய தலைவர்களும் நிர்வாகிகளும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைய தயாராக இருப்பதாக செய்திகள் வருவதோடு பலரும் ஏற்கனவே திராவிட சித்தாந்தத்தில் இருந்து விலகி தவெகவில்  இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.   மக்கள் புதிய ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து பெரும் நம்பிக்கையுடன் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்துள்ள நிலையில் ஏற்கனவே 50 ஆண்டுகாலம் மாறி மாறி ஆட்சியில் இருந்த திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகளில் இருந்து பல தலைவர்களும் தேவைக்காக இணைந்து வருவது மக்களிடம் அதற்கு ஏற்படுத்தி உள்ளது.  மேலும் தமிழக அரசியலில் வாடிக்கையாக நடப்பது என்னவென்றால் திராவிட கட்சிகளில் உள்ள சில புல்லுருவிகள் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என்றால் எந்த கட்சிக்கு வேண்டும் எனும் தாவி தங்கள் இருப்பை நிலை நிறுத்திக் கொள்வதோடு அக்கச்சியின் முக்கிய ப...

மினி பேருந்து ஆட்டோ விபத்து இருவர் பலி

Image
  மினி பேருந்தும் லோடுஆட்டோவும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; 2 பேர் பலி! 5 படுகாயம் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே ஆய்க்குடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட கம்பிளி கிராமம் விந்தன் கோட்டை விளக்கிற்கு கீழ்ப்புறம்  சுரண்டை சாலையில் கார், லோடு ஆட்டோ,  மினி பேருந்து, விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த டிரைவர், விவசாயி என இரண்டு பேர் சம்பவ இடத்தில் உயிர் இழந்தனர் பஸ்ஸில் பயணம் செய்த ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர் இலத்தூர் அருகே சீவநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாதவன் வயது (39) இவர் லோடு ஆட்டோ  ஓட்டுகிறார்  மாலை 6 மணி அளவில் இலத்தூர் சங்கர் தெருவை சேர்ந்த தங்கையா தேவர் மகன் அண்ணாமலை வயது ( 65 ) ஆகியோர் வயலில் காய்கறிகளை   ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோவில் சுரண்டை காய்கறி மார்க்கெட்டுக்கு  சென்று  கொண்டிருந்தனர் அப்பொழுது கம்பிளிக்கு கிழக்கே விந்தக்கோட்டை விளக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது அதே வழியாக சுரண்டையை நோக்கி சென்ற கார் லோடு ஆட்டோவின் மீது பின்னால் மோதியது இதில் ஆட்டோ நிலை தடுமாறி  சென்றது அப்பொழுது சுரண்டையில் இருந...

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

Image
  *20 ஆண்டுகளாக போலி பெயரில் பாஸ்போர்ட் பயன்படுத்தி சவூதியில் வேலை: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைது* திருநெல்வேலி மாவட்டம், உவரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பதாக போலி முகவரி மற்றும் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி, கடந்த 20 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்த நபர், சொந்த ஊருக்குத் திரும்பியபோது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உவரி காவல் நிலையத்தில் பாஸ்போர்ட் சரிபார்ப்பு பணிகளை மேற்கொண்டு வரும் பெண் முதல் நிலை காவலர் செல்வகனி, வெளிநாட்டில் இருந்து புதுப்பிப்புக்காக வந்திருந்த ஒரு பாஸ்போர்ட் விண்ணப்பத்தை ஆய்வு செய்தபோது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. சவூதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்டிருந்த அந்தப் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில், திருநெல்வேலி மாவட்டம் உவரி, பரதர் உவரி வடக்குத் தெருவைச் சேர்ந்த 'ஜார்ஜ், தந்தை பெயர் போரஸ்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, கடந்த ஜூலை 2-ஆம் தேதி அந்த முகவரியில் காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அந்த முகவரியில் ஜார்ஜ் என்ற பெயருடைய நபர் உண்மையா...

மனிதநேயத்துடன் உயிரை பணயம் வைத்த இந்தியர்

Image
  ருமேனியா நாட்டில் கட்டிட வேலைக்காக சென்ற விபின் குமார் என்ற இந்தியருக்கு, ருமேனியா குடியுரிமை வழங்கி சிறப்பித்திருக்கிறது அந்த நாட்டு அரசு.  ருமேனியாவில் பனிப்பொழிவுக்காலம் என்பதால் ஏரிகள் அனைத்தும் உறைந்து காணப்படும். அப்படிப்பட்ட ஒரு ஏரியில் இறங்கிய சிறுமி ஒருவர், பனிக்கட்டி உடைந்து நீருக்குள் விழுந்து விட்டார். அப்போது அந்த வழியாக நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த விபின் குமார் சிறிதும் யோசிக்கலாம் சிறுமியை காப்பாற்ற களம் இறங்கினார்.  பனிக்கட்டிகள் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும் என்ற ஆபத்து இருந்ததால், கரையிலிருந்து ஊர்ந்து கொண்டே சிறுமி அருகில் சென்று சேர்ந்தார். ஆனால் விபின் குமாரின் எடையை தாங்காமல் பனிக்கட்டிகள் உடைந்து விபின்குமாரும் நீருக்குள் விழுந்தார். ஆனாலும் மனம் தளராமல் சிறுமியை தன் மீது ஏற்றிக்கொண்டு மீட்புக்குழுவினர் வருவதற்காக காத்திருக்க ஆரம்பித்தார்.  தன் உயிரையும் பொருட்படுத்தாமல், கடும் குளிரையும் கண்டு கொள்ளாமல்  20 நிமிடத்துக்கு மேல் குளிர்ந்த நீரில் சிறுமியுடன் காத்திருந்தார் விபின். மீட்புக்குழுவினர் துரிதமாக செயல்பட்டு இருவரையும்...

பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய இளைஞர்

Image
 *புளியங்குடியில் காதல் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஏற்பாடு செய்வததாகக்கூறி காதல்மனைவி குழந்தையுடன் காதல்கணவரின் வீட்டின் முன்பு தர்ணா- கணவரின் பெற்றோர்கள் பெண்ணை தாக்கி விரட்டும் வீடியோ வைரல்* தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகள் மஞ்சுப்ரியா (எ)தன்ஷிலா (25) இவர் இதே புளியங்குடி பகுதியை சேர்ந்த இளைஞர்  முகமது இத்ரிஸ்(27) என்பவரும்  கடந்து ஐந்து வருடங்களாக காதலித்து வந்த நிலையில் மஞ்சு ப்ரியா (எ) தன்ஷிலா சென்னையில் உள்ள கல்லூரிக்கு படிக்க சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து காதலன் முகமது இத்ரீஸை தனது பெற்றோர்கள் வேலைக்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துள்ள  நிலையில் மூன்று மாதங்கள் வெளிநாட்டில் இருந்த இவர் தனது பெற்றோர்களுக்கு தெரியாமல் சென்னையில் படிக்கும் தனது காதலியை சந்திக்கச் சென்ற நிலையில் பின்னர் இருவரும் ஒன்றாக சேர்ந்து வசித்து வந்த நிலையில் இருவருக்கும் திருமணம் ஆகுவதற்கு முன்பே பெண்குழந்தை பிறந்துள்ளது. இந்த விபரம்  மஞ்சுப்ரியாவின் பெற்றோருக்கு தெரிய வந்ததை அடுத்து புளியங்குடி  ஜமாத்தார்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற...

youtuberகளின் அட்டகாசம்

Image
   கேரளாவில் சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸரான ஃபாஸ்மினா ஜாக்கீர் (Fazmina Zakir) மற்றும் ஒரு வயது முதிர்ந்த ஆட்டோ டிரைவருக்கு இடையே நடந்த இந்த சர்ச்சை, தற்போது கேரள சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தின் முழு பின்னணி மற்றும் தற்போதைய நிலவரம் இதோ: ஃபாஸ்மினா ஒரு நாள் இரவு நேரத்தில் ஒரு ஆட்டோவில் ஏறி, டாடாவின் பிரபல துணிக்கடையான **"ஜூடியோ" (Zudio)** ஷோரூமிற்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். ஆட்டோ ஓட்டுநர் வயது முதிர்ந்த நபர் என்பதால், அவருக்கு 'ஜூடியோ' என்ற பெயர் சரியாகப் புரியவில்லை. அவர் அதை 'ஸ்டுடியோ' (Studio)என்று தவறாகப் புரிந்து கொண்டார். அதனால் அந்த ஆட்டோ ஓட்டுநர், "இங்கே நிறைய போட்டோ ஸ்டுடியோக்கள் இருக்கின்றன, உங்களுக்கு எந்த ஸ்டுடியோவிற்கு போக வேண்டும்?" என்று சாதாரணக் கேள்வியைத் திருப்பிக் கேட்டுள்ளார். ஃபாஸ்மினாவின் வீடியோவும் சர்ச்சையும் ஆட்டோ ஓட்டுநர் கேட்ட கேள்வியை தவறான நோக்கத்தில் எடுத்துக்கொண்ட ஃபாஸ்மினா, உடனே தனது மொபைலை எடுத்து அவரை வீடியோ செய்யத் தொடங்கினார். மேலும், அந்த ஆட்டோ ஓட்டுநர் **மது...

காதல் மனைவியின் நம்பிக்கை துரோகம்

Image
  புதிய வாகனம் ஒன்றை வாங்கிய பிறகு, அதைத் தனது பெற்றோரிடம் காட்டும் வரை எந்த இளைஞருக்கும் அளவிட முடியாத உற்சாகம் இருக்கும். குஜராத்தின் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்த 30 வயதான ரவி தீரஜ்லால் மர்கானாவும் அப்படித்தான் மகிழ்ச்சியில் இருந்தார். 2025 ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் அவர் தனது கனவு வாகனமான புதிய ராயல் என்ஃபீல்டு புல்லெட்டை வாங்கியிருந்தார். புதிய பைக்கில் பெருமிதத்துடன் பெற்றோரைக் காணச் செல்ல அவசரப்பட்ட அவர், அந்தப் பயணம் தனது வாழ்க்கையின் கடைசி பயணமாக மாறும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ரவியின் வாழ்க்கைக் கதை ஒரு திரைப்படத்தை நினைவுபடுத்தும் வகையிலானது. கடன் மதிப்பீட்டாளராக பணியாற்றிய அவர், இருபது வயதின் தொடக்கத்தில் ரிங்கிள் வகாசியா என்ற இளம்பெண்ணை காதலித்தார். குடும்பத்தினரின் எதிர்ப்புகளை மீறி, உலகத்தையே எதிர்த்து அவர்கள் தங்களது காதலை வெற்றியடையச் செய்தனர். இறுதியில் உறவினர்களும் சம்மதம் தெரிவித்தனர். 2017-ல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஐந்து வயது மகனும் உள்ளார். திருமணத்திற்குப் பிறகு சில காலம் பெற்றோருடன் வசித்த அவர்கள், பின்னர் அருகிலுள்ள ர...

திண்டுக்கல் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற மர்ம நபர் நபர் கைது

Image
 #_திண்டுக்கல்லில் மெடிக்கல் கடையில் வைத்து போதை மருந்து,  போதை ஊசி, போதை மாத்திரைகள் விற்பனை செய்த வாலிபர் கைது - 15,000 போதை மருந்துகள், போதை மாத்திரைகள் பறிமுதல்* திண்டுக்கல் நகர் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து நகர் DSP.கார்த்திக் தலைமையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர்கள் சூரியகலா, பிரபாகரன் மற்றும் காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது கிழக்கு ரத வீதியில் சிட்டி மெடிக்கல் என்ற மருந்து கடையில் சட்டவிரோதமாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து அதிக போதை தரக்கூடிய போதை மாத்திரைகள், போதை ஊசிகள், போதை மருந்துகள் ஆகியவற்றை விற்பனை செய்த திண்டுக்கல், நத்தர்ஷா தெரு பகுதியை சேர்ந்த ஆரிப்அகமது(32) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 15,000 போதை ஊசிகள், போதை மருந்துகள், போதை மாத்திரைகள் பறிமுதல் செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இன்றைய18/05/2026 செய்தி துணுக்குகள்

Image
 

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Image
  அகமதாபாத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் சுமார் 11 மாதங்களாக விற்பனையாளராகப் பணியாற்றி வந்த ஹர்ஷிதா ஷெட்டி என்பவர், தன் முதலாளியின் நம்பிக்கையைச் சிதைத்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில், உரிமையாளர் தனக்கு அவசர வேலை நிமித்தமாக விடுப்பு அளித்துள்ளதாக சக ஊழியர்களிடம் பொய் கூறிவிட்டு அவர் கடையிலிருந்து வெளியேறியுள்ளார். அன்று மாலை வழக்கமான கணக்கெடுப்பின் போது ஒரு தங்க பிரேஸ்லெட் காணாமல் போனதைக் கவனித்த ஊழியர்கள், உரிமையாளர் தர்ஷன்பாயிடம் இதுகுறித்து விசாரித்தபோதுதான் ஹர்ஷிதா யாரிடமும் சொல்லாமல் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கடையில் இருந்த நகைகளை முழுமையாகச் சோதனை செய்தபோது, சுமார் 1.66 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலிகள், மோதிரங்கள், தாலிகள், பதக்கங்கள், காதணிகள் மற்றும் கைக்கடிகாரங்கள் எனப் பெருமளவிலான ஆபரணங்கள் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த உரிமையாளர் உடனடியாக சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஹர்ஷிதா நைசாக நகைகளைத் தனது சீருடைக்குள் மற...

இன்றைய11/05/2026 செய்தி துணுக்குகள்

Image
 

இன்றைய10/05/2026 செய்தி துணுக்குகள்

Image
 

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

Image
  நடந்து முடிந்த 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பலரும் எதிர்பார்க்காத ஆச்சரியமான முடிவுகளை மக்கள் கொடுத்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் போது முன்னாள் அரசு கொடுத்த உதவித்தொகை இலவசங்கள் போன்ற எதையும் எதிர்பார்க்கவில்லை என்பதையும், மேலும் வாக்குக்கு பணம் பெற்றுக் கொண்டு பலரும் மாற்றி வாக்களித்துள்ளதையும் உறுதிப்படுத்துகிறது.  இதன் மூலம் அரசியல்வாதிகள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இனி வரும் காலங்களில் நீங்கள் வாக்குச் செலுத்த பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி விடலாம் என்பதை நினைத்துப் பார்க்க முடியாது என்பதை தெரிவித்துள்ளனர்.  அது மட்டுமல்லாமல் ஆட்சி முடியும் தருவாயில் நீங்கள் மக்களை ஏமாற்ற கொடுக்கும் சிறப்பு உதவித்தொகைகள், விழாக்கால தொகுப்புகள், மற்றும் உதவித்தொகைகள் போன்ற எதுவும் வாக்குகளைப் பெற்றுத் தராது என்பதை நிரூபித்துள்ளனர்.  அதற்கு பதிலாக ஐந்தாண்டுகளும் சிறப்பான சட்டம் ஒழுங்குடன், தரமான உட்கட்டமைப்பு, ஊழலற்ற ஆட்சி, சிறந்த மருத்துவ வசதி, சிறந்த பொதுப் போக்குவரத்து, சிறப்பான தரமான கல்வி முறை இதுபோன்ற வசதிகளை செய்து கொடுத்தால...