Posts

Showing posts with the label #பிஜேபி

மத்திய அரசு கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்

Image
  திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது.  தற்போது விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மோடி தலைமையிலான மத்திய அரசு கொப்பரைத் தேங்காய் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பலன் அளிக்கக் கூடிய வகையில் அரைக்கும் கொப்பரைக்கு குவிண்டாலுக்கு ரூ 12027/- என்றும் பந்து கொப்பரைக்கு குயின்ஷாளுக்கு ரூ  12500/- என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் பகுதியின் வேட்பாளர் எப்படி இருக்க வேண்டும்?

Image
 தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உங்கள் பகுதியில் நல்ல வேட்பாளரை எப்படி தேர்வு செய்யலாம் என்பது குறித்து சில கருத்துக்கள் கொடுத்துள்ளோம். இதை பயன்படுத்தி சிறந்த வேட்பாளரை தேர்வு செய்து வாக்களித்து வெற்றி பெற வைத்து உங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க வழி செய்யுங்கள்.  முதலில் உங்கள் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை தயார் செய்து கொள்ளுங்கள். அதில் ஏற்கனவே பலமுறை போட்டியிட்ட வேட்பாளர்களின் விவரங்களை வைத்து ஆர் போட்டியிட்ட ஒவ்வொரு முறையும் என்னென்ன வாக்குறுதிகள் எல்லாம் அளித்துள்ளார். அதில் எத்தனை சதவீதத்தை நிறைவேற்றி உள்ளார். அவர் சார்ந்த அரசியல் கட்சி என்னென்ன வாக்குறுதிகளை அளித்தது அதில் எவற்றையெல்லாம் நிறைவேற்றி உள்ளது என்பது குறித்து ஒரு பட்டியல் தயார் செய்யுங்கள். இதை வைத்து அவர்கள் எத்தனை சதவீதம் நம்பகத்திற்குரியவர்கள் என்பதை முடிவு செய்யுங்கள்.  உங்கள் பகுதியில் அரசியல் கட்சிகளையும் தாண்டி உங்கள் தனிப்பட்ட அரசியல் சார்பையும் விட்டு தனிப்பட்ட முறையில் எந்த வேட்பாளர் சிறந்தவர் என்பதை கண்டறிய உங்கள் பகுதியி...

தமிழகம் மெல்ல மெல்ல தெலுங்கர்கள் பிடியில் செல்கிறதா?

Image
  தமிழகத்தில் தற்போது நடந்து வரும் திமுக ஆட்சி எப்போதும் செய்வது மொழி அரசியல்.  அவர்கள் எப்போதும் இந்தி மொழியை எதிர்த்து போராட்டம் நடத்துவதும் ஏதோ தமிழ் மொழிக்கு அவர்கள் தான் பாதுகாப்பு அதிகாரம் பெற்றவர்கள் போலவும் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள்.  ஆனால் உண்மையில் தமிழ் மொழியை திட்டமிட்டு அழிப்பதும் தமிழர்களை பின்னுக்கு தள்ளி தெலுங்கர்களை வாழ வைப்பதும் திமுக தான் என்பதை தமிழ் மக்கள் எப்போது அறிந்து கொள்வார்கள் என்பதே தெரியவில்லை.  மூன்றாவது மொழியாக இந்தி வந்தால் தமிழ் அழிந்துவிடும் என்று கூறுபவர்கள் தங்கள் அமைச்சரவையில் பெரும்பான்மை அமைச்சர்கள் தெலுங்கர்கள் என்பதை மறைத்துக் கொண்டே வருவார்கள்.  இந்தி மொழி எதிர்ப்பது போலவே தெலுங்கர்களின் தெலுங்கு மொழியையும் எதிர்க்க வேண்டும் என்பது தானே நியாயம். இந்தி மொழி வந்தால் தமிழ் அழியும் என்றால் தெலுங்கு மொழி வந்தாலும் தமிழ் அழிய தானே செய்யும்.  இங்கிருக்கும் அமைச்சர்கள் ஊழல் செய்து கொள்ளை அடித்த பணத்தில் பங்கு கொடுக்கும் கடவுள் கூட தெலுங்கு தேசத்தில் தான் இருக்கிறார்.  அதுமட்டுமல்லாது மறைமுகமா...

தமிழக வாக்காளர்களின் கனிவான கவனத்திற்கு

Image
  தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழக வாக்காளர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் திறமையான நேர்மையான சிறந்த வேட்பாளரை தேர்வு செய்ய என்ன செய்ய கீழே உள்ள கேள்விகளை அவர்களிடம் கேட்டு அதற்கு அவர்கள் அளிக்கும் பதில்கள் உங்களுக்கு திருப்தி அளிப்பதாக இருந்தால் நீங்கள் அவர்களுக்கு வாக்களிக்கலாம். அப்படி நீங்கள் இதை பின்பற்றும் பட்சத்தில் உங்கள் தொகுதி வளர்ச்சி அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பானதாக இருக்க வாய்ப்புகள் உண்டு.  முதலில் தற்போது வெற்றி பெற்று பதவியில் உள்ள  வேட்பாளர் தங்களிடம் கலந்து தேர்தலின் போது பிரச்சாரத்திற்கு வரும்போது என்னென்ன வசதிகள் செய்து கொடுப்பேன் என்றும் அடிப்படை வசதிகளில் எதை செய்வேன் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார் என்பதை பழைய தேர்தல் அறிக்கையை எடுத்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் வெற்றி பெற்ற  வேட்பாளர் சார்ந்துள்ள கட்சி வெற்றி பெற்ற கட்சியா? அவ்வாறு அவர் வெற்றி பெற்ற கட்சியிலோ அல்லது கூட்டணியோ இருந்திருந்தால் அந்தக் கூட்டணி கொடுத்துள்ள வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டனரா? என்று முதலில் பார...

வங்கதேசத்தினர் ஊடுருவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

Image
  நமது இந்திய நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தச் சட்டம் தற்போது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் திருநாமல்  காங்கிரஸ் திமுக போன்ற எதிர்க்கட்சிகள் பலவும் வாக்காளர் திருத்தச் சட்டத்தை எதிர்த்து வருகின்றன.   இந்த தீவிர வாக்காளர் திருத்தச் சட்டத்தால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம். பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருக்கும் நபர்கள் இறந்து போயிருந்தாலும் அல்லது மாற்றலாகி வேறு இடங்களுக்குச் சென்று இருந்தாலோ அவர்களது வாக்குரிமை பட்டியலில் இருக்கும். அவற்றை கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டியது அவசியம். அதேபோல் 18 வயதிற்கு மேல் உள்ள புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. பலர் சட்ட விரோதமாக அந்நிய நாட்டவர்கள் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளனர் அவற்றின் கண்டறிந்து நீக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.  இதனால் பெரும்பான்மை பொதுமக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெறும் நிலை உருவாகும். கள்ள ஓட்டுக்கள் தடுக்கப்படும் சட்டவிரோத ஜனநாயக நடைமுறைகள் தடுக்கப்படும். பொதுமக்கள்...

இரட்டை வேடம் போடுகிறாரா கனிமொழி?

Image
  திமுகவில் உள்ள தலைமை குடும்பத்தில் நிர்வாக திறனும் ஆளுமையும் அரசியல் தந்திரங்களும் அதிகம் தெரிந்த ஒரே தலைவர் என்றால் திருமதி கனிமொழி அவர்கள் மட்டுமே.  கனிமொழி அவர்கள் அரசியலில் ஓரளவுக்கு குறைந்தபட்ச நாகரிகத்தை கடைபிடிக்கும் திமுக அரசியல்வாதியாக அறியப்பட்டவர்.  ஆனால் அவரும் பல தேர்தல்களில் பல பொய்யான வாக்குறுதிகளை அழிக்க காரணமாக இருந்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டின் திமுக அரசின் தேர்தல் அறிக்கை தயாரித்த முக்கிய தலைவர்களில் அவரும் ஒருவர் ஆவார்.  திருமதி கனிமொழி அவர்கள் 2016 தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது கட்சி உறுப்பினர்களோ தலைவர்களோ யார் மதுபான ஆலை நடத்தினாலும் அது மூடப்படும் என்றும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த ஆவண செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் அதிமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் அதிக மக்கள் மதுவால் இருந்ததாகவும் இதனால் இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் மாறிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.   அதேபோல் 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது சுங்க கட்டணம் ரத்து கேஸ் சிலிண்டர் ...

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

Image
  அரசியலைப் பொருத்தவரை எல்லா அரசியல்வாதிகளும் பெரும்பாலும் சுயநலவாதிகளாகவே இருப்பார்.  பல அரசியல்வாதிகளும் தாங்கள் இருந்த கட்சியிலிருந்து வேறு ஒரு கட்சிகளுக்கு செல்வது வாடிக்கையான ஒன்றுதான்.  அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் அவர்களை பொருத்தவரையில் அவர் எம்ஜிஆர் காலம் தொட்டு எம்ஜிஆரின் தீவிர விசுவாசியாகவும் அதன்பின் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாகவும் எல்லோராலும் அறியப்பட்டவர். அவரின் விசுவாசத்தை பார்த்து தான் ஜெயலலிதாவுக்கு இக்கட்டான சூழ்நிலையில் அவரின் முதல்வராக்கி அரசையும் கட்சியையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார். அவரும் அதே விசுவாசத்தோடு கண்ணியத்தோடும் மீண்டும் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார்.  இதனால் அதிமுகவை பொறுத்தவரை ஓ பன்னீர்செல்வம் சிறந்த விசுவாசி  என்பது அனைவருக்கும் தெரியும்.  ஆனால் ஜெயலலிதா மறைவிற்குப் பின் சசிகலா கட்சியை கைப்பற்ற நினைத்தபோது அதற்கு எதிராக போர் போடி தூக்கிட்டு தர்மயுத்தம் செய்ததிலிருந்து ஆரம்பித்தது அவரது வீழ்ச்சி.  ஓபிஎஸ்ஐ பொறுத்த வரை அவர் ஒரு சிறந்த நிர்வாகி இல்லை என்பது அதிமுக கட்சியின் தொண்டர்களை கணித்தது. அதன...

சிங்கப்பூரின் லீ க்வான் யூ போன்று இந்தியாவிற்கு மோடியா?

Image
 சிங்கப்பூரில் மலேசியா தனி நாடாக அறிவிக்கும் போது அந்த நாட்டில் வறுமையை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஒரு சிறிய நகரத்து அளவே உள்ள சிங்கப்பூர் வறுமையில் இருந்து மீண்டு இன்று உலக நாடுகள் அண்ணாந்து பார்க்கும் வளர்ந்துள்ளது.  இப்படி அந்த நாடு மிகப்பெரும் வளர்ச்சி அடைவதற்கு முக்கிய காரணமாக இருந்த அரசியல் தலைவர் லீ க்வான் யூ ஆவார்.  சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த போது அந்நாட்டின் பிரதமராக இருந்த லீ க்வான் யூ அந்நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஒரே எண்ணத்தில் வேலை செய்தார். நாட்டில் ஊழல்கள் இல்லாமல் அறவே ஒழித்தார்.  எந்த ஒரு வளமும் இல்லாத சிங்கப்பூர் நாட்டில் தொழில்துறை வளர்ச்சிக்காக அந்நிய நாட்டு முதலீடுகளை ஈர்த்தார்.  சிங்கப்பூர் நாடு 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரின் தலைமையில் கீழ் சிறப்பாக முன்னேறியது. அவருடைய சிந்தனை செயல் அனைத்தும் நாட்டை முன்னேற்றுவதை பற்றிய இருந்தது.  இதனால் அவர் எதிர்த்து செயல்பட்டு வந்த அனைத்துக் கட்சிகளும் ஒன்றரை சதவீதத்திற்கும் கீழான மக்கள் ஆதரவையே பெற முடிந்தது.  இந்தியாவில் தற்போது நரேந்திர மோடி அவர்களும் இது போன்...

தமிழகத்தில் தனித்தன்மையை இழக்கிறதா? பாஜக

Image
 தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் அரசியல் நிகழ்வுகளை வேகமாக நகர்த்தி வருகின்றன.  இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூரில் தமிழக வெற்றி கழகம் நடத்திய கூட்டத்தில் நடைபெற்ற தெரியாத சம்பவத்தை அடுத்து அனைத்து அரசியல் கட்சிகளிலும் அரசியலும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.  தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் கரூர் சம்பவத்தை வைத்து எப்படி எல்லாம் அரசியல் செய்ய வேண்டும் என்று கட்டம் கட்டி வருகின்றனர்.  இதில் தமிழக பாஜக விஜய்க்கு ஆதரவாக களமாடி வருகிறது. இச்சம்பவத்திற்கு பொறுப்பாக வேண்டியவர்களில் விஜய்யும் ஒரு முக்கிய பொறுப்பாளியாவார். அரசு எந்த அளவுக்கு இந்த சம்பவத்திற்கு பொறுப்போ அதே அளவிற்கு விஜய்க்கும் பொறுப்புண்டு என்பது மக்களின் கருத்தாக உள்ளது.  ஆனால் பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை எப்படியாவது விஜயை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அவருக்கு ஆதரவாக செயல்பட்டு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் சாமானிய மக்களுக்கும் சில பாஜக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கு...

பொங்கிய போராளிகள் எங்கே

Image
 கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசால் நடத்தப்படும் ஆவின் பால் நிறுவனத்தின் 4.5% கொழுப்பு உள்ள பச்சை நிற பால் பாக்கெட்டுகள் நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக 3.5% கொழுப்பு உள்ள புதிய பால் பாக்கெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு #தந்தி தொலைக்காட்சி பால்வளத்துறை அமைச்சர் திரு மனோ தங்கராஜ் அவர்களிடம் ஒரு நேர்காணல் நடத்தும் போது பச்சை நிற பாக்கெட்டுகள் நிறுத்தப்பட்ட தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் மிகுந்த திமிருடன் கொழுப்பு கூட இருந்தா நல்லா இருக்கும் என்று பதில் அளித்தார். அதுமட்டுமல்லாமல் குறைந்த கொழுப்பு சதவீதம் உள்ள பால் மக்களுக்கு நல்லது எனது மக்களுக்கு எது நல்லது என்று சொல்ல எனக்கு உரிமை இல்லையா என்பது போன்று பதில் அளித்து இருந்தார். இதேபோன்று வடமாநிலங்களில் மாட்டுக்கறி விவகாரத்தில் பதிலளித்த போது இங்கே உள்ள போராளிகளும் திமுகவைச் சேர்ந்த அரசியல் பிரபலங்களும் குறிப்பாக கனிமொழி போன்றவர்களும் என் தட்டில் என்ன உணவு இருக்க வேண்டும் என்று அவர்கள் எப்படி முடிவு செய்யலாம். #என்உணவுஎன்உரிமை என்பது போன்ற ஹேஷ்டேக்குகளுடன் கருத்து தெரிவித்திருந்த...