பொங்கிய போராளிகள் எங்கே
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசால் நடத்தப்படும் ஆவின் பால் நிறுவனத்தின் 4.5% கொழுப்பு உள்ள பச்சை நிற பால் பாக்கெட்டுகள் நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக 3.5% கொழுப்பு உள்ள புதிய பால் பாக்கெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது.
இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு #தந்தி தொலைக்காட்சி பால்வளத்துறை அமைச்சர் திரு மனோ தங்கராஜ் அவர்களிடம் ஒரு நேர்காணல் நடத்தும் போது பச்சை நிற பாக்கெட்டுகள் நிறுத்தப்பட்ட தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் மிகுந்த திமிருடன் கொழுப்பு கூட இருந்தா நல்லா இருக்கும் என்று பதில் அளித்தார். அதுமட்டுமல்லாமல் குறைந்த கொழுப்பு சதவீதம் உள்ள பால் மக்களுக்கு நல்லது எனது மக்களுக்கு எது நல்லது என்று சொல்ல எனக்கு உரிமை இல்லையா என்பது போன்று பதில் அளித்து இருந்தார்.
இதேபோன்று வடமாநிலங்களில் மாட்டுக்கறி விவகாரத்தில் பதிலளித்த போது இங்கே உள்ள போராளிகளும் திமுகவைச் சேர்ந்த அரசியல் பிரபலங்களும் குறிப்பாக கனிமொழி போன்றவர்களும் என் தட்டில் என்ன உணவு இருக்க வேண்டும் என்று அவர்கள் எப்படி முடிவு செய்யலாம். #என்உணவுஎன்உரிமை என்பது போன்ற ஹேஷ்டேக்குகளுடன் கருத்து தெரிவித்திருந்தனர். இப்போது அவர்கள் வாயில் எல்லாம் என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை. எனது பால் தமிழரில் எந்த பால் இருக்க வேண்டும் என்பது எனது உரிமை அதை எப்படி மனோ தங்கராஜ் சொல்லலாம் #என்உணவுஎன்உரிமை என்ற ஹாஷ்டேக்குகள் இப்போதைய வரவில்லை. திமுகவின் அற்பத்தனமான அரசியலை மற்ற கட்சிகள் புரிந்து கொண்டு அதற்கு இதுபோன்ற நேரங்களில் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்பது சாமானிய மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
#என்உணவுஎன்உரிமை
#ஆவின்
#பால்
#அரசியல்
#BJB
#ADMK
.jpeg)
.jpeg)
Comments
Post a Comment