மக்களின் பொழுது வாக்கு சாதனங்களின் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது சினிமா. தமிழ் சினிமா என்பது பல வருட பாரம்பரியம் கொண்டதாக இருந்து வருகிறது. தியாகராஜ பாகவதர் தொடங்கி எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் என பலரும் மிகப்பெரிய நட்சத்திரங்களாக உலா வர தமிழ் சினிமா காரணமாக இருந்துள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த காலங்களில் பக்தி படங்கள் குடும்ப படங்கள் பொழுதுபோக்கு படங்கள் காமெடி படங்கள் சென்டிமென்ட் படங்கள் ஆக்ஷன் படங்கள் என்ன பல வகைப்பட்ட திரைப்படங்கள் வந்துள்ளன. ஆனால் சமீப காலங்களில் தமிழ் சினிமாவில் கற்பனை வறட்சி என்பது தலை விரித்து ஆடுகிறது. சமீப காலங்களில் வந்துள்ள இயக்குனர்கள் அனைவரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தங்கள் திறமைகளை நம்புவதை விட தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் பிரம்மாண்டங்களை காண்பித்து வெற்றி பெற விரும்புகின்றனர். கதையோட்டத்தை பற்றியும் நல்ல திரைக்கதை பற்றியும் சரியான போதிய புரிதல் இல்லாதவர்களாக இருக்கின்றனர். குழந்தைகள் வீட்டில் பப்ஜி கேம் விளையாடுவது போன்று திரைப்படங்களை உருவாக்க விரும்புகின்றனர். ...