அழிவு பாதையில் இருந்து மீண்டு எழுமா தமிழ் சினிமா?
மக்களின் பொழுது வாக்கு சாதனங்களின் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது சினிமா.
தமிழ் சினிமா என்பது பல வருட பாரம்பரியம் கொண்டதாக இருந்து வருகிறது. தியாகராஜ பாகவதர் தொடங்கி எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் என பலரும் மிகப்பெரிய நட்சத்திரங்களாக உலா வர தமிழ் சினிமா காரணமாக இருந்துள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த காலங்களில் பக்தி படங்கள் குடும்ப படங்கள் பொழுதுபோக்கு படங்கள் காமெடி படங்கள் சென்டிமென்ட் படங்கள் ஆக்ஷன் படங்கள் என்ன பல வகைப்பட்ட திரைப்படங்கள் வந்துள்ளன.
ஆனால் சமீப காலங்களில் தமிழ் சினிமாவில் கற்பனை வறட்சி என்பது தலை விரித்து ஆடுகிறது. சமீப காலங்களில் வந்துள்ள இயக்குனர்கள் அனைவரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தங்கள் திறமைகளை நம்புவதை விட தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் பிரம்மாண்டங்களை காண்பித்து வெற்றி பெற விரும்புகின்றனர். கதையோட்டத்தை பற்றியும் நல்ல திரைக்கதை பற்றியும் சரியான போதிய புரிதல் இல்லாதவர்களாக இருக்கின்றனர். குழந்தைகள் வீட்டில் பப்ஜி கேம் விளையாடுவது போன்று திரைப்படங்களை உருவாக்க விரும்புகின்றனர்.
பல படங்கள் வன்முறையும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் ஆகவும்ஆகவும் துப்பாக்கி அருவாள் போன்ற ஆயுதங்களுடன் படம் முழுக்க வன்முறை காட்சிகள் நிறைந்ததாகவும் இன்றைய தலைமுறையை முழுமையாக வன்முறை பாதைக்கு இழுத்துச் செல்லும் கருவியாக திரைப்படங்கள் மாறி உள்ளதை உணர முடிகிறது.
என்றும் நமது தமிழ் மக்கள் பக்திப் படங்களின் மீதும் நல்ல கதையை மட்டும் இல்ல திரைப்படங்கள் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். குறிப்பாக பெண்களின் வருகை தியேட்டர்களில் மிகவும் மிகவும்குறைந்துள்ளது. பெண்களை தியேட்டர்களுக்கான அனைத்து வர feel good படங்களும் பக்தி படங்களும் உதவும்.
தமிழ் சினிமாவில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் ஊழலை எதிர்த்து போராடியதற்காகவே இரண்டாம் பாகத்தில் கதையின் நாயகனான கமலஹாசனை ஓட ஓட அடிப்பது போன்ற காட்சிகளை எல்லாம் வைத்து மக்களுக்கு இவர்கள் விரும்பிய சில செய்திகளை திணிக்கும் என்று தோற்றுப் போயினர். இந்தியன் இந்தியன் யாரால் எடுக்கப்பட்டது எந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்டது என்பது அனைவரும் அறிந்தது. அவர்கள் செய்த பல தவறுகளையும் ஊழல்களையும் நியாயப்படுத்த மக்கள் மனதில் ஊழல் பெரிய விஷயம் இல்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த இந்தியன் 2 படத்தை எடுத்து அதில் தோல்வி கண்டுள்ளனர்.
இது போன்ற சில தவறானவர்களின் கைகளில் தமிழ் சினிமா சிக்கிக் கொண்டுள்ளது. இதனால்தான் தமிழ் சினிமா அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
கடந்த காலங்களில் விசு போன்ற சிறந்த இயக்குனர்கள் மிகக் குறைந்த பட்ஜெட்டில் ஒரு வீட்டிற்குள்ளே நல்ல கதையும் சொல்ல படத்தை வெற்றியும் பெற்றுள்ளனர். பல சிறந்த டைரக்டர்களும் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் ஆண்டு கொண்டிருந்த சினிமா துறையை தற்போது சிலர் தவறானவர்களின் கைகளில் மாட்டி சீரழிவது வேதனையாக உள்ளது.



Comments
Post a Comment