சமீபத்திய செய்திகள்
நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭
நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭 கடந்த(21/12/2025) அன்று நாகர்கோவில் டதி பெண்கள் பள்ளியில் இருந்து பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி செல்லும் சாலையில் நேற்று கேரள அரசு பஸ் சென்று கொண்டிருந்தபோது எதிர்புறத்தில் ஆனந்த் என்ற இளைஞர் ஒட்டி வந்த பைக்கும் பஸ்ஸும் மோதிக்கொண்டது. இதில் இளைஞர் ஆனந்த் (31) ரோட்டில் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)
தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு இராமர் திருக்கோயில் 1. செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock) இந்தக் கோயிலின் மிக முக்கிய சிறப்பம்சமே, பார்ப்பவர்களை வியக்க வைக்கும் ஒரு பிரம்மாண்டமான ஒற்றைப் பாறை தான். • அமைப்பு: இந்த நீண்ட மற்றும் உயரமான பாறை, மிகச்சிறிய பிடிமானத்தின் மீது செங்குத்தாக நிற்கிறது. எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தினாலும், பல நூற்றாண்டுகளாக அசையாமல் அப்படியே நிற்கிறது. • தவம் செய்யும் முனிவர்: இப்பாறையைத் தூரத்திலிருந்து பார்க்கும்போது, ஒரு முனிவர் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்வது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. இதனாலேயே மக்கள் இதை ஒரு புனிதமான இடமாகக் கருதுகிறார்கள். 2. தல வரலாறு மற்றும் புராண பின்னணி • இராமரின் வருகை: வனவாசத்தின் போது ஸ்ரீ ராமர், சீதை மற்றும் இலட்சுமணனுடன் இந்த இடத்திற்கு வந்ததாக நம்பப்படுகிறது. காசி, சிவகாசி மற்றும் தென்காசிக்குச் சென்ற பிறகு ராமர் இந்தத் "இளமலை" (Ilamalai) பாறைப் பகுதியில் தங்கி ஓய்வெடுத்ததாகக் கூறப்படுகிறது. • வற்றாத சுனை: இங்குள்ள பாறையின் மீது இரா...
உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து
உளுந்துார்பேட்டை அருகே ஓம்சக்தி பக்தர்கள் சென்ற தனியார் சொகுசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். திருச்சி மாவட்டம், லால்குடியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஓம்சக்தி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக தனியார் சொகுசு பஸ்சில் மேல்மருவத்துாருக்கு சென்றனர். நேற்று இரவு மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலில் சுவாமி தரிசனம் முடிந்த பிறகு, மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டனர். காலை 8:00 மணிக்கு, உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர். தொடர்ந்து, அனைவரும் மாற்று பஸ் மூலம் லால்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கிரேன் மூலம் விபத்துக்குள்ளான பஸ் மீட்கப்பட்டது. விபத்து குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். @topfans #idumban #fblifestyles #PothigaiTimes #PothigaiTimesnews
இன்றைய(24/12/2025) செய்தி துணுக்குகள்
ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் விபத்து
இன்றைய(22/12/2025) செய்தி துணுக்குகள்
Free fire game ஆல் வந்த வினை
Free Fire mobile game க்கு அடிமையாகி பள்ளி செல்வதை தவிர்த்த மாணவன். மனநிலையை மாற்றி மாணவன் பள்ளி செல்வதை உறுதி செய்த டாக்டர்.R. ஸ்டாலின் Dr.R.Stalin IPS அவர்களின் நிமிர் (The Rising Team) * கன்னியாகுமரி மாவட்டம் - அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்த ஒன்பதாவது வகுப்பு பயிலும் பள்ளி மாணவன் நான்கு மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளான். * இந்த தகவலை அறிந்த, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நிமிர் (The Rising Team) குழுவின் * தலைமை பெண் காவலர்கள் சுமிதா, விஜயலட்சுமி மற்றும் மலர்விழி ஆகியோர் பள்ளிக்கு வராத மாணவரின் விலாசத்தை அறிந்து, * அவரின் வீட்டிற்கே சென்று மாணவனை தனியாக அழைத்து விசாரித்தில் "Free Fire Mobile game" க்கு அடிமையாக இருப்பதை அறிந்து கொண்டனர். * அந்த மாணவனுக்கு இளம் வயதின் கற்கும் கல்வியின் பலனை எடுத்து கூறி, அளவுக்கு மீறி விளையாடும் Mobile game னால் ஏற்படும் அபாயத்தை விளக்கி சிறந்த முறையில் கவுன்சிலிங் கொடுத்து... * அடம் பிடித்த சிறுவனுக்கு தாயுள்ளத்தோடு சீருடை அணிய வைத்து, தங்களது இருசக்கர வாகனத்திலே பள்ளிக்கு கொண்டு சேர்த்தது ...
படையப்பா பாகம் 2 தயாராகிறதா?
நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க மெகா ஹிட் வெற்றி படங்களில் ஒன்று படையப்பா. தற்போது ரஜினி அவர்கள் தனது பிறந்தநாள் அன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் படையப்பாவின் இரண்டாம் பாகம் தயாராக விவாதங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் அந்தப் படத்திற்கு நீலாம்பரி என்று பெயர் சூட்ட இருப்பதாகவும் இருப்பதாகவும் விரைவில் முறையான அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிவித்தார்.












Comments
Post a Comment