Posts

Showing posts with the label #பாலிடிக்ஸ்

திமுகவின் பெயர் அரசியல் எடுபடுமா?

Image
  தமிழகத்தில் தற்போது மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி அதைப் பெயர் மாற்றியது சம்பந்தமாக திமுக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.  திமுக செய்யும் இந்த பெயர் அரசியலில் அவர்களே சிக்கப் போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. காரணம் தமிழகத்தில் பல விடுதலைப் போராட்ட வீரர்கள் முக்கிய அரசியல் தலைவர்கள் இருந்தும் இவர்கள் வைக்கும் அனைத்து திட்டத்திற்கும் பெயர் முதலமைச்சர் ஸ்டாலின் பெயராகவே உள்ளது. மேலும் பல அரசு பேருந்து நிலையங்களுக்கும் கட்டிடங்களுக்கும் பாலங்களுக்கும் கருணாநிதி பெயர் அல்லது தெலுங்கர்களின் பெயர்களையே வைத்துள்ளனர். இவர்கள் இதுவரை ஏதாவது ஒரு திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயரை வைத்துள்ளனர் என்ற கேள்வி எழுகிறது.   பாராளுமன்றத்தில் திருச்சி சிவா எம் பி அவர்கள் தென்னிந்திய குறிப்பாக தமிழ் சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றி வடமாநிலங்களில் உள்ளவர்களுக்கும் மத்திய அரசுக்கும் தெரியவில்லை என்றும் உரிய அங்கீகாரம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.  ஆனால் இங்கு தமிழ்நாட்டில் ஒரு திட்டத்திற்கு கூட ஒரு இடத்திற்கு கூட ...

நடிகர் விஜயின் ஊமைக்குத்து அரசியல்

Image
  நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தற்போது அரசியலில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் நீட் விளக்கு, சிறப்பு வாக்காளர் திருத்தச் சட்டம் போன்றவற்றை வைத்து அரசியல் செய்து வந்தார்.  ஆனால் தமிழக அரசின் நிர்வாக திறமையின்மை, அந்நிய முதலீடு இருப்பதில் நடந்த குளறுபடிகள், தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் பாலியல் வன்கொடுமைகள், வேங்கை வெயில் பிரச்சனை, கனிம வள கொள்ளை போன்ற எந்த பிரச்சனையைப் பற்றி பேசாமல் திமுகவுக்கு முட்டுக்கொடுத்து அரசியல் செய்து வரும் நடிகர் விஜய் தற்போது சிறுபான்மை வாக்குகளை குறிவைத்து காய் நகர்த்தி வருவதால் தற்போது வெகுவாக பேசப்பட்டு வரும் திருப்பரங்குன்றம் பிரச்சினையும் தனது கருத்தை சொல்ல வக்கில்லாமல் திராணியில்லாமல் அமைதியாக பனையூரில் பதுங்கி இருப்பதாக தகவல் வந்துள்ளது.  இவரை களம் இறக்கீடு கிறிஸ்தவ மிஷனரி சிறுபான்மை மக்களும் பின்னாலிருந்து செயல்படுவதால் திருப்பரங்குன்றத்தில் நடந்த அநீதியை பற்றி பேசினால் இவரது அரசியல் முடிவு வந்துவிடும்  என்று அஞ்சி நடுங்கி பேசாமல் இருக்கிறார்.  மேலும் தற்போது சிறுபான்மை மக்களை பொருத்தவரை ஸ...

சிறுபான்மை வாக்கு வங்கி படுத்தும்பாடு

Image
  நமது இந்திய திருநாடு மதசார்பற்ற நாடு என்று அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா முழுவதிலும் அரசியல் கட்சிகள் மட்டும் மதசார்பற்று இயங்குவதில்லை.  அதேபோல் சில மதங்கள் சார்ந்தவர்களும் அந்த மத அமைப்புகளும் அரசியல் நிலைப்பாட்டை கொண்டுள்ளன. அந்த குறிப்பிட்ட மதங்களைப் பொறுத்தவரை ஒரு தனி மனிதன் தான் விருப்பப்பட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்க அனுமதிப்பதில்லை. மாறாக அவர்களின் மதக் கூட்டமைப்பு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறதோ அவர்களுக்கு வாக்கைச் செலுத்துகின்றனர்.   இதனால் தேர்தல் நேரங்களில் அரசியல் கா நேரங்களில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு அவர்களை திருப்திப்படுத்தும் பணியில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் கேட்கும் வாக்குறுதிகளை செய்து தருவதாக உறுதி அளிப்பதோடு ஆட்சிக்கு வந்த பின்னும் அவர்களுக்கு வாலாட்டும் நாய்கள் போல சில அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன.  சிறுபான்மையினரின் வாக்குகளை பெற வேண்டும் என்றால் அவர்கள் எதிர்பார்க்கிறார்களோ இல்லையோ மற்ற மதங்களை குறை சொல்லி அவர்களை விரோத மனப்பான்மையோடு அணுகினால் மட்டுமே சிறுபான...

விடுதலைச் சிறுத்தைகள் கடந்து வந்த பாதை

Image
  தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம் தான் விடுதலை சிறுத்தைகள். இது அந்த மக்களின் முன்னேற்றத்திற்கும் வாழ்வாதாரத்தில் மாற்றங்களை கொண்டு வரவும் உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு அரசியல் களத்தில் செயல்பட்டு வந்தது.  ஆரம்ப காலத்தில் அவர்களின் நோக்கத்தில் சரியான பாதையில் சென்று கொண்டிருந்தவர்கள். நாளடைவில் அரசியல் சூழ்நிலைகள் காரணமாகவும் தங்கள் சுயலாபத்திற்காகவும் சில தவறான முடிவுகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.  அது மெல்ல மெல்ல விரிவடைந்து தற்போது விடுதலை சிறுத்தைகள் பற்றிய பொது மக்களின் கருத்து எப்படி இருக்கிறது என்றால் சமூக விரோத செயல்களிலும் கட்டப்பஞ்சாயத்துகளிலும் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் மற்ற சமூகப் பெண்களிடம் காதல் என்ற பெயரில் தொந்தரவு செய்து அவர்கள் வாழ்க்கையை சீரழிப்பது அல்லது பெற்றோர்களிடம் கட்ட பஞ்சாயத்து பேசுவது பணம் பறிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் பரவலாக கூறப்படுகிறது.  அதுமட்டுமல்லாமல் ரவுடிகளாகவும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் அரசியல் அல்லகைகளாகவுமே இருக்கின்றனர் என்றும் அரசிய...

பாண்டிச்சேரியை குறி வைக்கிறாரா விஜய்

Image
தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி கிடைக்காத நிலையில் பாண்டிச்சேரியில் தனது பிரசாரத்தை பயன்படுத்தி நடிகர் திலகம் எம்ஜிஆர் போன்று அவர் பாணியில் முதலில் பாண்டிச்சேரியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நடிகர் விஜய் செயல்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.  நடிகர் விஜய் அவர்களோடு இருக்கும் திரு புஸ்ஸி ஆனந்த் அவர்கள் ஏற்கனவே பாண்டிச்சேரி எம்எல்ஏவாக இருந்தவர். பாண்டிச்சேரி அரசியல் குறித்து சில தகவல்களை அறிந்து வைத்திருப்பதோடு அங்குள்ள அரசியல் தலைவர்களின் வட்டாரத்தில் அவருக்கு பழக்கம் உள்ளது.  இதனால் அங்குள்ள அரசியல் சூழ்நிலைகளை பயன்படுத்தி அங்கு ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி வரும் சட்டமன்றத் தேர்தலில் பாண்டிச்சேரியில் ஆட்சியைப் பிடிப்பது தமிழக வெற்றிக் கழகத்தின் எண்ணமாக உள்ளது என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் பின்னால் ஓடும் அரசியல்வாதிகள்

Image
  தமிழக அரசியல் எப்போதுமே திரை பிரபலங்களை தூக்கி வைத்துக் கொண்டாடும் என்பதில் சந்தேகமில்லை. நமது தமிழக வாக்காளர்களின் மனநிலையை சினிமாவில் ஒரு நடிகர் நல்லது செய்வது போல் நடித்தால் அதை நம்பி ஏமாறும் சுபாவம் படைத்தவர்கள் தான்.  தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் தொடங்கியுள்ள கட்சியை நம்பி அதிமுகவில் உள்ள பல பெரிய அரசியல் அனுபவம் உள்ள  தலைவர்களும் மற்றும் சில தொண்டர்களும் தாவியுள்ளனர்.  இது அதிமுக மட்டுமல்லாமல் மற்றுமுள்ள அனைத்து கட்சிகளிலிருந்தும் சிலர் தமிழக மக்கள் நடுநிலை கொண்டாடுவார்கள் என்ற சிந்தனையோடு கட்சி மாற வாய்ப்பு உள்ளது.  ஆனால் அரசியலில் நடிகருக்குள்ள ஒரு ஈர்ப்பும் புகழும் மட்டுமே போதாது. ஒரு நல்ல தலைவருக்கு முக்கியமான அம்சங்கள் என்னவென்றால்  தொலைநோக்குப் பார்வை   ஒரு அரசியல் தலைவர் இன்று வரும் பிரச்சினைகளை மட்டும் தீர்ப்பதோடு மட்டுமல்லாமல் பின்னாளில் பல ஆண்டுகளுக்குப் பிறகும் அது போன்ற பிரச்சினைகள் திரும்ப எழும்ப வண்ணம் முடிவுகளை எடுக்க வேண்டும்.  முன்னேற்றத் திட்டங்கள்   இப்போது நமது பகுதியில் உள்ள பிரச்சனைகள...

சொந்தக்காசில் சூனியம் வைத்த உதயநிதி

Image
  திமுக அறிஞர் அண்ணா ஆரம்பித்த கட்சி என்றாலும் அக்கட்சி தற்போது கருணாநிதி குடும்பம் மொத்தம் தான் ஆண்டு அனுபவித்து வருகிறது.  அந்த வகையில் தற்போது கருணாநிதி தொலைந்து ஸ்டாலின் ஸ்டாலினை தொடர்ந்து உதயநிதி தலைமை பதவிக்கு வர தயாராகிக் கொண்டிருக்கிறார்.  அதற்கு முன்னோட்டமாக வாழும் சட்டமன்றத் தேர்தலில் அவரை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யும் வகையில் ஒரு புதிய பாடலை தயார் செய்து திமுக வெளியிட்டுள்ளது.  அது தற்போது எதிர்மறை பாதிப்பை அதிகமாக திமுகவிற்கு வழங்கி வருகிறது. அந்தப் பாடலை வைத்து தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் ரசிகர்கள், அதிமுக தொண்டர்கள், பாஜக தொண்டர்கள் மற்றும் திமுக எதிர்ப்பாளர்கள் அனைவரும் உதயநிதியையும் அந்தப் பாடலையும் வைத்து சிறப்பான முறையில் ட்ரோல்  செய்து வருகிறார்கள். இது திமுகவுக்கு பலத்த பின்னாடைவாகவே பார்க்கப்படுகிறது.  தமிழக வெற்றி கழக விஜய் மற்றும் பாஜக அண்ணாமலை போன்ற இளம் தலைவர்களுக்கு எதிராக உதயநிதியை பெரிய தலைவராக ஒரு பிம்பத்தை உருவாக்க நினைத்து தனது சொந்த காசி சூனியம் வைத்தது போல் கொஞ்சநஞ்சம் திமுகவினரிடம் இருந்த தலைவர் இமேஜையும் டோட்டல் ட...

உங்கள் பகுதியின் வேட்பாளர் எப்படி இருக்க வேண்டும்?

Image
 தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உங்கள் பகுதியில் நல்ல வேட்பாளரை எப்படி தேர்வு செய்யலாம் என்பது குறித்து சில கருத்துக்கள் கொடுத்துள்ளோம். இதை பயன்படுத்தி சிறந்த வேட்பாளரை தேர்வு செய்து வாக்களித்து வெற்றி பெற வைத்து உங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க வழி செய்யுங்கள்.  முதலில் உங்கள் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை தயார் செய்து கொள்ளுங்கள். அதில் ஏற்கனவே பலமுறை போட்டியிட்ட வேட்பாளர்களின் விவரங்களை வைத்து ஆர் போட்டியிட்ட ஒவ்வொரு முறையும் என்னென்ன வாக்குறுதிகள் எல்லாம் அளித்துள்ளார். அதில் எத்தனை சதவீதத்தை நிறைவேற்றி உள்ளார். அவர் சார்ந்த அரசியல் கட்சி என்னென்ன வாக்குறுதிகளை அளித்தது அதில் எவற்றையெல்லாம் நிறைவேற்றி உள்ளது என்பது குறித்து ஒரு பட்டியல் தயார் செய்யுங்கள். இதை வைத்து அவர்கள் எத்தனை சதவீதம் நம்பகத்திற்குரியவர்கள் என்பதை முடிவு செய்யுங்கள்.  உங்கள் பகுதியில் அரசியல் கட்சிகளையும் தாண்டி உங்கள் தனிப்பட்ட அரசியல் சார்பையும் விட்டு தனிப்பட்ட முறையில் எந்த வேட்பாளர் சிறந்தவர் என்பதை கண்டறிய உங்கள் பகுதியி...

தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் சரியா?

Image
  தமிழகத்தில் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்பும் மனநிலையில் உள்ளனர் என்று பரவலான கருத்து நிலவி வரும் நிலையில் நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.  தமிழக வெற்றி கழகத்திற்கு மக்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பும் உள்ளது. கரூரில் நடைபெற்ற சம்பவத்திற்கு பின் அமைதி காத்து வந்த தமிழக வெற்றி கழகத்தினர் தற்போது லேசாக வெளிவந்து மீண்டும் தங்கள் அரசியலை தொடங்கியுள்ளனர்.   தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய தலைவர்கள் நடிகர் விஜய் புஸ்சி ஆனந்த் உட்பட பலரும் கரூர் சம்பவத்திற்கு பின் ஒளிந்து கொண்டனர். தற்போது அதன் தாக்கம் குறைந்து சகஜ நிலைக்கு திரும்பிய பின் தங்களின் அரசியலை தொடர ஆரம்பித்துள்ளனர்.  இந்நிலையில் அவர்கள் செய்யும் அரசியல் என்பது திமுகவின் காப்பியாகவே உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். திமுக தங்கள் அரசியலில் எப்படி முன்னெடுத்துச் செல்கிறதோ அதேபோன்று  தமிழக வெற்றி கழகத்தின் அரசியலும் செயல்படுகிறது.  குறிப்பாக மத்திய அரசை காரணம் இல்லாமல் எதிர்ப்பதிலும், நீட் தேர்வு விவகாரத்திலும், சிறப்பு வாக்க...

தமிழகம் எங்கே செல்கிறது? சமூக விரோதிகளின் கூடாரமாக ஆகிறதா?

Image
 தமிழ்நாட்டில் தற்போது சமூக விரோத செயல்கள் பாலியல் வன்கொடுமைகள் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.  அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே ஞானசேகரன் என்ற திமுக அனுதாபியால் நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமையில் ஆரம்பித்து சிறுமி முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருகின்றன.   தற்போது கோவை மாவட்டத்தில் காரில் அமர்ந்து நண்பருடன் பேசிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.  தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். ஹிட்லராக மாறுவேன் சர்வாதிகாரமாக நின்று வசனம் பேசிவிட்டு சட்டம் ஒழுங்கை இரும்புக்கரம் கொண்டு காப்பேன் என்று டயலாக் எல்லாம் பேசிவிட்டு தற்போது அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாரா என்பது தெரியவில்லை  சமீப காலங்களில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதோடு பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அதிகரித்து வருவதாக அரசியல் விமர்சகர்களும் எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டுகின்றனர்.  இனியாவது காவல்துறை விழித்துக் கொண்டு போதிய பாதுகாப்...

இரட்டை வேடம் போடுகிறாரா கனிமொழி?

Image
  திமுகவில் உள்ள தலைமை குடும்பத்தில் நிர்வாக திறனும் ஆளுமையும் அரசியல் தந்திரங்களும் அதிகம் தெரிந்த ஒரே தலைவர் என்றால் திருமதி கனிமொழி அவர்கள் மட்டுமே.  கனிமொழி அவர்கள் அரசியலில் ஓரளவுக்கு குறைந்தபட்ச நாகரிகத்தை கடைபிடிக்கும் திமுக அரசியல்வாதியாக அறியப்பட்டவர்.  ஆனால் அவரும் பல தேர்தல்களில் பல பொய்யான வாக்குறுதிகளை அழிக்க காரணமாக இருந்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டின் திமுக அரசின் தேர்தல் அறிக்கை தயாரித்த முக்கிய தலைவர்களில் அவரும் ஒருவர் ஆவார்.  திருமதி கனிமொழி அவர்கள் 2016 தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது கட்சி உறுப்பினர்களோ தலைவர்களோ யார் மதுபான ஆலை நடத்தினாலும் அது மூடப்படும் என்றும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த ஆவண செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் அதிமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் அதிக மக்கள் மதுவால் இருந்ததாகவும் இதனால் இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் மாறிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.   அதேபோல் 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது சுங்க கட்டணம் ரத்து கேஸ் சிலிண்டர் ...

சிங்கப்பூரின் லீ க்வான் யூ போன்று இந்தியாவிற்கு மோடியா?

Image
 சிங்கப்பூரில் மலேசியா தனி நாடாக அறிவிக்கும் போது அந்த நாட்டில் வறுமையை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஒரு சிறிய நகரத்து அளவே உள்ள சிங்கப்பூர் வறுமையில் இருந்து மீண்டு இன்று உலக நாடுகள் அண்ணாந்து பார்க்கும் வளர்ந்துள்ளது.  இப்படி அந்த நாடு மிகப்பெரும் வளர்ச்சி அடைவதற்கு முக்கிய காரணமாக இருந்த அரசியல் தலைவர் லீ க்வான் யூ ஆவார்.  சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த போது அந்நாட்டின் பிரதமராக இருந்த லீ க்வான் யூ அந்நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஒரே எண்ணத்தில் வேலை செய்தார். நாட்டில் ஊழல்கள் இல்லாமல் அறவே ஒழித்தார்.  எந்த ஒரு வளமும் இல்லாத சிங்கப்பூர் நாட்டில் தொழில்துறை வளர்ச்சிக்காக அந்நிய நாட்டு முதலீடுகளை ஈர்த்தார்.  சிங்கப்பூர் நாடு 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரின் தலைமையில் கீழ் சிறப்பாக முன்னேறியது. அவருடைய சிந்தனை செயல் அனைத்தும் நாட்டை முன்னேற்றுவதை பற்றிய இருந்தது.  இதனால் அவர் எதிர்த்து செயல்பட்டு வந்த அனைத்துக் கட்சிகளும் ஒன்றரை சதவீதத்திற்கும் கீழான மக்கள் ஆதரவையே பெற முடிந்தது.  இந்தியாவில் தற்போது நரேந்திர மோடி அவர்களும் இது போன்...

தமிழகத்தில் தனித்தன்மையை இழக்கிறதா? பாஜக

Image
 தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் அரசியல் நிகழ்வுகளை வேகமாக நகர்த்தி வருகின்றன.  இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூரில் தமிழக வெற்றி கழகம் நடத்திய கூட்டத்தில் நடைபெற்ற தெரியாத சம்பவத்தை அடுத்து அனைத்து அரசியல் கட்சிகளிலும் அரசியலும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.  தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் கரூர் சம்பவத்தை வைத்து எப்படி எல்லாம் அரசியல் செய்ய வேண்டும் என்று கட்டம் கட்டி வருகின்றனர்.  இதில் தமிழக பாஜக விஜய்க்கு ஆதரவாக களமாடி வருகிறது. இச்சம்பவத்திற்கு பொறுப்பாக வேண்டியவர்களில் விஜய்யும் ஒரு முக்கிய பொறுப்பாளியாவார். அரசு எந்த அளவுக்கு இந்த சம்பவத்திற்கு பொறுப்போ அதே அளவிற்கு விஜய்க்கும் பொறுப்புண்டு என்பது மக்களின் கருத்தாக உள்ளது.  ஆனால் பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை எப்படியாவது விஜயை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அவருக்கு ஆதரவாக செயல்பட்டு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் சாமானிய மக்களுக்கும் சில பாஜக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கு...

அரசியல் அனாதைகளாக தெரியும் தமிழர்கள்.

Image
 அரசியல் அனாதைகளாக தெரியும் தமிழர்கள்.  தற்போது தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் அரசியல் பிரச்சாரக் கூட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கரூரில் நடத்திய பிரச்சார கூட்டத்தில் 41 உயிர்பலி நடந்துள்ளது.  இதற்கு தமிழக மக்கள் முக்கிய காரணம்.  இன்றைய அரசியல்  சூழ்நிலையில் தமிழக மக்களுக்கு பல அரசியல் தலைவர்கள் மீதும் நம்பிக்கை இல்லை. அவர்கள் எதிர்பார்த்தது போல் ஆட்சிகளும் அமையவில்லை. எனவே மக்களின் எதிர்பார்ப்பு ஏதாவது ஒரு தலைவன் வந்து நம்மை காப்பாற்றி தமிழகத்திற்கு நல்லாட்சி கொடுக்க மாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். அதனால் புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் தலைவர்கள் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் சினிமா துறையில் பிரபலமாக இருந்து தற்போது அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் அவர்களுக்கு எதிர்பார்ப்பு கூடுதலாக உள்ளது என்பதை உண்மை.  ஆனால் நம் மக்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். நம் அரசியல் சிந்தனையும் புரிதலும் இன்னும் பல மடங்கு மேம்பட வேண்டி உள்...

கரூர் சம்பவம் யார் யார் காரணம்?

Image
 கரூர் சம்பவம் யார் யார் காரணம்?  நடிகர் விஜய் அவர்கள் தனது அரசியல் ஆசையின் காரணமாக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை உருவாக்கி தற்போது தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கரூரில் அவரது பிரச்சார கூட்டத்தில் 41 உயிர்கள் பலியாகி உள்ளது. இதற்கு யார் யார் காரணம் அவர்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம்.  முதல் தவறு யார் மீது? கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மீது முதல் தவறு என்பது எனது கருத்து.  காரணம் விஜய் வருவதற்கு பல மணி நேரத்திற்கு முன்பாகவே அங்கு போய் பலரும் காத்திருந்துள்ளனர். அதிலும் அவரது ரசிகர்களும் தொண்டர்களும் சிறிது கூட பொறுப்பற்றவர்களாகவும் சிந்திக்கும் திறன் அற்றவர்களாகவும் அதுமட்டுமல்லாமல்மற்றவர்கள் சொல்லும் நல்ல அறிவுரைகளை கேட்கும் மனநிலையிலும் இல்லை. அவர்கள் விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து செல்வதும் போக்குவரத்துக்கு இடையூறு செய்வதும் மற்றும் பிரச்சாரம் நடக்கும் இடங்களில் மின்கம்பங்களில் ஏறுவதும் மரங்களில் ஏறுவதும் அங்கிருக்கும் கடைகள் மற்றும் வீடுகளின் மீது ஏறி தொங்குவதும் ப...

பொங்கிய போராளிகள் எங்கே

Image
 கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசால் நடத்தப்படும் ஆவின் பால் நிறுவனத்தின் 4.5% கொழுப்பு உள்ள பச்சை நிற பால் பாக்கெட்டுகள் நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக 3.5% கொழுப்பு உள்ள புதிய பால் பாக்கெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு #தந்தி தொலைக்காட்சி பால்வளத்துறை அமைச்சர் திரு மனோ தங்கராஜ் அவர்களிடம் ஒரு நேர்காணல் நடத்தும் போது பச்சை நிற பாக்கெட்டுகள் நிறுத்தப்பட்ட தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் மிகுந்த திமிருடன் கொழுப்பு கூட இருந்தா நல்லா இருக்கும் என்று பதில் அளித்தார். அதுமட்டுமல்லாமல் குறைந்த கொழுப்பு சதவீதம் உள்ள பால் மக்களுக்கு நல்லது எனது மக்களுக்கு எது நல்லது என்று சொல்ல எனக்கு உரிமை இல்லையா என்பது போன்று பதில் அளித்து இருந்தார். இதேபோன்று வடமாநிலங்களில் மாட்டுக்கறி விவகாரத்தில் பதிலளித்த போது இங்கே உள்ள போராளிகளும் திமுகவைச் சேர்ந்த அரசியல் பிரபலங்களும் குறிப்பாக கனிமொழி போன்றவர்களும் என் தட்டில் என்ன உணவு இருக்க வேண்டும் என்று அவர்கள் எப்படி முடிவு செய்யலாம். #என்உணவுஎன்உரிமை என்பது போன்ற ஹேஷ்டேக்குகளுடன் கருத்து தெரிவித்திருந்த...