சிறுபான்மை வாக்கு வங்கி படுத்தும்பாடு

 


நமது இந்திய திருநாடு மதசார்பற்ற நாடு என்று அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா முழுவதிலும் அரசியல் கட்சிகள் மட்டும் மதசார்பற்று இயங்குவதில்லை.

 அதேபோல் சில மதங்கள் சார்ந்தவர்களும் அந்த மத அமைப்புகளும் அரசியல் நிலைப்பாட்டை கொண்டுள்ளன. அந்த குறிப்பிட்ட மதங்களைப் பொறுத்தவரை ஒரு தனி மனிதன் தான் விருப்பப்பட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்க அனுமதிப்பதில்லை. மாறாக அவர்களின் மதக் கூட்டமைப்பு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறதோ அவர்களுக்கு வாக்கைச் செலுத்துகின்றனர். 

 இதனால் தேர்தல் நேரங்களில் அரசியல் கா நேரங்களில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு அவர்களை திருப்திப்படுத்தும் பணியில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் கேட்கும் வாக்குறுதிகளை செய்து தருவதாக உறுதி அளிப்பதோடு ஆட்சிக்கு வந்த பின்னும் அவர்களுக்கு வாலாட்டும் நாய்கள் போல சில அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன.

 சிறுபான்மையினரின் வாக்குகளை பெற வேண்டும் என்றால் அவர்கள் எதிர்பார்க்கிறார்களோ இல்லையோ மற்ற மதங்களை குறை சொல்லி அவர்களை விரோத மனப்பான்மையோடு அணுகினால் மட்டுமே சிறுபான்மை வாக்குகள் கிடைக்கும் என்ற முட்டாள்தனமான எண்ணத்தில் ஊறிப் போய் உள்ளன அரசியல் கட்சிகள். அதுமட்டுமல்லாது சிறுபான்மையினரை சில சமயங்களில் மற்ற மதத்தினருக்கு எதிராக தூண்டி விடுவது போன்ற மட்டமான செயல்களிலும் அரசியல் கட்சிகள் ஈடுபடுகின்றன.

 உண்மையில் எந்த ஒரு சாமானிய சிறுபான்மையினரும் அவர்கள் மதக் கோட்பாடுகளின் படி நெறிமுறைகளைக் கடை வைத்து நடப்பதோடு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுவார்கள். ஆனால் அவர்களை மூளைச்சலவை செய்து மத அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் மற்ற மதத்தினருக்கு எதிரான வன்முறைகளை உருவாக்குகின்றன.

 அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு

 இந்த ஆண்டு(2025) திருப்பரங்குன்றம் மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்தும் அரசு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டும் மக்கள் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

 ஆனால் தங்கள் சுயலாபத்திற்காகவும் சிறுபான்மை மக்களை தூண்டி விட்டு ஆளுங்கட்சி செய்த தவறுகளை மறக்க வைப்பதற்கும் சிறுபான்மையிடம் நான் தான் உங்கள் காவலன் என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவும் திமுக இந்து மக்களின் வழிபாட்டை தடுக்க பிரம்ம பிரயத்தனம் செய்தது.

 ஆனால் திமுகவிற்கு ஒன்று புரியவில்லை. தொடர்ந்து இது போன்ற இந்து விரோத போக்குகளால் அவர்களுக்கு சிறுபான்மையின வாக்குகள் காப்பாற்றப்பட்டாலும் இந்து சாமானிய மக்களின் வாக்கு வாங்கி வெகுவாக விழிப்புணர்வு அடைந்து திமுகவை விட்டு விலகிச் செல்கிறது என்பதை உணரவில்லை. அதை திமுக உணரும் பொழுது ஆட்சி அதிகாரம் மட்டுமல்லாது அவர்களது கட்சியை காணாமல் போகும் சூழ்நிலையும் ஏற்படலாம்.

 இது போன்ற தவறுகளை காங்கிரஸ் கட்சி செய்து அதற்கான பலனை தற்போது அனுபவித்து வருகிறது. ஆனாலும் அவர்கள் திருந்திய பாடில்லை. இது இன்னும் திருணாமல் காங்கிரஸ் கட்சி போன்ற பல கட்சிகளுக்கு இது போன்ற ஆபத்து உள்ளது.


Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?