தமிழகத்தில் இன்றைய இளைய தலைமுறை அரசியல் தலைவர்களில் யார் தகுதியானவர்?
தமிழக அரசியல் களம் தற்போது இளைஞர்களை சுற்றி நடந்து வருகிறது. தமிழகத்திலும் முதல் முறை வாக்களிக்கும் இளைய தலைமுறை வாக்காளர்கள் அதிகம் உள்ள நிலையில் அவர்களின் மனம் கவர்ந்த தலைவர் யார் என்ற கோணத்தில் நாம் இளைஞர்களுடன் கலந்தாலோசித்த பொழுது அவர்களின் எதிர்பார்ப்பு இளம் தலைவர்கள் பற்றி தான் இருந்தது. ஒருவர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் ஆகவும் அடுத்தவர் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் திரு அண்ணாமலை அவர்களாகவும் திமுகவின் இளம் தலைமுறை தலைவராக இளைஞர்களின் தேர்வாக உள்ளது. இன்றைய தமிழக அரசியல் முழுவதும் இவர்கள் மூவரை சுற்றிய நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. நாம் பொதிகை டைம்ஸ் இதழ் நிருபர்கள் இளைஞர்களுடன் கலந்து ஆலோசித்த பொழுது அவர்கள் கூறிய சில கருத்துக்கள் அடிப்படையில் யாருக்கு எப்படி வாய்ப்புகள் உள்ளது என்பதை பற்றி விவரத்தை பார்க்கலாம். நடிகர் விஜய் அவர்களைப் பொறுத்தவரை தமிழக வெற்றி கழகம் அரசியல் கட்சியின் மூலம் தமிழக முழுவதும் பல லட்சக்கணக்கான இளைஞர்களை தன்வசம் வைத்துள்ளார். ஆனால் அவரது தமிழக வெற்றி கழகத்தில் ஒரு சரியான கட்டமைப்போ, திட்...