தமிழகத்தில் இன்றைய இளைய தலைமுறை அரசியல் தலைவர்களில் யார் தகுதியானவர்?

 தமிழக அரசியல் களம் தற்போது இளைஞர்களை சுற்றி நடந்து வருகிறது.

 தமிழகத்திலும் முதல் முறை வாக்களிக்கும் இளைய தலைமுறை வாக்காளர்கள் அதிகம் உள்ள நிலையில் அவர்களின் மனம் கவர்ந்த தலைவர் யார் என்ற கோணத்தில் நாம் இளைஞர்களுடன் கலந்தாலோசித்த பொழுது அவர்களின் எதிர்பார்ப்பு இளம் தலைவர்கள் பற்றி தான் இருந்தது.



 ஒருவர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் ஆகவும் அடுத்தவர் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் திரு அண்ணாமலை அவர்களாகவும் திமுகவின் இளம் தலைமுறை தலைவராக இளைஞர்களின் தேர்வாக உள்ளது.

 இன்றைய தமிழக அரசியல் முழுவதும் இவர்கள் மூவரை சுற்றிய நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

 நாம் பொதிகை டைம்ஸ் இதழ் நிருபர்கள் இளைஞர்களுடன் கலந்து ஆலோசித்த பொழுது அவர்கள் கூறிய சில கருத்துக்கள் அடிப்படையில் யாருக்கு எப்படி வாய்ப்புகள் உள்ளது என்பதை பற்றி விவரத்தை பார்க்கலாம்.

 நடிகர் விஜய் அவர்களைப் பொறுத்தவரை தமிழக வெற்றி கழகம் அரசியல் கட்சியின் மூலம் தமிழக முழுவதும் பல லட்சக்கணக்கான இளைஞர்களை தன்வசம் வைத்துள்ளார். ஆனால் அவரது தமிழக வெற்றி கழகத்தில் ஒரு சரியான கட்டமைப்போ, திட்டமிடலோ இல்லாததால் சிறிது பின்னடைவை சந்தித்துள்ளதோடு கரூர் சம்பவத்தின் மூலம் அவருக்கு ஒரு கரும்புள்ளியும் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விஜய் அவர்களுக்கு அரசியல் அனுபவம் இல்லை. அவர் சினிமாவிலேயே தந்தையின் மூலம் படிப்படியாக வளர்த்து விடப்பட்ட ஒரு பாலூட்டி குழந்தையாகவே பெரும்பாலானவர்களால் பார்க்கப்படுகிறார். அவர் எந்த நிலையிலும் பெரிதாக பிரச்சனைகளை சந்தித்ததும் இல்லை அதற்கான தீர்வுகளை தேடியதும் இல்லை இதனால் அவரால் அரசியலில் வந்தாலும் திமுக போன்ற எதிர்க்கட்சியினால் இதனால் கொடுக்கப்படும் அரசியல் உள்நோக்க எதிர்ப்புகளை சமாளிப்பது மிகச் சிரமமாக இருக்கும். அதனை சமாளிக்கும் அளவிற்கு விஜய்க்கு தைரியமும் இருக்க வாய்ப்புகள் இல்லை. கேப்டன் விஜயகாந்த் போன்ற ஒரு பெரிய மாமனிதர்யே தனது சூழ்ச்சி வளையல்  வீழ்த்திய கட்சி திமுக. விஜய் பொறுத்த வரையில் அவரால் தொடர் தோல்விகளை இருப்பதாக தெரியவில்லை என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.



 திரு உதயநிதி அவர்களை பொறுத்தவரையில் விஜய் போன்று அவரும் தன் தந்தையால் வளர்த்து விடப்பட்ட ஒரு அரசியல் தலைவராகவே இருக்கிறார். அவருக்கு போதிய அளவிற்கான தலைமைப் பண்போ தொலைநோக்கு பார்வையோ இல்லை. அவர் தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் இன்பமயமாகவும் பொழுதை போக்கிக் கொண்டு வாழவே விரும்புகிறார் என்று அவரது கட்சியைச் சார்ந்த சிலரை தெரிவிக்கின்றனர். அவருடைய நடவடிக்கைகளை பார்க்கும்பொழுது பலருக்கும் நன்கு புலப்படுகிறது. மேலும் அவர் பெண்கள் விஷயத்தில் பொதுவெளிகளிலேயே தான் ஒரு அரசியல் தலைவர் என்பதையும் மக்கள் எடுக்க பொறுப்பான கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்பதையும் உணராமல் முகம் சுளிக்கக் கூடிய வகைகளில் கருத்துக்களை பகிர்வதோடு தன் தரத்தை தானே தாழ்த்திக் கொள்கிறார். அவரால் இதுபோன்றது பாரம்பரியமிக்க இயக்கத்தை கட்டுக்கோப்புடன்  வழிநடத்திச் செல்ல முடியுமா என்பது சந்தேகமே.

 முன்னாள் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு அண்ணாமலை அவர்களை பொறுத்தவரையில் நன்கு படித்த பண்புள்ள நபராக பலராலும் பாராட்டப்படுகிறார். நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் உட்பட பலராலும் பாராட்டப்பட்டவர். அதுமட்டுமல்லாமல் எப்பேர்பட்ட  திறமையான அரசியல்வாதிகளையும் தங்களது பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையின் மூலமாக அடக்கிவிடும் திமுக போன்ற ஒரு பேரியக்கத்தையே தன் அரசியல் அறிவால் எளிதாக சமாளித்தவர். மேலும் எல்லா பிரச்சனைகளிலும் உரிய தரவுகளோடு தெளிவாக பேசக் கூடியவர். இதுவரை எந்த ஒரு பெரிய எதிர்மறை வைக்க முடியாத அளவிற்கு தன் இருப்பை பலப்படுத்திக் கொண்டவர். சாமானிய மக்களோடு மக்களாக பழகுவதால் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. தனது எளிமையான அரசியலாலும் சாதாரண தொண்டன் போன்ற ஒரு அணுகுமுறையாலும் பெருமளவு மக்களைக் கவர்ந்திருந்தாலும் தற்போது அவருக்கு தன் கட்சியிலும் பிற கட்சிகளிலும் சுற்றுச்சூழல் எல்லா இடங்களிலும் எதிரிகள் அதிகம் இருக்கின்றனர். 



 திரு அண்ணாமலை அவர்களுக்கு தனி செல்வாக்கு இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தமிழகத்தில் பலரும் பிஜேபியை பின் தொடர காரணமாக இருப்பவர்களின் அண்ணாமலையும் முக்கியமான ஒருவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் அண்ணாமலை தலைமையில் ஆட்சி அமைவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. காரணம் பிஜேபியில் இருக்கும் உட்கட்சி பனிப்போர் அரசியல் ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.

 திரு அண்ணாமலை அவர்கள் தனி கட்சி தொடங்கி அரசியல் செய்யும் சூழ்நிலை வந்தாலுமே ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஒரு கட்சியை இன்றைய சூழ்நிலையில் பல அரசியல் நெருக்கடிகளை கொடுக்கும் எதிர்க்கட்சிகளுக்கு மத்தியில் நடத்துவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதுமட்டுமல்லாமல் அதற்கு தேவையான பொருளாதாரமும் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். இதற்கெல்லாம் மேலாக திரு அண்ணாமலை அவர்களின் தனி கட்சி ஆரம்பித்தால் ஆட்சியைப் பிடிக்க குறைந்தபட்சம் 10 ஆண்டுகாலம் அரசியல் செய்ய வேண்டியது இருக்கும். அதற்குள் அவர் அனுபவிக்கும் இன்னல்கள் ஏராளமாக இருக்கும். அவற்றையெல்லாம் தாக்கு பிடித்து அவரால் பொருட் செலவு செய்து கட்சியை நடத்த முடியுமா என்பதும் சந்தேகமே. ஆனால் அண்ணாமலை போன்ற ஒரு அரசியல்வாதியை இழந்தால் அது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய நஷ்டம். எப்படி நமது முந்தைய தலைமுறை காமராஜரை தொலைத்து விட்டு இன்றுவரை தேடிக் கொண்டிருக்கிறார்களோ அது போன்ற ஒரு தவறை மீண்டும் தமிழகம் செய்யக்கூடாது என்பது நமது விருப்பமாக உள்ளது.

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?