Posts

Showing posts with the label #bjp

திராவிட மாடல் vs தேசிய மாடல்

Image
 நமது தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் திமுக தலைமையிலான அரசு தங்களை திராவிடம் மாடல் அரசு என சொல்லிக் கொள்கிறது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தேசிய மாடல் என அழைக்கப்படுகிறது.  இந்த இரு அரசுகளும் தங்கள் ஆட்சி காலத்தில் செய்த நன்மைகள் திட்டங்கள் பற்றி பார்ப்போம்.  திராவிட மாடல்   ஆட்சிக்கு வந்தவுடன் முதல் அறிவிப்பாக மகளிர்க்கு இலவச பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டது. இதில் மகளிர் இலவசமாக பயணம் செய்ய வசதியாக இருந்தாலும் போக்குவரத்து துறை கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதால் தேவையான அளவிற்கு பேருந்துகளை இயக்க முடிவதில்லை என்ற பிரச்சனையும் வரும் பேருந்துகள் சரியான நிறுத்தங்களில் நிறுத்துவதில்லை என்ற பிரச்சனையும் பேருந்துகளில் தரம் மிகக் குறைவாக உள்ளதாகவும் பயணிகள் பயணம் செய்யவே பயப்படும் நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் என்ற திட்டம் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் பல மாதங்கள் கடந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் அதை வைத்து அரசியல் அழுத்தம் கொடுத்ததால் அனைவருக்கும் ஆயிரம் உதவித்தொகை என்பது மாறி தகுதி உள்ளவ...

சிறுபான்மை வாக்கு வங்கி படுத்தும்பாடு

Image
  நமது இந்திய திருநாடு மதசார்பற்ற நாடு என்று அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா முழுவதிலும் அரசியல் கட்சிகள் மட்டும் மதசார்பற்று இயங்குவதில்லை.  அதேபோல் சில மதங்கள் சார்ந்தவர்களும் அந்த மத அமைப்புகளும் அரசியல் நிலைப்பாட்டை கொண்டுள்ளன. அந்த குறிப்பிட்ட மதங்களைப் பொறுத்தவரை ஒரு தனி மனிதன் தான் விருப்பப்பட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்க அனுமதிப்பதில்லை. மாறாக அவர்களின் மதக் கூட்டமைப்பு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறதோ அவர்களுக்கு வாக்கைச் செலுத்துகின்றனர்.   இதனால் தேர்தல் நேரங்களில் அரசியல் கா நேரங்களில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு அவர்களை திருப்திப்படுத்தும் பணியில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் கேட்கும் வாக்குறுதிகளை செய்து தருவதாக உறுதி அளிப்பதோடு ஆட்சிக்கு வந்த பின்னும் அவர்களுக்கு வாலாட்டும் நாய்கள் போல சில அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன.  சிறுபான்மையினரின் வாக்குகளை பெற வேண்டும் என்றால் அவர்கள் எதிர்பார்க்கிறார்களோ இல்லையோ மற்ற மதங்களை குறை சொல்லி அவர்களை விரோத மனப்பான்மையோடு அணுகினால் மட்டுமே சிறுபான...

அகங்கார யுத்தத்தின் முடிவு எட்டு உயிர்கள்

Image
  தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியில் நடைபெற்ற இரு தனியார் பேருந்துகளின் விபத்து காணொளி தற்போது வெளியாகி உள்ளது.  அந்தக் காணொளியை பார்க்கும் பொழுது அரசு விரைவு போக்குவரத்து கழகத்தைச் சார்ந்த பேருந்து ஒன்று முன்னாள் சென்று கொண்டிருக்கிறது. அதனை தனியார் பேருந்து ஓட்டுநர் முந்த முயற்சிக்கிறார். பலமுறை முயன்றும் அந்த விரைவு போக்குவரத்து கழக பேருந்தின் ஓட்டுநர் வழி கொடுக்காத நிலையில் எப்படியாவது முந்தி விட வேண்டும் என்று தனியார் பேருந்து ஓட்டுனர் அகங்காரமும் (Ego) அவரை முந்தவிடக் கூடாது என்று விரைவு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டினரின் அகங்காரமும்(ego) இன்று எட்டு உயிர்களை பலி வாங்கியுள்ளது.  நமது இந்தியர்களுக்கு பொதுவாகவே சகிப்புத்தன்மை மிக குறைவாக உள்ளது. சாலைகளிலும் பொது இடங்களிலும் முன் பின் தெரியாத நபர்களிடம் போட்டி பொறாமை மனப்பான்மையுடன் அகங்காரத்துடனும் பலரும் நடந்து கொண்டிருக்கின்றனர்.இது மாற வேண்டும்.  நாம் விட்டுக் கொடுத்து செல்வதால் எந்த விதத்திலும் கெட்டுப் போகப் போவதில்லை. மேலும் மனிதத் தன்மையுடனும் சகிப்புத்தன்மையுடன் நடப்பதால் நமது மதிப்பு உயரும். தற்போதைய ...

தமிழகமெங்கும் சாலைகளின் அவலநிலை

Image
  தமிழகத்தில் தற்போது எல்லா இடங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மக்கள் தங்கள் அன்றாட வேலைகள் மற்றும் பள்ளி செல்லுதல் போன்ற பல காரணங்களுக்காக தினசரி வெளியே சென்று வரும் நிலையில் நமது தமிழ்நாட்டின் பெரும்பாலான சாலைகள் வயல்வெளிகளைப் போல் சேரும் சகதியும் ஆக மழை நீரோடு சேர்ந்து கழிவு நீரும்  சாலைகளில் தேங்கியுள்ளது.  இதில் பயணிப்பதால் பலருக்கும் பலவிதமான நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் சாலைகளில் உள்ள பள்ளமேடுகள் நீர் நிரம்பியுள்ளதால் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் பலரும் விபத்துக்குள்ளாகும் நிகழ்வுகளும் அன்றாடம் நடைபெற்று வருகிறது.  திராவிட மாடல் ஆட்சி என்று பெருமை பேசும் இந்த ஆட்சியாளர்கள் கடந்த நான்கரை வருடங்களாக தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்கள் எதிலும் சாலைகளை சிறப்பாக சீரமைத்ததாக ஒரு தமிழக சாமான் என் கூட தெரிவிக்கவில்லை. சில சாலைகள் போடப்பட்டாலும் கூட அவை தரத்தில் மிக மோசமாகவும் ஒரு மலைக்கு கூட தாங்காத அளவிற்கு தகுதியற்றதாக உள்ளது.  இதற்கு நாம் ஆட்சியாளர்களை குறை சொல்லி ஒன்றும் பிரயோஜனம் இல்லை. இலவசத்திற்காகவும் காசுக்...

உங்கள் பகுதியின் வேட்பாளர் எப்படி இருக்க வேண்டும்?

Image
 தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உங்கள் பகுதியில் நல்ல வேட்பாளரை எப்படி தேர்வு செய்யலாம் என்பது குறித்து சில கருத்துக்கள் கொடுத்துள்ளோம். இதை பயன்படுத்தி சிறந்த வேட்பாளரை தேர்வு செய்து வாக்களித்து வெற்றி பெற வைத்து உங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க வழி செய்யுங்கள்.  முதலில் உங்கள் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை தயார் செய்து கொள்ளுங்கள். அதில் ஏற்கனவே பலமுறை போட்டியிட்ட வேட்பாளர்களின் விவரங்களை வைத்து ஆர் போட்டியிட்ட ஒவ்வொரு முறையும் என்னென்ன வாக்குறுதிகள் எல்லாம் அளித்துள்ளார். அதில் எத்தனை சதவீதத்தை நிறைவேற்றி உள்ளார். அவர் சார்ந்த அரசியல் கட்சி என்னென்ன வாக்குறுதிகளை அளித்தது அதில் எவற்றையெல்லாம் நிறைவேற்றி உள்ளது என்பது குறித்து ஒரு பட்டியல் தயார் செய்யுங்கள். இதை வைத்து அவர்கள் எத்தனை சதவீதம் நம்பகத்திற்குரியவர்கள் என்பதை முடிவு செய்யுங்கள்.  உங்கள் பகுதியில் அரசியல் கட்சிகளையும் தாண்டி உங்கள் தனிப்பட்ட அரசியல் சார்பையும் விட்டு தனிப்பட்ட முறையில் எந்த வேட்பாளர் சிறந்தவர் என்பதை கண்டறிய உங்கள் பகுதியி...

தமிழ்நாட்டில் தவறான வியூகங்களால் தடுமாறுகிறதா பாஜக?

Image
தமிழ்நாட்டில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் பிரச்சார வியூகங்கள் குறித்து ஆலோசித்து செயல்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி அதிமுகவுடன் கூட்டணி அறிவித்து செயல்பட்டு வரும் நிலையில் கரூரில் நடந்த தமிழக வெற்றி கழக சம்பவத்திற்கு பின் நடிகர் விஜய் அவர்களுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியினர் பேசி எப்படியாவது அவரை கூட்டணியில் கொண்டு வந்து சேர்த்து விட வேண்டும் என்று முயற்சித்தனர். ஆனால் அது இதுவரை கை கூடவில்லை. அது பாரதிய ஜனதா கட்சியில் உள்ள ஒரு பிரிவினருக்கு உடன்பாடு இல்லை என்ற கருத்தும் நிலவி வந்தது.  மேலும் திரு அண்ணாமலை அவர்களை தலைமைப் பதவியிலிருந்து மாற்றிய பின்பு அவருக்கு சரியான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று அவருடைய ஆதரவாளர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.   தற்போது பாரதி ஜனதா கட்சியின் தமிழக தலைவராக செயல்பட்டு வரும் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் அனைத்து கட்சிகளையும் அரவணைத்து செல்வதோடு கட்சியினரையும் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறார் என்ற போதில...

தமிழக வாக்காளர்களின் கனிவான கவனத்திற்கு

Image
  தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழக வாக்காளர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் திறமையான நேர்மையான சிறந்த வேட்பாளரை தேர்வு செய்ய என்ன செய்ய கீழே உள்ள கேள்விகளை அவர்களிடம் கேட்டு அதற்கு அவர்கள் அளிக்கும் பதில்கள் உங்களுக்கு திருப்தி அளிப்பதாக இருந்தால் நீங்கள் அவர்களுக்கு வாக்களிக்கலாம். அப்படி நீங்கள் இதை பின்பற்றும் பட்சத்தில் உங்கள் தொகுதி வளர்ச்சி அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பானதாக இருக்க வாய்ப்புகள் உண்டு.  முதலில் தற்போது வெற்றி பெற்று பதவியில் உள்ள  வேட்பாளர் தங்களிடம் கலந்து தேர்தலின் போது பிரச்சாரத்திற்கு வரும்போது என்னென்ன வசதிகள் செய்து கொடுப்பேன் என்றும் அடிப்படை வசதிகளில் எதை செய்வேன் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார் என்பதை பழைய தேர்தல் அறிக்கையை எடுத்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் வெற்றி பெற்ற  வேட்பாளர் சார்ந்துள்ள கட்சி வெற்றி பெற்ற கட்சியா? அவ்வாறு அவர் வெற்றி பெற்ற கட்சியிலோ அல்லது கூட்டணியோ இருந்திருந்தால் அந்தக் கூட்டணி கொடுத்துள்ள வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டனரா? என்று முதலில் பார...

தில்லு முல்லு திமுகவின் தில்லாலங்கடி வேலை

Image
  தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நாடு முழுவதும் SIR சிறப்பு வாக்காளர் திருத்த திட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சென்ற தேர்தலில் வாக்களித்த பல வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.  தமிழ்நாட்டின் பல தொகுதிகளிலும் திமுகவுக்கு எதிராக வாக்களிக்கும் வாக்காளர்களின் அடையாளம் காணப்பட்டு அவர்களின் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக பெரும்பாலான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.  குறிப்பாக அதிமுக பிஜேபி போன்ற கட்சிகளுக்கு வாக்களிக்க விரும்பும் சாதாரண வாக்காளர்களின் பெயர்களை வெகு சாமர்த்தியமாக நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.  சமீபத்திய தேர்தல்களில்  எந்த அரசியல் கட்சி வெற்றி பெற்றாலும் வெற்றி சதவீதம் மிகவும் குறைவாக உள்ள நிலையில் இதுபோன்று வாக்காளர்கள் நீக்கப்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பாதிப்பை உண்டாக்க அதிக வாய்ப்பு உள்ளது.  எனவே எதிர்க்கட்சியில் உள்ள பூத் கமிட்டி முகவர்கள் தங்கள் ஏரியாவில் உள்ள வாக்குச்சாவடி பூத் லிஸ்ட்டை வைத்து வீடு வீடாக சென்று ...

திமுக கையில் எடுக்கும் ஆயுதங்கள் அனைத்தும் மண்ணைக் கவ்வுகிறதா?

Image
 தமிழகத்தில் திமுகவிற்கு எப்போதெல்லாம் பின்னடைவு பிரச்சனைகள் எதிர்ப்புகள் போன்றவை வருகிறதோ அப்போதெல்லாம் திமுக அதனை மடை மாற்ற பல யுக்திகளை கையாளும்.  அவற்றில் முக்கியமானது இந்தி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு, நீட் விலக்கு மற்றும் மத்திய அரசின் சட்டங்களுக்கு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு போன்ற ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு மக்களுக்கு தங்கள் மீது உள்ள கோபத்தையும் அதிருப்தியையும் சரி செய்ய இவற்றை ஆயுதமாக பயன்படுத்தும்.  அப்படி அவர்கள் சமீப காலங்களில் முயற்சி செய்த இந்தி எதிர்ப்பு, பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றில் இவர்கள் செய்த அரசியல் எடுபடவில்லை.  தற்போது சென்னை சாலைகளில் நிலை, மழை வெள்ளம், விவசாய நெல் கொள்முதல், மற்றும் பல முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாதது போன்ற இவர்களின் தவறுகளை மறைக்க இவர்கள் எடுத்திருக்கும் ஆயுதம் SIR எனப்படும் வாக்காளர் சரி பார்க்கும் பணியை வைத்து ஒரு போராட்டத்தை உருவாக்க நினைக்கிறது திமுக அரசு.  தமிழ்நாட்டில் பல தொகுதிகளில் போலி வாக்காளர்கள் அதிகம் உள்ளதாக 2016ல் திமுக அரசே புகார் தெரிவித்து இருக்...

வாக்குத் திருட்டு. எதிர்க்கட்சிகள் சொல்வது உண்மையா?

Image
  எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து தற்போது ஆளும் கட்சிக்கு எதிராக எடுத்திருக்கும் முக்கிய ஆயுதம் ஓட்டு திருட்டு.  கடந்த 14 வருடங்களுக்கு மேலாக மதில் ஆட்சி செய்து வரும் பிஜேபி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எதுவும் குற்றம் சொல்ல வாய்ப்பில்லாத போது தற்போது அவர்கள் தேடி கையில் எடுத்திருக்கும் ஆயுதம் வாக்குத் திருட்டு.  இந்தியாவைப் பொறுத்தவரை எப்போதுமே வாக்காளர் பட்டியலில் சில குளறுபடிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதற்கு மாற்றுக் கருத்து இல்லை. தற்போது தொழில்நுட்பங்கள் பலவகையிலும் வளர்ந்து விட்ட பின்பும் நமது வாக்காளர் பட்டியில் சில குளறுபடிகள் இருக்கத்தான் செய்கிறது.அதை தற்போது சரி செய்ய வேண்டிய சூழ்நிலையும் உள்ளது.   அதற்கு தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும் பொழுது அந்தக் குளறுபடிகளால் ஆதாயம் அடைந்த கட்சிகள் அதை எதிர்த்து குரல் கொடுக்கின்றன. இவர்கள் சொல்வது போல் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருந்தால் அவற்றை ஆதாரத்தோடு பொதுவெளியிலும், தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் முறையிடலாம்.  வாக்காளர் பட்டியலில் ஒரே முகவரியில் பல வாக்காளர்க...

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

Image
  அரசியலைப் பொருத்தவரை எல்லா அரசியல்வாதிகளும் பெரும்பாலும் சுயநலவாதிகளாகவே இருப்பார்.  பல அரசியல்வாதிகளும் தாங்கள் இருந்த கட்சியிலிருந்து வேறு ஒரு கட்சிகளுக்கு செல்வது வாடிக்கையான ஒன்றுதான்.  அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் அவர்களை பொருத்தவரையில் அவர் எம்ஜிஆர் காலம் தொட்டு எம்ஜிஆரின் தீவிர விசுவாசியாகவும் அதன்பின் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாகவும் எல்லோராலும் அறியப்பட்டவர். அவரின் விசுவாசத்தை பார்த்து தான் ஜெயலலிதாவுக்கு இக்கட்டான சூழ்நிலையில் அவரின் முதல்வராக்கி அரசையும் கட்சியையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார். அவரும் அதே விசுவாசத்தோடு கண்ணியத்தோடும் மீண்டும் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார்.  இதனால் அதிமுகவை பொறுத்தவரை ஓ பன்னீர்செல்வம் சிறந்த விசுவாசி  என்பது அனைவருக்கும் தெரியும்.  ஆனால் ஜெயலலிதா மறைவிற்குப் பின் சசிகலா கட்சியை கைப்பற்ற நினைத்தபோது அதற்கு எதிராக போர் போடி தூக்கிட்டு தர்மயுத்தம் செய்ததிலிருந்து ஆரம்பித்தது அவரது வீழ்ச்சி.  ஓபிஎஸ்ஐ பொறுத்த வரை அவர் ஒரு சிறந்த நிர்வாகி இல்லை என்பது அதிமுக கட்சியின் தொண்டர்களை கணித்தது. அதன...

திமுகவை கர்மா பின் தொடர்கிறதா?

Image
 திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது செய்தி ஊடகங்கள் அனைத்தையும் கையில் வைத்துக் கொண்டு பிண அரசியல் பண அரசியல் என எல்லா வகையிலும் ஆளுங்கட்சியை குறை சொல்லி அரசியல் செய்து கொண்டிருந்தனர்.  அப்படி எல்லா விதத்திலும் அரசியல் செய்து அதிமுகவை வில்லன் போல் சித்தரித்து நாங்கள் ஆட்சிக்கு வந்த நாட்டில் பாலாறும் தேன்ஆறும் ஓடும் என்று மக்களை மூளைச்சலவை செய்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டனர்.  தமிழில் ஒரு பழமொழி உண்டு முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல தற்போது திமுக எதையெல்லாம் வைத்த அரசியல் செய்கிறதோ அதே போல் பிரச்சனைகள் அவர்கள் ஆட்சியிலும் நடக்கிறது. இதைத்தான் கர்மா பின் தொடர்தல் என்று கூறுவர்.  எடுத்துக்காட்டாக  சாத்தான்குளம் ஜெயராஜ் பெனிக்ஸ் லாக்கப் மரணத்தை வைத்து பெருமளவில் பினார அரசியல் செய்தது திமுக.  அதேபோல் திமுக ஆட்சியில் அஜித்குமார் கொலை நடந்தது. ஆனால் இப்போதும் ஊடகங்களை வைத்து அதை திசை திருப்ப பல வகைகள் என்னும் திமுக அரசின் முயற்சி செய்து வருகிறது.  அடுத்ததாக   அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து கனிமொழி உள்ளிட்ட...

தமிழகத்தில் இன்றைய இளைய தலைமுறை அரசியல் தலைவர்களில் யார் தகுதியானவர்?

Image
 தமிழக அரசியல் களம் தற்போது இளைஞர்களை சுற்றி நடந்து வருகிறது.  தமிழகத்திலும் முதல் முறை வாக்களிக்கும் இளைய தலைமுறை வாக்காளர்கள் அதிகம் உள்ள நிலையில் அவர்களின் மனம் கவர்ந்த தலைவர் யார் என்ற கோணத்தில் நாம் இளைஞர்களுடன் கலந்தாலோசித்த பொழுது அவர்களின் எதிர்பார்ப்பு இளம் தலைவர்கள் பற்றி தான் இருந்தது.  ஒருவர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் ஆகவும் அடுத்தவர் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் திரு அண்ணாமலை அவர்களாகவும் திமுகவின் இளம் தலைமுறை தலைவராக இளைஞர்களின் தேர்வாக உள்ளது.  இன்றைய தமிழக அரசியல் முழுவதும் இவர்கள் மூவரை சுற்றிய நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.  நாம் பொதிகை டைம்ஸ் இதழ் நிருபர்கள் இளைஞர்களுடன் கலந்து ஆலோசித்த பொழுது அவர்கள் கூறிய சில கருத்துக்கள் அடிப்படையில் யாருக்கு எப்படி வாய்ப்புகள் உள்ளது என்பதை பற்றி விவரத்தை பார்க்கலாம்.  நடிகர் விஜய் அவர்களைப் பொறுத்தவரை தமிழக வெற்றி கழகம் அரசியல் கட்சியின் மூலம் தமிழக முழுவதும் பல லட்சக்கணக்கான இளைஞர்களை தன்வசம் வைத்துள்ளார். ஆனால் அவரது தமிழக வெற்றி கழகத்தில் ஒரு சரியான கட்டமைப்போ, திட்...

தேசிய ஜனநாயக கூட்டணியில் திரு அண்ணாமலை அவர்களின் நிலை என்ன?

Image
  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய கூட்டணிகளை வலு சேர்க்கும் விதத்திலும் மக்களிடம் பிரச்சாரங்களிலும் தீவிரமாக ஈடுபட தொடங்கி விட்டனர்.  இந்நிலையில் பெரும்பாலான கட்சிகளில் ஒரு கட்சி அரசியலும் சூடு பிடித்துள்ளது.  தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளாக உள்ள அதிமுக பாஜக இரு கட்சிகளிலும்  உட்கட்சி பிரச்சனைகளும் அதிகார போட்டியும் மேலோங்கி உள்ளது.  அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு வைத்த முதல் நிபந்தனையாக கூறப்படுவது திரு அண்ணாமலை அவர்களை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பது.  ஏனெனில் அண்ணாமலை தமிழக பாஜகவை பெருமளவில் வளர்ச்சி இருக்கிறார் அது மட்டும் அல்லாமல் தற்போது அரசியலில் பாஜகவின் முகமாக அனைவராலும் அறியப்படுபவர் திரு அண்ணாமலை அவர்கள். இதுபோன்று மாற்றுக் கட்சியில் ஒரு தலைவர் உருவானால் அது பின்னாலே நமக்கு பிரச்சனையாக முடியும் என்று யோசித்ததாலே இது போன்ற ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  அதிமுக போன்ற வேறு கட்சியில் இருப்பவர்கள் அண்ணாமலை பார்த்து பயப்படுவது நியாயம். ஆனால் பாஜகவில் இரு...

திமுக அரசில் ஏன் இவ்வளவு குளறுபடிகள்?

Image
 நம் தமிழ்நாடு சுதந்திரம் வாங்கியதும் விடுதலை பல நல்ல தலைவர்களால் ஆட்சி செய்யப்பட்டு பொருளாதாரத்திலும் கல்வி அறிவிலும் சிறந்து விளங்கும் மாநிலமாக உள்ளது.  குறிப்பாக காமராஜர் காலத்தில் நீர் மேலாண்மை செய்ய பல தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. பிள்ளைகள் கல்வி கற்க மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதுமட்டுமல்லாது பல புதிய பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டது. கல்லூரிகள் திறக்கப்பட்டது. படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற அரசின் சலுகையுடன்  பல தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டது.   அதன் பின்பு வந்த பல ஆட்சியாளர்களும் தமிழகத்தை தொடர்ந்து வளர்ந்து வரும் மாநிலமாகவே சிறந்த நிர்வாகத்தை செய்து கொண்டிருந்தனர்.  ஆனால் தற்போது சில நாட்களாக திமுக தலைமையின் கீழ் நடைபெற்று வரும் பல நிர்வாக குறைபாடுகள் நடைபெற்று வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.  முதலாவதாக திமுக எதிர்க்கட்சியாக செயல்பட்ட போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையில் அவர்கள் மக்களை தூண்டிவிட்டு கையாண்ட விதத்தால் அந்த நிறுவனம் மூடப்பட்டதோடு அங்கு பல அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்றன. ஆனால் தற்பொழுது அப்பகு...

சிங்கப்பூரின் லீ க்வான் யூ போன்று இந்தியாவிற்கு மோடியா?

Image
 சிங்கப்பூரில் மலேசியா தனி நாடாக அறிவிக்கும் போது அந்த நாட்டில் வறுமையை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஒரு சிறிய நகரத்து அளவே உள்ள சிங்கப்பூர் வறுமையில் இருந்து மீண்டு இன்று உலக நாடுகள் அண்ணாந்து பார்க்கும் வளர்ந்துள்ளது.  இப்படி அந்த நாடு மிகப்பெரும் வளர்ச்சி அடைவதற்கு முக்கிய காரணமாக இருந்த அரசியல் தலைவர் லீ க்வான் யூ ஆவார்.  சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த போது அந்நாட்டின் பிரதமராக இருந்த லீ க்வான் யூ அந்நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஒரே எண்ணத்தில் வேலை செய்தார். நாட்டில் ஊழல்கள் இல்லாமல் அறவே ஒழித்தார்.  எந்த ஒரு வளமும் இல்லாத சிங்கப்பூர் நாட்டில் தொழில்துறை வளர்ச்சிக்காக அந்நிய நாட்டு முதலீடுகளை ஈர்த்தார்.  சிங்கப்பூர் நாடு 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரின் தலைமையில் கீழ் சிறப்பாக முன்னேறியது. அவருடைய சிந்தனை செயல் அனைத்தும் நாட்டை முன்னேற்றுவதை பற்றிய இருந்தது.  இதனால் அவர் எதிர்த்து செயல்பட்டு வந்த அனைத்துக் கட்சிகளும் ஒன்றரை சதவீதத்திற்கும் கீழான மக்கள் ஆதரவையே பெற முடிந்தது.  இந்தியாவில் தற்போது நரேந்திர மோடி அவர்களும் இது போன்...

தமிழகத்தில் தனித்தன்மையை இழக்கிறதா? பாஜக

Image
 தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் அரசியல் நிகழ்வுகளை வேகமாக நகர்த்தி வருகின்றன.  இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூரில் தமிழக வெற்றி கழகம் நடத்திய கூட்டத்தில் நடைபெற்ற தெரியாத சம்பவத்தை அடுத்து அனைத்து அரசியல் கட்சிகளிலும் அரசியலும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.  தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் கரூர் சம்பவத்தை வைத்து எப்படி எல்லாம் அரசியல் செய்ய வேண்டும் என்று கட்டம் கட்டி வருகின்றனர்.  இதில் தமிழக பாஜக விஜய்க்கு ஆதரவாக களமாடி வருகிறது. இச்சம்பவத்திற்கு பொறுப்பாக வேண்டியவர்களில் விஜய்யும் ஒரு முக்கிய பொறுப்பாளியாவார். அரசு எந்த அளவுக்கு இந்த சம்பவத்திற்கு பொறுப்போ அதே அளவிற்கு விஜய்க்கும் பொறுப்புண்டு என்பது மக்களின் கருத்தாக உள்ளது.  ஆனால் பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை எப்படியாவது விஜயை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அவருக்கு ஆதரவாக செயல்பட்டு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் சாமானிய மக்களுக்கும் சில பாஜக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கு...

தேசிய கூட்டணி தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் இணைந்தால் பலன் கிடைக்குமா?

Image
 பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தற்போது தமிழகம் இருக்கும் போது மொத்த அரசியல் கட்சிகளின் கவனமும் தமிழக வெற்றி கழகம் என்ன செய்யப் போகிறது என்று காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக பாஜக போன்ற கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு விஜய் ஆதரித்து எப்படியாவது அவரை நமது கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறது. இது எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெரும் என்று பார்த்தால் விஜய் எப்போதும் பாஜகவுக்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்து வந்ததால் இந்தக் கூட்டணி மீது மக்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கும் என்பதை பற்றி ஒரு கேள்வி எழுகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக வெற்றிக் கழகத்தின் மீது தற்போது ஒரு பெரிய அதிருப்தி நிலவுகிறது. கரூர் சம்பவத்தை முன்வைத்து அரசியலில் அவரை ஓரங்கட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தில் சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிரான பரப்புரைகள் முறுக்கி விடப்பட்டுள்ளன. இது போன்ற செயல்களில் ஈடுபடுவது யார் என்பது மக்களுக்கே நன்றாக தெரியும். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இணைந்தாலும் எந்தளவுக்கு தமிழக வெற்...

தமிழ்நாட்டின் மக்களை திசை திருப்ப பயன்படுத்தப் படுகிறதா? மாமன்னன்

Image
 தமிழ்நாட்டின் மக்களை திசை திருப்ப பயன்படுத்தப் படுகிறதா? மாமன்னன் . தற்போது தமிழ்நாட்டில் நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஆளுங்கட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தியும், வெறுப்பும் அதிகரித்துள்ளதாக பெரும்பாலானவர்களால் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சூழ்நிலைகளில் காலம் காலமாக தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்தும் முக்கிய ஆயுதம் தான் சாதி சண்டை. அது போன்றதொரு சாதி சண்டையை உருவாக்க திட்டமிட்டு மாமன்னன் படத்தில் வரும் ரத்னவேல் கேரக்டரை மாஸ் வீடியோவாக உலா விடுவது என்று முடிவெடுத்து அதன் மூலமாக சாதி சண்டைகளை உருவாக்க முயற்சிப்பதாகவும் அதனால் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டுள்ள அவ பெயர்களை மக்கள் மறக்க ஏதுவாக இருக்கும் என்று திட்டமிட்டு இருக்கலாம் என்று சில அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். #மாமன்னன் #ரத்தினவேல் #அரசியல் #தமிழ்நாடு