வாக்குத் திருட்டு. எதிர்க்கட்சிகள் சொல்வது உண்மையா?

 


எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து தற்போது ஆளும் கட்சிக்கு எதிராக எடுத்திருக்கும் முக்கிய ஆயுதம் ஓட்டு திருட்டு.

 கடந்த 14 வருடங்களுக்கு மேலாக மதில் ஆட்சி செய்து வரும் பிஜேபி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எதுவும் குற்றம் சொல்ல வாய்ப்பில்லாத போது தற்போது அவர்கள் தேடி கையில் எடுத்திருக்கும் ஆயுதம் வாக்குத் திருட்டு.



 இந்தியாவைப் பொறுத்தவரை எப்போதுமே வாக்காளர் பட்டியலில் சில குளறுபடிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதற்கு மாற்றுக் கருத்து இல்லை. தற்போது தொழில்நுட்பங்கள் பலவகையிலும் வளர்ந்து விட்ட பின்பும் நமது வாக்காளர் பட்டியில் சில குளறுபடிகள் இருக்கத்தான் செய்கிறது.அதை தற்போது சரி செய்ய வேண்டிய சூழ்நிலையும் உள்ளது. 

 அதற்கு தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும் பொழுது அந்தக் குளறுபடிகளால் ஆதாயம் அடைந்த கட்சிகள் அதை எதிர்த்து குரல் கொடுக்கின்றன. இவர்கள் சொல்வது போல் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருந்தால் அவற்றை ஆதாரத்தோடு பொதுவெளியிலும், தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் முறையிடலாம்.

 வாக்காளர் பட்டியலில் ஒரே முகவரியில் பல வாக்காளர்கள் இருப்பதாகவோ அல்லது முறைகேடாக வெளிநாட்டவர்கள் வாக்குரிமை பெற்று இருந்தாலோ, ஒரே நபர் பல இடங்களில் வாக்குரிமை பெற்று இருந்தாலோ அவற்றை ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு சரி செய்யலாம்.



 அடுத்ததாக வாக்குரிமை பெற்றவர் இறந்து விட்டாலோ, வாக்குரிமை பெற்றவர் வேறு இடத்திற்கு மாற்றலாகி சென்று விட்டாலோ, புதிதாக வாக்காளருக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வாக்குரிமை வரவில்லை என்றாலோ அவற்றையும் ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்தில் முறையிடலாம். இதற்கு நடவடிக்கை தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை என்றால் நீங்கள் தேர்தல் ஆணையத்தையும் மத்திய அரசின் குறை கூறலாம்.

 ஆனால் தற்போதைய எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்கள் சுயநலத்திற்காகவும், அரசியல் ஆதயத்திற்காகவும் கேவலமான  வாக்குத் திருட்டு என்ற ஒரு மாயை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய பார்க்கின்றனர்.



 நமது தமிழக முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் கூட தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி பேசும்போது வாக்குத்திருட்டை பற்றி குறிப்பிட்டு இருந்தார். திரு ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு செய்த சாதனைகள் எதையும் சொல்லி வரும் சட்டமன்ற தேர்தலில் ஓட்டு கேட்க முடியாது என்பதால் அவர்கள் எடுத்த முக்கிய ஆயுதம் இந்த வாக்கு திருட்டு ஆகும்.

 ஆனால் இதற்கு மக்களிடத்தில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதே உண்மை.

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?