Posts

Showing posts with the label #சினிமா

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

Image
    நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க மெகா ஹிட் வெற்றி படங்களில் ஒன்று படையப்பா.  தற்போது ரஜினி அவர்கள் தனது  பிறந்தநாள் அன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் படையப்பாவின் இரண்டாம் பாகம் தயாராக விவாதங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் அந்தப் படத்திற்கு நீலாம்பரி என்று பெயர் சூட்ட இருப்பதாகவும் இருப்பதாகவும் விரைவில் முறையான அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிவித்தார்.

திரை உலகம் கொண்டாட மறந்த நாயகன் மாதவன்

Image
  இந்திய திரை உலகில் மோதிரக் கையால் குட்டு வாங்கி பிரபல இயக்குனர் மணிரத்தினத்தின் அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் திரு மாதவன் அவர்கள்.  அதன் பின் அவர் மின்னலே ரன் போன்ற ரொமான்டிக் படங்களில் வெற்றிக்கொடி நாட்டில் வந்தார். இப்படி சாதாரண கமர்சியல் படங்களில் ஆரம்பித்த அவருடைய திரை பயணம் பின்னர் மெல்ல மாற ஆரம்பித்து இறுதிச்சுற்று, ராக்கெட்டரி மற்றும் துரந்தர் என இந்திய திரையரங்க மட்டுமல்லாமல் உலக திரைத்துறையை திரும்பிப் பார்க்கும் தரமான படங்கள் பக்கம் தன் கவனத்தை செலுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.   தற்போதைய படங்களை தேர்ந்தெடுக்க அவர் செலுத்தும் தனி கவனம் மற்றும் அவரது நடிப்பு போன்றவை அனைவராலும் போற்றப்பட்டு வருகிறது.  நமது தமிழ் சினிமா உலகில் பல குப்பை படங்களை கமர்சியல் படங்கள் என்ற பெயரில் கொடுத்த விஜய் போன்ற ஹீரோக்களை எல்லாம் கொண்டாடும் திரையுலகம் நல்ல தரமான உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட சிறந்த படங்களை உருவாக்கும் மாதவன் போன்றவர்களை கொண்டாடாமல் இருப்பது தமிழ் திரை உலகத்திற்கு தான் இழப்பை தவிர மாதவன் போன்றவர்களுக்கு அல்ல என்பதை உணர வேண்டும்...

துரந்தர் - திரை விமர்சனம்

Image
"DHURANDAR", பாகிஸ்தான் கராச்சியின் இரண்டு ரவுடி கும்பல் ,.  ISI  இந்தியாவில் செய்ய நினைக்கும் அத்துனை நாசவேலைக்கும் இந்த கும்பலை எப்படி பயன்படுத்தியது , நமது spy கள் இவர்களுள்    ஊடுருவி  ஒவ்வொரு information யையும் நமது அரசாங்கத்துக்கு தெரிவித்தும் , தடுக்க முடியாமல் போன பல தாக்குதல்கள் .. இது தான் கதை ...  இல்லை இது கதை  இல்லை நடந்த ஒவ்வொன்றையும் பற்றிய action replay  . முதல் காட்சியே கத்தார் விமானக் கடத்தல் . கடத்தல்காரர்களுடன்  நேரடி பேச்சு வார்த்தையில் 'அஜித் தோவல்' . அஜித் தோவலாக  மாதவன் . அப்படியே அச்சு அசலாக அஜித் தோவலே .. விமானத்தினுள் நுழையும் போதே தீவிரவாதிகள் ஒருவனைக் கொன்ற ரத்தக்கறை, paasanger களின் கிலி படர்ந்த முகம் .  மூன்று தீவிரவாதிகளையும் ரொக்க  பணத்தையும் அவர்களிடம் ஒப்படைக்க போகும் வலி என மாதவன் படம் முழுவதும் Rocks ...  பாகிஸ்தானின் கராச்சி ... ரவுடியிஸத்தின்   உச்சக்கட்ட காலகட்டம் . அந்த கேங்கில்  போய் சேர்வதற்கு இந்திய ராணுவத்தை சேர்ந்த ரன்வீர் சிங் ஒரு பலூச்சாக தன்னை அடையாளப்படு...

கார் ரேஸ் போட்டியில் அஜித் குமாரின் கார் பழுதானது

Image
 மலேசியாவில் நடைபெற்று வரும் ALM serious கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றார். அப்பங்கயத்தின் பொழுது நடிகர் அஜித்குமாரின் கார் பழுதானதால் பாதியிலேயே போட்டியை விட்டு விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இது தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் இதுபோன்ற நிகழ்வுகள் மனதை தளர செய்வதாகவும் எனினும் தொடர்ந்து போட்டிகள் அது எதிர்நோக்கி உள்ளதாகவும் கருத்து தெரிவித்தார்.

திரையரங்குகளில் இன்றைய பரிதாப சூழ்நிலை

Image
 மக்களின் பொழுதுபோக்கு சாதனங்களின் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது சினிமா. குறிப்பாக தமிழகத்தில் மக்கள் சினிமா உடன் ஒன்றி போய் உள்ளதால் தான் தங்களை ஆட்சி செய்யும் பொறுப்பை கூட நடிகர்களுக்கு அளித்தார்கள்.  வரலாற்றுத் திரைப்படம், விடுதலை போராட்டங்களை மையமாகக் கொண்ட திரைப்படங்கள், நகைச்சுவை திரைப்படங்கள், திரில்லர் படங்கள், குடும்ப படங்கள் மற்றும் பக்தி படங்கள் என பலதரப்பட்ட சினிமாக்களை வெற்றிகரமாக திரையிட்ட தமிழ் திரை உலகம் தற்போது மோசமான நிலையில் தள்ளாடி வருகிறது.  இந்திய திரைத்துறையிலே தற்போது வருகின்ற படங்களில் பெரிதாக மக்களை கவரும் வகையில் இல்லை என்ற கருத்து நிலவுகிறது.  இதனால் திரையரங்குகளில் முன்பு போன்று குடும்பங்களாகவும் நண்பர்கள் சேர்ந்து பெரிய குழுக்களாக திரைப்படங்களை பார்ப்பது குறைந்துவிட்டது. தற்போது வரும் ரத்த வெள்ளத்தில் அடிக்கடி வெட்டு குத்து துப்பாக்கிச் சண்டையுடன் உள்ள படங்களை பார்த்து வருகின்றனர். இதனால் திரையரங்குகளில் கூட்டம் குறைவாக உள்ளது.  அது மட்டுமல்லாது திரையரங்குகளை நவீனப்படுத்துகிறோம் என்ற போர்வையில் பல அதிநவீன வசதிகளும் குளிர்சாதன வசதி ...

ஓடும் குதிரையில் பயணிக்கிறாரா ரஜினிகாந்த்?

Image
  தமிழ் சினிமா உலகின் முடி சூடா மன்னனாக விளங்கும் திரு ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே மிகப்பெரும் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களை அழைத்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது வழக்கமாகக் கொண்டுள்ளார்.  தற்போது கமலஹாசன் இயக்கத்தில் திரு ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் ஒரு படம் உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்தன. அதை திரு சுந்தர் சி அவர்கள் இயக்குவதாகவும் தகவல்கள் பரவியது. அந்தப் படத்தின் கதை பற்றிய விவாதங்களும் நடந்து வந்ததாக கூறப்பட்டது.  ஆனால் தற்போது திரு சுந்தர் சி அவர்கள் அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல்கள் வருகிறது.  கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினிகாந்த் அவர்கள் பெரும் வெற்றி படங்களை கொடுத்த இளம் தலைமுறை இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வந்தார். காரணம் அவர்கள் இளம் தலைமுறை என்ன ஓட்டங்களை சரியாக புரிந்து வைத்து அதற்கேற்றார் போல் படங்களை உருவாக்குவார்கள் என்ற எண்ணத்தில் அப்படி செயல்பட்டதாக கூறப்படுகிறது.  ஆனாலும் தற்போது வரை அவர் நடித்த படங்களில் சமீபத்திய படங்கள் பலவும் பெரிய வெற்றியை பெற முடியவில்லை. தற்போதைய இளம் தலைமுறை இயக்குனர்களை விட சிறந்த...

அழிவு பாதையில் இருந்து மீண்டு எழுமா தமிழ் சினிமா?

Image
 மக்களின் பொழுது வாக்கு சாதனங்களின் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது சினிமா.  தமிழ் சினிமா என்பது பல வருட பாரம்பரியம் கொண்டதாக இருந்து வருகிறது. தியாகராஜ பாகவதர் தொடங்கி எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் என பலரும் மிகப்பெரிய நட்சத்திரங்களாக உலா வர தமிழ் சினிமா காரணமாக இருந்துள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த காலங்களில் பக்தி படங்கள் குடும்ப படங்கள் பொழுதுபோக்கு படங்கள் காமெடி படங்கள் சென்டிமென்ட் படங்கள் ஆக்ஷன் படங்கள் என்ன பல வகைப்பட்ட திரைப்படங்கள் வந்துள்ளன.   ஆனால் சமீப காலங்களில் தமிழ் சினிமாவில் கற்பனை வறட்சி என்பது தலை விரித்து ஆடுகிறது. சமீப காலங்களில் வந்துள்ள இயக்குனர்கள் அனைவரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தங்கள் திறமைகளை நம்புவதை விட தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் பிரம்மாண்டங்களை காண்பித்து வெற்றி பெற விரும்புகின்றனர். கதையோட்டத்தை பற்றியும் நல்ல திரைக்கதை பற்றியும் சரியான போதிய புரிதல் இல்லாதவர்களாக இருக்கின்றனர். குழந்தைகள் வீட்டில் பப்ஜி கேம் விளையாடுவது போன்று திரைப்படங்களை உருவாக்க விரும்புகின்றனர்.  ...

சமூக அக்கறை இல்லாதவரா? நடிகர் ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த்

Image
தமிழ் சினிமாவில் பலரும் கதாநாயகனாக நடித்து வந்தாலும் வெகு சிலரே மக்களின் அபிமான கதாநாயகர்களாக அறியப்படுகின்றனர்.  அவ்வாறு தமிழ் சினிமாவில் பெரிதாக ரசிகர் கூட்டத்தைக் கொண்ட பலர் இருந்தாலும் அவர்களில் முக்கியமானவராக கருதப்படுபவர் திரு ரஜினிகாந்த் அவர்கள்.  இவர் கடந்த பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருவதால் தலைமுறைகளை தாண்டி சூப்பர் ஸ்டாராக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். தமிழகத்தில் இவர் கூறிய கருத்துகளால் கடந்த காலங்களில் அரசியல் மாற்றமே உருவாகியுள்ளது. இவர் அரசியலில் வந்து குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று ஒரு தரப்பு மக்களால் நம்பப்பட்டது. அவர் மீது மக்களுக்கு அப்படி ஒரு அபிமானம் இருந்து வருகிறது.   ஆனால் அவர் தனக்கு அரசியல் சரிவராது என்பதும் அரசியலில் பல நேர்மை மற்ற வேலைகளும் குள்ளநரித்தனங்களும் செய்ய வேண்டியது இருக்கும் என்பதும் அதுமட்டுமல்லாது தன்னை கவிழ்க்க மிகப்பெரிய சாதிகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து பல அரசியல் கட்சிகள் மற்றும் முக்கிய புள்ளிகள் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்தார். அதில் பலரும் ரஜினி பயந்துவிட்டதாகவும் கோழை ...

விஜயின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

Image
 தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் தனது கட்சியின் பிரச்சார பயணத்தின் போது கரூரில் நடைபெற்ற துயரப் சம்பவத்திற்கு பின்னர் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் அமைதியாக இருக்கிறார். இந்நிலையில் கரூர் சம்பளத்திற்கு தார்மீக ரீதியில் விஜய் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஏனெனில் அவர் பிரச்சாரக் கூட்டத்திற்கு பல மணி நேரம் தாமதமாக வந்ததும் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யாததுமே இது போன்றதொரு பேரைச் சம்பவத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அது தவிர மற்ற பல காரணங்கள் இருந்தாலும் இது தமிழக வெற்றி கழகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி என்பதால் அவர்களுக்கே பொறுப்பு கூடுதல் என்பது அனைவரும் அறிந்தது. இந்த கரூர் சம்பவத்திற்கு பின் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பலரும் தலைமறைவாக உள்ளனர். அது மட்டுமல்லாது பலர் கட்சியை விட்டு வெளியேறி விட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இதன்பின் விஜயின் எதிர்காலம் என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது.  இனி விஜய் அவர்கள் அரசியலில் வேறு ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணியுடன் போட்டியிட்டால் மட்டுமே ஓரளவு வாக்குகளை பெற முடியும். எனவே அவர் ஏதாவது ஒரு அரசியல் கட்சியுடன் கூட்டணி வைக்க முடிவ...

ஸ்டாலின் சொல்வது உண்மை தான். தமிழ்நாடு அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.

Image
  ஸ்டாலின் சொல்வது உண்மை தான். தமிழ்நாடு அவுட் ஆப் கண்ட்ரோல் தான். சமீபத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு எப்போதுமே அவுட் ஆப் கண்ட்ரோல் தான் என்று தெரிவித்திருக்கிறார். நாம் தமிழ்நாடு அவுட் ஆப் கண்ட்ரோல் தான். தமிழக அரசு கடன் வாங்குவதில் அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.  இந்தியாவில் பல மாநிலங்களை விட தமிழக மலர்ந்த மாநிலமாக இருந்தாலும் நிர்வாக திறனற்ற தன்மையால் தமிழ்நாடு தற்போது கடன் வாங்குவதில் முதலிடம் வகிக்கிறது. மற்ற தமிழக அரசுகளை பார்க்கும் பொழுது ஸ்டாலின் அரசு அவுட் ஆப் கண்ட்ரோலாக கடன் வாங்குவது நன்றாக தெரிய வருகிறது. தமிழக அரசு தொழில் வளர்ச்சியும் அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.  ஸ்டாலின் தலைமை நான் ஆட்சியில் தமிழக அரசு ஸ்டெர்லைட் போன்ற நன்றாக இயங்கிக் கொண்டிருந்த ஆலைகளை பலத்தை தங்கள் செயல்வதற்காக மூடிவிட்டு தற்போது புதிய முதலீடுகளுக்காகபல நாடுகளுக்கு வேற எந்த முதலமைச்சரும் செல்லாத அளவிற்கு சென்று முதலீடு பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  திமுக அரசு கொடுத்த வாக்கு உறுதிகளை காப்பாற்றுவதிலும் அவுட் ஆப் கண்ட்ரோல் தான். திமுக அரசு கடந்த 2021 ஆம் ஆ...

ஹிந்தி திரை உலகுக்கு பாடம் புகட்டிய கார்த்திகேயா-2

Image
 ஹிந்தி திரை உலகுக்கு பாடம் புகட்டிய கார் த்திகேயா-2 இந்து மத உணர்வுகளை கிண்டல் செய்தும் இந்தியாவுக்கு எதிராக குற்றம் கூறுவதையும் வாடிக்கையாக கொ ண் ட பா லிவுட் நடிகர் அமீர்கானுக்கு பாடம் புகட்ட விரும்பிய வலதுசாரிகள் சமீபத்தில் வெளியான அமீர்கானின் லால் சிங் சத்தாவை புறக்கணிக்கும் படி #Boycott_Laal_Singh_Chaddha என்று சமூக வலை தளங்களில் கோரிக்கை வைத்தார்கள். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. லால்சிங் சத்தா படுதோல்வி அடைந்தது அமீர்கான் திரைப்பட வரலாற்றில் படுதோல்வி அடைந்த படங்களின் வரிசையில் முதல் இடத்தில் லால் சிங் சத்தாவையே கூற வேண்டும் என்கிற அளவிற்கு லால் சிங் சத்தா படுதோல்வி படமாகி விட்டது. பாலிவுட்டை தங்களின் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு இந்துக்களின் உணர்வுகளை கிண்டல் செய்து வந்த கான் நடிகர்களின் கரங்களில் .இருந்து பாலிவுட் விலகி இந்து மதம் மற்று ம் தேசியம் பேசும் வழிகளில் பயணிக்க ஆரம்பித்து இருக்கிறது என்பதற்கு ஆர்ஆர்ஆர், தி காஷ்மீர் பைல்ஸ் போன்ற சினிமாக்களின் வெற்றியை உதாரணமாக கூறலாம். இதை விட முக்கியமானது என்னவென்றால் தெலுங்கில் இருந்து இந்தியில் டப் செய்யப்பட்டு கடந்த வாரம் 13ஆம் ...