ஓடும் குதிரையில் பயணிக்கிறாரா ரஜினிகாந்த்?

 


தமிழ் சினிமா உலகின் முடி சூடா மன்னனாக விளங்கும் திரு ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே மிகப்பெரும் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களை அழைத்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது வழக்கமாகக் கொண்டுள்ளார்.

 தற்போது கமலஹாசன் இயக்கத்தில் திரு ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் ஒரு படம் உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்தன. அதை திரு சுந்தர் சி அவர்கள் இயக்குவதாகவும் தகவல்கள் பரவியது. அந்தப் படத்தின் கதை பற்றிய விவாதங்களும் நடந்து வந்ததாக கூறப்பட்டது.

 ஆனால் தற்போது திரு சுந்தர் சி அவர்கள் அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல்கள் வருகிறது.



 கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினிகாந்த் அவர்கள் பெரும் வெற்றி படங்களை கொடுத்த இளம் தலைமுறை இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வந்தார். காரணம் அவர்கள் இளம் தலைமுறை என்ன ஓட்டங்களை சரியாக புரிந்து வைத்து அதற்கேற்றார் போல் படங்களை உருவாக்குவார்கள் என்ற எண்ணத்தில் அப்படி செயல்பட்டதாக கூறப்படுகிறது.



 ஆனாலும் தற்போது வரை அவர் நடித்த படங்களில் சமீபத்திய படங்கள் பலவும் பெரிய வெற்றியை பெற முடியவில்லை. தற்போதைய இளம் தலைமுறை இயக்குனர்களை விட சிறந்த பல இயக்குனர்கள் தகுதி வாய்ந்தவர்கள் இருந்தும் அவர்களை இந்த திரையுலகம் ஏன் பயன்படுத்திக் கொள்வதில்லை என்பது தெரியவில்லை. பல புதியவர்கள் கூட நல்ல தரமான கதைகளுடன் வாய்ப்பு தேடி அலைந்தாலும் அவர்களையும் இந்த திரையுலகம் ஏன் கண்டுகொள்ளவில்லை என்பது தெரியவில்லை.


Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?